என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    • இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை போலீசார் தடுக்க வேண்டும்.

    சென்னை:

    கரூர் துயரம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சிக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கரூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், த.வெ.க. தலைவர் விஜய், குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. அவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால்தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும்.

    இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காதபடி, அனைத்து அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க வேண்டும். நெறிமுறைகளை மீறும் பட்சத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட கட்சி தலைவர், ரோடு ஷோவில் பேசுவோர் மீதும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை போலீசார் தடுக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் 'ரோடு ஷோ' நடத்த அனுமதி வழங்கக்கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும். கரூர் துயர சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி என்.செந்தில் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

    • மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்து மிரட்டல் விடுத்தவர் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கவர்னர் மாளிகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. தலைமை அலுவலகம், நடிகர் எஸ்.வி.சேகர் இல்லத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும், தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • 4 ஆண்டுகளாக இடைக்கால அரசு நடத்தி வரும் தாலிபான்கள் தங்கள் ஆட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கோரி வருகின்றனர்.
    • ஐ.நாவின் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் தடைகள் காரணமாக, முத்தாகிக்கு சர்வதேச பயணத்திற்கு சிறப்பு அனுமதி தேவைப்பட்டது.

    2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் முதல் முறையாக, அதன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமாக வருகை தருகிறார்.

    4 ஆண்டுகளாக இடைக்கால அரசு நடத்தி வரும் தாலிபான்கள் தங்கள் ஆட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கோரி வருகின்றனர்.

    இந்நிலையில் முத்தாகி அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியா வருகின்றார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

    ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான் அமைச்சர் முத்தாகி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஐ.நாவின் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் தடைகள் காரணமாக, முத்தாகிக்கு சர்வதேச பயணத்திற்கு சிறப்பு அனுமதி தேவைப்பட்டது.

    சமீபத்தில் முத்தகியின் சில பயணங்களுக்கு ஒப்புதல் மறுக்கப்பட்ட நிலையில் இந்த முறை இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
    • புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பவுர்ணமி வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11.49 மணிக்கு தொடங்கி மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9.53 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் மழை பெய்தது.

    தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் மழை பெய்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • விபத்துகள் நடந்தால் உரிமையாளர்களை தமிழக அரசு கைது செய்வது வழக்கம் தான்.
    • விஜய் வீட்டில், அலுவலகத்தில் வழக்கம் போல் கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன.

    கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கைது செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், விஜய் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற திருமாவளவனின் கருத்தை வரவேற்கிறேன்.

    விஜயை பார்ப்பதற்காக வந்ததால் தான் 41 பேர் நெரிசலில் உயிரிழந்தனர். விபத்துகள் நடந்தால் உரிமையாளர்களை தமிழக அரசு கைது செய்வது வழக்கம் தான். விஜய் வீட்டில், அலுவலகத்தில் வழக்கம் போல் கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன. வெளிநாட்டில் இருந்து ராகுல் கேட்டு கொண்டதால் விஜய் மீது நடவடிக்கை இல்லையா?. ராகுல் குறித்து வந்த செய்தி தொடர்பாக முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • இந்தியா போன்ற ஒரு நாட்டின் மக்கள் அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள்.
    • அமெரிக்கா ரஷியாவிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்குகிறது.

    ரஷியாவுடனான எரிசக்தி உறவுகளைத் துண்டிக்க இந்தியா, சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவை அதிபர் புதின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ரஷியாவின் சோச்சி (Sochi) நகரில் நேற்று நடைபெற்ற வால்டாய் மன்ற (Valdai Forum) நிகழ்வில் அந்நாட்டு அதிபர் புதின் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "இந்தியா நமது எரிசக்தி விநியோகங்களை மறுத்தால், அது ஒரு குறிப்பிட்ட இழப்பைச் சந்திக்கும். நிச்சயமாக, இந்தியா போன்ற ஒரு நாட்டின் மக்கள் அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள். 

    தலைகுனிவை ஏற்படுத்தும் முடிவுகளை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். மேலும், பிரதமர் மோடியை நான் அறிவேன். அவர் ஒருபோதும் இதுபோன்ற எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார்

    அமெரிக்காவின் தண்டனை வரிகளால் இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகள் ரஷியாவில் இருந்து எண்ணை இறக்குமதியால் சமப்படுத்தப்படும்.

    இந்தியா இறக்குமதி செய்வது முற்றிலும் ஒரு பொருளாதார கணக்கீடு. இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தினால் 9 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும்.

    ரஷியாவின் வர்த்தக பங்காளிகளுக்கு அதிகவரிகள் விதிக்கப்படுவது உலகளாவிய விலைகளை உயர்த்தும். இத்தகைய நடவடிக்ககைள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்.

    மேற்கத்திய நாடுகள் தடை விதித்த போதிலும் நேர்மையான பொருளாதார வளரர்ச்சியை தக்க வைத்து கொள்வதே ரஷியாவின் நோக்கமாகும்.

    உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளை வங்குவது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். போர்க்களத்தில் எங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்தார். 

