என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஜீனி படத்தை அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
- ரவி மோகனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜீனி. இப்படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகிய 2 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் கடந்தாண்டு வெளியானது. அதில் அலாவுதீன் பூதத்தைப்போல் ரவி மோகன் இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்படத்தை அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிக்கிறது.
ஃபேண்டசி மற்றும் காமெடி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் ரவி மோகன் திரைப்பயணத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படமாகும்.
இந்நிலையில், ஜீனி படத்தின் அப்டி அப்டி பாடல் இன்று இரவு 8.10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்களை சந்தித்து நலம் விசாரிக்க வந்தேன்.
- வைகோ அய்யா அவர்களும் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதையடுத்து இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்களை சந்தித்து நலம் விசாரிக்க வந்தேன். விசாரிப்பதற்கு முன்பே நல்ல செய்தி வந்தது. இன்று மாலை அவரை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள். அவருடன் பேசிக்கொண்டு இருந்தேன். நலமாக இருக்கிறார்.
வைகோ அய்யா அவர்களும் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கும் ஜூரம் தணிந்துவிட்டதாக சொன்னார்கள். அவருடைய மகனிடம் நலம் விசாரித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரஜினி - கமல் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போகிறார்கள்
- ரஜினி - கமல் படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்று கூறப்பட்டது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.
இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.
கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கு, பிளானும் இருக்கு. ஆனால் அதற்கான இயக்குநர், கதை, கதாபாத்திரம் இன்னும் ரெடி ஆகல. ஆனதும் நடிப்பேன் என்றார்.
இதன்மூலம் இப்படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்று உறுதியானது. இதனால் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது.
இதனிடையே கோமாளி, லவ் டுடே படங்களை இயக்கி புகழ்பெற்ற பிரதீப் ரங்கநாதன் தான் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கப்போகிறார் என்று இணையத்தில் தகவல் தீ போல பரவியது.
இந்நிலையில், இந்த தகவலை பிரதீப் ரங்கநாதன் மறுத்துள்ளார். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை நான் இயக்கவில்லை. தற்போது நடிப்பில் மட்டும் தான் நான் கவனம் செலுத்தி வருகிறேன். அதே சமயம் ரஜினி - கமல் நடிக்கும் படத்தை இயக்கம் வாய்ப்பு எனக்கு வந்ததா? என்பதை பற்றி எதையும் என்னால் இப்போது கூறமுடியாது" என்று தெரிவித்தார்.
இதன்மூலம் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கப்போகும் இயக்குனர்களின் பட்டியலில் பிரதீப் ரங்கநாதனும் இருந்துள்ளார் என்பது அவரது பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது.
- இன்று காலை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
- ராமதாஸ் சிகிச்சை பெறும் தகவல் இமயமலையில் ஆன்மீக சுற்றுப் பயணம் செய்து வரும் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று இரவு ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இன்று காலை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் சிகிச்சை பெறும் தகவல் இமயமலையில் ஆன்மீக சுற்றுப் பயணம் செய்து வரும் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ரஜினிகாந்த் உடனடியாக டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் விரைவில் பூரண நலம் பெற வேண்டிக்கொள்வதாகவும் டாக்டர் ராமதாசிடம் ரஜினி தெரிவித்தார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.
- ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டிலும் மிட்சேல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை டி20 தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 டி20 தொடரில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அரவிக்கப்ட்டு விட்டது. ஒருநாள் தொடரில் சுப்மன் கில் கேப்டனாகவும் டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டிலும் மிட்சேல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:-
மிட்ச் மார்ஷ் (C), சேவியர் பார்ட்லெட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஓவன், கூப்பர் கோனொலி, மேத்யூ ரென்ஷா, பென் டுவார்ஷுயிஸ், மேட் ஷார்ட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், கேமரான் கிரீன், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசல்வுட்,
டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:-
மிட்ச் மார்ஷ் (C) சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குஹ்னெமன், மிட்செல் ஓவன், மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா,
- அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது, எதிரியும் கிடையாது.
- அரசியல் என்பது காவல்துறை பிடிக்கும்போது யு-டர்ன் போட்டு திரும்பி செல்வது போன்றது.
விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்தில் வேல்பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு விசுவ ஹிந்து பரிஷத் வடக்கு தமிழக தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு வேல் பூஜையை தொடங்கி வைத்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடு நலம்பெற வேண்டி அக்டோபர் 25, 26, 27 ஆகிய கந்தசஷ்டி திருவிழா நாட்களில் ஆயிரம் கோவில்களில் கந்த சஷ்டி பாராயணம் பாடப்படுகிறது. மேலும் வேல் பூஜை, கோ பூஜை போன்ற பூஜைகளும் நடைபெறுகிறது.
அதற்கு முன்னோட்டமாக இன்று ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் வேல் கொடுத்து, வேல் பூஜை செய்தேன்.
கரூர் சம்பவத்தால் விஜய் மிகவும் வேதனையில் இருப்பார் என்பது மட்டும் எனக்கு தெரியும்.

எந்த ஒரு தலைவரும் அவர்கள் கூட்டத்திற்கு வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது.
41 பேர் இறந்தது விஜய்யின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு வாழ்க்கையில் ஒரு வடுவாக நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் என்பது என்னுடைய கருத்து.
அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது, எதிரியும் கிடையாது ஜனவரிக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது. அரசியல் என்பது காவல்துறை பிடிக்கும்போது யு-டர்ன் போட்டு திரும்பி செல்வது போன்றது.
