என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோலாட்ட அலங்காரத்துடன் கொலு தர்பார் காட்சி.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-8 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை (முழுவதும்)
நட்சத்திரம் : சித்திரை மாலை 4.34 மணி வரை பிறகு சுவாதி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் பிரம்மோற்சவம் ஆரம்பம். பெரிய சேஷ வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோலாட்ட அலங்காரத்துடன் கொலு தர்பார் காட்சி. குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் அலங்காரம். சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் மகேஸ்வரி விருஷப சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம், மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-வெற்றி
கடகம்-உண்மை
சிம்மம்-துணிவு
கன்னி-லாபம்
துலாம்- சுகம்
விருச்சிகம்-வரவு
தனுசு- தேர்ச்சி
மகரம்-பெருமை
கும்பம்-உவகை
மீனம்-நன்மை
- நீதிபதிகள் கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
- ஒட்டுமொத்த குடும்பமும் துன்புறுத்தப்படுவதுதான் அந்த வழக்கில் இருந்த முக்கியப் பிரச்னை.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "புல்டோசர் நடவடிக்கை" குறித்த தான் அளித்த தீர்ப்பு தனக்கு பெரும் திருப்தியை அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் வட மாநிலங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், சட்டவிரோத ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், மாநகராட்சிகளால் வீடுகள் இடிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக இஸ்லாமியர்களின் வீடுகள் குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கிடையே 2024 நவம்பர் 13 அன்று, நீதிபதிகள் கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, புல்டோசர் நடவடிக்கை சட்டபூர்வமானது அல்ல என்று தீர்ப்பளித்து அதற்கு நாடு தழுவிய வழிகாட்டுதல்களை வகுத்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் கல்விக்குழு ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் தலைமை நீதிபதி கவாய் பேசுகையில், "அந்தத் தீர்ப்பின் மையத்தில் மனிதத்தின் பிரச்னைகள் இருந்தன. ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக, ஒட்டுமொத்த குடும்பமும் துன்புறுத்தப்படுவதுதான் அந்த வழக்கில் இருந்த முக்கியப் பிரச்னை.
இந்தத் தீர்ப்பின் பெருமை எனக்கு அளிக்கப்பட்டாலும், அதற்கு இணையான பங்கு நீதிபதி விஸ்வநாதனுக்கும் உண்டு" என்று தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் நீதித்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தை விரைவுபடுத்துவதற்கும் தாம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
- சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நேற்று(செப்டம்பர் 23 ) தொடங்கியது. வரும் 29 ஆம் தேதி வரை கூட்டம் நடைபெற உள்ளது.
நேற்றைய கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 1 மணி நேரம் உரையாற்றினார்.
தனது உரையில், 'காலநிலை மாற்றம்' என்பது உலகில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய மோசடி.
கார்பன் தடம் (carbon footprints) என்பது தீய எண்ணம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஏமாற்று வேலை" என்று குற்றம் சாட்டினார்.
மேலும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பசுமை எரிசக்தி கொள்கைகள் ஐரோப்பாவை அழித்து வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
"சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கிறது.
அவர்களை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது.
திறந்த எல்லைகள் கொண்ட கொள்கைகள் ஐரோப்பாவை அழிவின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது. அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை இழந்து வருகின்றனர்" என்று டிரம்ப் தெரிவித்தார்.
தொடர்ந்து ஐநா அமைப்பு குறித்து விமரிசத்த டிரம்ப், "ஐ.நா.வின் நோக்கம் என்ன?. ஐநா, வெறும் கடுமையான வார்த்தைகளை கொண்ட கடிதங்களை மட்டுமே எழுதுகிறது. வெறுமையான வார்த்தைகள் போரைத் தீர்க்காது" என்று சாடினார்.
- கடந்த 23 மாதங்களாக, இஸ்ரேல் ஒவ்வொரு மணிநேரமும் ஒரு குழந்தையைக் கொன்றுள்ளது.
