பிரதமர் மோடி 16-ந்தேதி ஆந்திரா வருகை: டிரோன் நகரத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்

ஸ்ரீசைலம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை விளக்குவதற்காக 3 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி 16-ந்தேதி ஆந்திரா வருகை: டிரோன் நகரத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்
Published on

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16-ந்தேதி வருகிறார். பின்னர் கர்னூலில் உள்ள டிரோன் நகரத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து ஸ்ரீசைலம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இதில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன்கல்யாண் கலந்து கொள்கின்றனர்.

ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை விளக்குவதற்காக 3 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். பிரதமர் வருகை குறித்து நேற்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஓர்வக்கல் மண்டலம் நன்னூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மைதானத்தை அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் பிரதமரின் சிறப்பு திட்ட அதிகாரி வீரபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com