கடவுள் முன் எல்லோரும் சமம், நாம் மனிதர்கள், அணுக்கள், துகள்கள் தான், எல்லோரும் சமத்துவமாக இருக்க வேண்டுமென்றால் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது சூப்பராக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமெரிக்காவிற்கு நடுத்தர மற்றும் கனரக லாரிகளை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடுகளாக மெக்சிகோ, கனடா உள்ளன.
- 2023-24ம் நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் வாகன உதிரிபாக ஏற்றுமதி 6.79 பில்லியன் டாலராக இருந்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். பல பொருட்களின் இறக்குமதிக்கு தொடர்ந்து வரிகளை விதித்து வருகிறார்.
சமீபத்தில் சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50 சதவீத வரியும், பர்னிச்சருக்கு 30 சதவீத வரியும் விதித்தார். மேலும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில் லாரிகள் இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதிப்படுவதாக டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். டெலிவரி லாரிகள், குப்பை லாரிகள், பொது பயன்பாட்டு லாரிகள், போக்குவரத்து மற்றும் பள்ளி பஸ்கள், டிராக்டர்-டிரெய்லர் லாரிகள், கனரக தொழில் வாகனங்கள் ஆகியவை இந்த வரி விதிப்புக்குள் வரும்.
அமெரிக்காவிற்கு நடுத்தர மற்றும் கனரக லாரிகளை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடுகளாக மெக்சிகோ, கனடா உள்ளன. டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் இந்த இரு நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.
2023-24ம் நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் வாகன உதிரிபாக ஏற்றுமதி 6.79 பில்லியன் டாலராக இருந்தது. இந்த புதிய வரி விதிப்பால் இந்திய வாகன உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு தான் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
- தனிப்படையினர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
- புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று முன்ஜாமீன் கிடைக்குமா என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
புதுடெல்லி:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந்தேதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 29-ந்தேதி திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக உள்ளனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தகவலும் வெளியாகவில்லை.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் மதுரை ஐகோர்ட்டு அமர்வில் கடந்த 3-ந்தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிராமன் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. முன் ஜாமீன் மனு மீதான விசாரணையில் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடுகிறார். இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று முன்ஜாமீன் கிடைக்குமா என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ஸ்ரீசைலம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை விளக்குவதற்காக 3 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16-ந்தேதி வருகிறார். பின்னர் கர்னூலில் உள்ள டிரோன் நகரத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து ஸ்ரீசைலம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இதில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன்கல்யாண் கலந்து கொள்கின்றனர்.
ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை விளக்குவதற்காக 3 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். பிரதமர் வருகை குறித்து நேற்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஓர்வக்கல் மண்டலம் நன்னூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மைதானத்தை அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் பிரதமரின் சிறப்பு திட்ட அதிகாரி வீரபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வரும் தங்கம் விலை சீரான இடைவெளியில் இதுவரை கண்டிராத புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
- வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.
அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது. தங்கத்துக்கான தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே செல்கிறது.
தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வரும் தங்கம் விலை சீரான இடைவெளியில் இதுவரை கண்டிராத புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த மாதம் 6-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்துக்கும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்துக்கும் விற்பனையானது. அதன் பின்னரும் தங்கம் விலை ஓய்வில்லாமல், தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது.
இதையடுத்து அதே மாதம் 9-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.81 ஆயிரத்தையும், 16-ந் தேதி ரூ.82 ஆயிரத்தையும், 22-ந் தேதி ரூ.83 ஆயிரத்தையும், 23-ந் தேதி ரூ.85 ஆயிரத்தையும், 29-ந் தேதி ரூ.86 ஆயிரத்தையும், கடந்த 1-ந் தேதி ரூ.87 ஆயிரத்தையும் கடந்தது. ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை தொடர்ந்து மேல்நோக்கியே நிற்காமல் சென்றுகொண்டிருக்கிறது.
கடந்த 4-ந் தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 950-க்கும், ஒரு சவரன் ரூ.87 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது 5-ந் தேதியும் மாற்றமின்றி தொடர்ந்தது.
நேற்று காலையில் அதிரடியாக ரூ.110 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 60-க்கும், ரூ.880 அதிகரித்து சவரன் ரூ.88 ஆயிரத்து 480-க்கும் தங்கம் விற்பனையானது. மாலையில் மேலும் ரூ.65 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 125-க்கும், ரூ.520 அதிகரித்து சவரன் ரூ.89 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்ந்து முதல் முறையாக ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்தை கடந்து சவரன் ரூ.89 ஆயிரத்தை தொட்டு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியிருப்பது இல்லத்தரசிகளுக்கு கடுமையான அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600
06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000
05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-10-2025- ஒரு கிராம் ரூ.167
06-10-2025- ஒரு கிராம் ரூ.167
05-10-2025- ஒரு கிராம் ரூ.165
04-10-2025- ஒரு கிராம் ரூ.165
03-10-2025- ஒரு கிராம் ரூ.162
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- பத்ரிநாத் சன்னதியில் பிரசாதம் வழங்கப்பட்டது.
- புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது.
அந்த வகையில், தற்போது ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் செல்வதாகவும், அதனை தொடர்ந்து பத்ரிநாத்திலிருந்து பாபா குகைக்கு செல்லும் ரஜினிகாந்த் ஒரு வாரம் அங்கு தங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார். முன்னதாக, பத்ரிநாத் கோவிலுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பத்ரிநாத் சன்னதியில் பிரசாதம் வழங்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