- இரண்டு, மூன்று வயது குழந்தைகள் மயக்க மருந்து இல்லாமல் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொதுச் சபையில் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆவேசமாக உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, "நம்மில் ஒவ்வொருவரின் கண் முன்னேயும், காசாவில் 700 நாட்களுக்கும் மேலாக இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த 23 மாதங்களாக, இஸ்ரேல் ஒவ்வொரு மணிநேரமும் ஒரு குழந்தையைக் கொன்றுள்ளது. இவை வெறும் எண்கள் அல்ல; ஒவ்வொன்றும் ஒரு அப்பாவியான உயிர்.
காசாவில் உள்ள மனிதாபிமான பேரழிவு நவீன வரலாற்றில் மிகப்பெரியது. இரண்டு, மூன்று வயது குழந்தைகள் மயக்க மருந்து இல்லாமல் குண்டுவெடிப்புகளால் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர்.
குழந்தைகள் பசி மற்றும் மருந்து பற்றாக்குறையால் இறக்கும் உலகில் அமைதி இருக்க முடியுமா?. கடந்த நூற்றாண்டில் கூட மனிதகுலம் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டதில்லை.
இது மனிதகுலத்தின் மிக மோசமான நிலை. காசாவில் நடப்பது போர் இல்லை. இது ஒரு படையெடுப்பு, ஒரு இனப்படுகொலை, ஒரு மிகப்பெரிய படுகொலை கொள்கை" என்று தெரிவித்தார்.
பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த எர்டோகன் மற்ற நாடுகளும் தாமதமின்றி செயல்பட வலியுறுத்தினார்.
காசாவில் உடனடியாக போர்நிறுத்தம், தடையற்ற மனிதாபிமான அணுகல் மற்றும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றை எர்டோகன் கோரினார்.
மேலும் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை காசா மற்றும் மேற்குக் கரைக்கு அப்பால் சிரியா, ஈரான், யேமன், லெபனான் மற்றும் கத்தாருக்கு விரிவுபடுத்தி, பரந்த பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக எர்டோகன் குற்றம்சாட்டினார்.
- இந்த அரசுத் துறைகள் ஏன் தடையில்லாச் சான்றிதழ்களை வழங்கவில்லை என புரியவில்லை.
- மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி மதிப்பில் ராமர் கோவில் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
1992 இல் இந்து அமைப்பு கும்பல்களால் உத்தரப் பிரதேச அயோத்தியில் அமைந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019 நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் அதற்கு பதிலாக வேறு இடத்தில் மசூதி கட்டுவதற்காக அயோத்தி மாவட்டத்தின் சோஹாவல் தாலுகாவில் உள்ள தன்நிபூர் கிராமத்தில், மாநில சன்னி மத்திய வக்பு வாரியத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, 2020 ஆகஸ்ட் 3 அன்று அப்போதைய மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா அந்த நிலத்தை சன்னி மத்திய வக்பு வாரியத்திடம் ஒப்படைத்தார்.
மசூதி அறக்கட்டளை, மசூதி மற்றும் பிற வசதிகள் கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு 2021 ஜூன் 23 அன்று அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்தது. அனால் அதன் பின் எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை.
இதுதொடர்பாக மத்திய பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவுக்கு கடந்த செப்டம்பர் 16 அன்று அயோத்தி மேம்பாட்டு ஆணையம் பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில், மசூதி அறக்கட்டளையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
பொதுப்பணித் துறை, மாசுக்கட்டுப்பாடு, சிவில் விமானப் போக்குவரத்து, நீர்ப்பாசனம், வருவாய், நகராட்சி, மாவட்ட ஆட்சியர் மற்றும் தீயணைப்புத் துறை போன்றவற்றிலிருந்து தடையில்லாச் சான்றிதழ்கள் பெறப்படாததைக் காரணம் காட்டி இந்த நிராகரிப்பு நடந்துள்ளது.