    மேலும் அமெரிக்கா ரஷியாவிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்கும் அதே வேளையில், மற்ற நாடுகள் ரஷிய எரிசக்தி பொருட்களை வாங்குவதை நிறுத்துமாறு அழைப்பு விடுப்பதாக புதின் சுட்டிக் காட்டினார்.

    2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்காவுக்கு சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்புடைய யுரேனிய விநியோகம் இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு 800 மில்லியனுக்கும் அதிகமாக கூட இருக்கலாம் எனவும் புதின் தெரிவித்தார்.

    "அமெரிக்கர்கள் எங்கள் யுரேனியத்தை வாங்குகிறார்கள், ஏனெனில் அது லாபகரமானது, அவர்கள் சரியானதைச் செய்கிறார்கள். இந்த விநியோகங்களை சீராகவும் நம்பகத்தன்மையுடனும் தொடர நாங்கள் தயாராக உள்ளோம்." என்று புதின் மேலும் கூறினார். 

    ரஷியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில் இந்த கருத்து வந்துள்ளது.    

    • மத விழாவுக்காகக் கூடி இருந்த பக்தர்களின் பாரம் தாங்காமல் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரச் சாரம் இடிந்து விழுந்தது.
    • இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் நசுங்கி இறந்ததாக காவல்துறை தெரிவித்தது.

    எத்தியோப்பியாவில் தேவாலயத்தில் ஏற்பட்ட விபத்தில் 36 பேர் பலியாகினர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அம்ஹாரா பிராந்தியத்தின் மின்ஜார் ஷெங்கோரா வோரெடா, வடக்கு ஷேவா மண்டலத்தில் உள்ள அரெர்டி செயின்ட் மேரி தேவாலயத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

    புதன்கிழமை, மத விழாவுக்காகக் கூடி இருந்த பக்தர்களின் பாரம் தாங்காமல் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரச் சாரம் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

    இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் நசுங்கி இறந்ததாகவும், ஓரங்களில் இருந்தவர்கள் வெளியே ஓடி காயங்களுடன் உயிர்தப்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    காயமடைந்தவர்களில் சிலர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.   

    • சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் தேர் பவனி.
    • ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் புஷ்ப யாகம் சாற்றுமுறை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-17 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : ஏகாதசி மாலை 3.26 மணி வரை பிறகு துவாதசி மறுநாள் மதியம் 2.38 மணி வரை

    நட்சத்திரம் : திருவோணம் காலை 7.22 மணி வரை பிறகு அவிட்டம் மறுநாள் காலை 7.22 மணி வரை

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி

    இன்று சர்வ ஏகாதசி. துளசி கவுரி விரதம். சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் தேர் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பவனி. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு. ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் புஷ்ப யாகம் சாற்றுமுறை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-புகழ்

    ரிஷபம்-உயர்வு

    மிதுனம்-ஆராய்ச்சி

    கடகம்-ஆசை

    சிம்மம்-செலவு

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-ஜெயம்

    தனுசு- இன்பம்

    மகரம்-மாற்றம்

    கும்பம்-துணிவு

    மீனம்-பொறுப்பு

    • யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.
    • டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

    இங்கிலாந்து நாட்டின் வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத ஆலயம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.

    உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குற்றவாளியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.

    அவரிடமிருந்து வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வெடிகுண்டு அங்கியை அணித்திருந்ததாக தெரிகிறது. வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.

    சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி, "திரும்பிப் போங்கள், அவர் ஒரு வெடிகுண்டை வைத்திருக்கிறார், விலகிச் செல்லுங்கள்" என்று பொதுமக்களை நோக்கி சத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் குற்றவாளியை போலீசார் சுட்டுக்கொள்ளும் வீடியோவும் வைரலாகி வருகிறது. 

    ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

    இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக இங்கிலாந்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    ரிஷபம்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    மிதுனம்

    எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மறைமுக எதிர்ப்பால் மனக்கவலை அதிகரிக்கும். உறவினர்கள் உதவி செய்வதாகச் சொல்லி கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.

    கடகம்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பாகப் பிரிவினை முடிவிற்கு வரும். உறவினர்கள் வழியில் விரயமுண்டு. தொழில் ரீதியாக வரும் தொலைபேசித் தகவல் மகிழ்ச்சி தரும்.

    சிம்மம்

    பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். பூர்வீக சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

    கன்னி

    இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். தொழிலில் கூட்டாளிகள் அனுசரிப்புக் குறையும். குடும்பத்தினர்கள் உங்களைப் பற்றிக் குறை கூறுவர். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.

    துலாம்

    மகிழ்ச்சி கூடும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    விருச்சிகம்

    மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    தனுசு

    கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். கல்யாணப் பேச்சுக்கள் முடிவாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். வருமானம் உயரும்.

    மகரம்

    உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். சேமிப்பு உயரும். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

    கும்பம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதி காரிகள் வழங்குவர்.

    மீனம்

    திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு கூடும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். இடம், பூமி வாங்கும் முயற்சி பலன்தரும்.

    ×