மேலும், இந்த விண்ணப்பம் மற்றும் ஆய்வு கட்டணமாக மசூதி அறக்கட்டளை ரூ. 4,02,628 செலுத்தியுள்ளதாகவும் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூ
இந்த நிராகரிப்பு குறித்து மசூதி அறக்கட்டளையின் செயலாளர் அதர் ஹுசைன் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் மசூதிக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது.
உத்தரபிரதேச அரசு நிலத்தை ஒதுக்கியது. இந்த அரசுத் துறைகள் ஏன் தடையில்லாச் சான்றிதழ்களை வழங்கவில்லை, மேம்பாட்டு ஆணையம் ஏன் மசூதியின் திட்டத்தை நிராகரித்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று தெரிவித்தார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி மதிப்பில் ராமர் கோவில் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில் அதற்கு மாற்றாக வழங்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதற்கு உ.பி. பாஜக அரசு சார்பில் மெத்தனம் காட்டப்படுவது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
- பல செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளும் இதை வெளியிட்டன.
மகரிஷி வால்மீகி வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தோன்றும் ஒரு திரைப்படத்தின் டிரைலர் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.
இந்த வீடியோ வேகமாகப் பரவிய நிலையில், பல செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளும் இதை செய்தியாக வெளியிட்டன.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து தனது சமூக வலைதளத்தில் அக்ஷய் குமார் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், "நான் மகரிஷி வால்மீகி வேடத்தில் நடித்ததாகக் காட்டப்படும் சில ஏஐ வீடியோக்களை நான் சமீபத்தில் பார்த்தேன்.
அந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை என்றும், ஏஐ-யைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்றும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், சில செய்தி சேனல்கள் இதைச் சரிபார்க்காமல் செய்தி என்று எடுத்துக்கொண்டன" என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது.
- சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலகில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது.
தொடர்ந்து மோதலைத் தூண்டுவது போல, இந்த அமைப்பில் சிலர் ஒருதலைப்பட்சமாக பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க முற்படுகிறார்கள்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் வெகுமதியாகும். இது அக்டோபர் 7 உட்பட இந்த பயங்கரமான அட்டூழியங்களுக்கான வெகுமதியாக இருக்கும்.
அமைதியை விரும்புபவர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய குரல் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அண்மையில் அறிவித்த நிலையில் டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.
தொடர்ந்து சட்டவிரோத குடியேற்றம் குறித்து பேசிய டிரம்ப்,சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கிறது.
அவர்களை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது" என்று தெரிவித்தார்.
- 1967 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்லைகள் தீர்மானிக்கப்பட வேண்டும்.
- ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது.
பாலஸ்தீன பிரச்னையை முதன்மையாக கொண்டு இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உரையாற்றினார்.
அவர் கூறியதாவது, "தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் பரிசு அல்ல, மாறாக அது அவர்களின் உரிமை.
காசா பிரச்சினையைத் தீர்க்க இரு நாடுகள் தீர்வுதான் ஒரே வழி. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பரஸ்பர ஒத்துழைப்புடன் அண்டை நாடுகளாக வாழ வேண்டும்.
1967 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்லைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு நாடுகள் தீர்வு இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி இருக்காது" என்று தெரிவித்தார்.
நடப்பு ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, அன்டோரா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.
முன்னதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா,போர்ச்சுகல் ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தன.
இதன் மூலம், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
இது காசாவில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது இராஜதந்திர அழுத்தத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அதில் பலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- துர்கா பூஜைக்கான பந்தல்கள் மற்றும் சிலைகள் நீரில் மூழ்கியுள்ளன.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் விமான, ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, துர்கா பூஜை விடுமுறை முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. துர்கா பூஜைக்கான பந்தல்கள் மற்றும் சிலைகள் நீரில் மூழ்கியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 251.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு பதிவான அதிகபட்ச மழைப்பொழிவாகும்.
இந்திய வானிலை ஆய்வு மையம்அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் 98 மிமீ மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது மேகவெடிப்பு இல்லை என்றும் வானிலை மையம் தெளிவுபடுத்தியுள்ளது.
- இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
- டாசன் ஷனகா முதல் பந்தில் டக் அவுட்டானார்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
சூப்பர் 4 சுற்றின் 3வது ஆட்டம் அபுதாபியில் நேற்று நடந்தது. இதில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆட்டத்தின் 2வது பந்தில் குசால் மெண்டிஸ் டக் அவுட்டானார்.
பதும் நிசங்கா 8 ரன்னிலும், குசால் பெரேரா 15 ரன்னிலும், சரித் அசலங்கா 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டாசன் ஷனகா முதல் பந்தில் டக் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார்.
இறுதியில், இலங்கை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 18 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- அவர்கள் தங்களுக்கு எதிராகவே போருக்கு நிதியளிக்கிறார்கள்.
- அமெரிக்கா மிகவும் கடுமையான வரிகளை விதிக்க முழுமையாக தயாராக உள்ளது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது.
இதில் உக்ரைன் போர் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், " ரஷிய எண்ணெய் வாங்குவதை தொடர்ந்து செய்வதன் மூலம் சீனா மற்றும் இந்தியா தான் நடந்து வரும் போருக்கு முக்கிய நிதியுதவி அளிக்கின்றன.
ஆனால் நியாயமற்ற வகையில், நேட்டோ நாடுகளும் ரஷ்ய எரிசக்தி பொருட்களை அதிகம் துண்டிக்கவில்லை. அவர்கள் தங்களுக்கு எதிராகவே போருக்கு நிதியளிக்கிறார்கள்.
ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு ஒப்பந்தம் செய்ய தயாராக இல்லை என்றால், அமெரிக்கா மிகவும் கடுமையான வரிகளை விதிக்க முழுமையாக தயாராக உள்ளது. என்று அவர் கூறினார்.
அந்த வரிகள் பயனுள்ளதாக இருக்க, ஐரோப்பிய நாடுகள், இங்கு கூடியிருக்கும் நீங்கள் அனைவரும், அதே நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எங்களுடன் இணைய வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ரஷிய எண்ணெய் வாங்குவதற்கான தண்டனை நடவடிக்கையாக இந்திய ஏற்றுமதிகளுக்கான வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொருவரும் நான் இந்த சாதனைகள் ஒவ்வொன்றிற்கும் நோபல் அமைதிப் பரிசு பெற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
- ஐக்கிய நாடுகள் சபை இதைச் செய்யாததால் நான் இந்த விஷயங்களைச் செய்ய வேண்டியிருந்தது மிகவும் வருத்தமானது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "வெறும் ஏழு மாத காலப்பகுதியில், நான் ஏழு முடிவற்ற போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன்.
இதில் கம்போடியா மற்றும் தாய்லாந்து, கொசோவோ மற்றும் செர்பியா, காங்கோ மற்றும் ருவாண்டா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, மற்றும் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகியவை அடங்கும்.
எந்த அதிபரும், பிரதமரும், அல்லது வேறு எந்த நாடும் இதைப் போல் எதையும் செய்ததில்லை. நான் இதை வெறும் ஏழு மாதங்களில் செய்தேன். இது இதற்கு முன் நடந்ததில்லை.
இதைச் செய்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஐக்கிய நாடுகள் சபை இதைச் செய்யாததால் நான் இந்த விஷயங்களைச் செய்ய வேண்டியிருந்தது மிகவும் வருத்தமானது.
ஒவ்வொருவரும் நான் இந்த சாதனைகள் ஒவ்வொன்றிற்கும் நோபல் அமைதிப் பரிசு பெற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஆனால் எனக்கு, உண்மையான பரிசு, முடிவில்லாத போர்களில் கொல்லப்படுவதற்கு பதிலாக தங்கள் தாய்மார்கள் மற்றும் தந்தையர்களுடன் வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் தான்"என்று தெரிவித்தார்.






