என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பாபர் அசாமின் 'ஸ்டிரைக் ரேட்' திருப்திகரமாக இல்லை.
- நமீபியாவுக்கு எதிரான போட்டியின் போது பாபர் அசாம் அவரது வழக்கமான 4-வது இடத்தில் களமிறக்கப்படவில்லை.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றுகள் இன்று தொடங்குகிறது. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேப்டன் உடனான சண்டை மற்றும் பாபர் அசாமின் பேட்டிங் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியின் போது, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா மற்றும் மைக் ஹெசன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் சல்மான் அகா ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டிலை கீழே வீசுவது போன்ற காட்சிகள் இருந்தன.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வீடியோவை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். சல்மான் அகா அவுட் ஆன விரக்தியில் தான் பாட்டிலை வீசினார். எங்களுக்கிடையே எந்த மோதலும் இல்லை என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதே போட்டியில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் அவரது வழக்கமான 4-வது இடத்தில் களமிறக்கப்படவில்லை.
பாபர் அசாம் குறித்து கூறியதாவது:-
பாபர் அசாமின் 'ஸ்டிரைக் ரேட்' திருப்திகரமாக இல்லை என்றும், அவர் இன்னிங்ஸை முடித்துக் கொடுக்கும் சிறந்த வீரர் அல்ல என்றும் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
- மாநாட்டு திடல் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது.
திருச்சி:
தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.
தி.மு.க-காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க-பா.ஜ.க. தலைமையில் மற்றொரு அணியும், தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைத்தோ அல்லது தனியாகவோ களமிறங்குகிறது. இதில் வழக்கம்போல் தனித்த அடையாளத்துடனும், உறுதியான கொள்கை நிலைப்பாட்டுடன் நாம் தமிழர் கட்சி சீமான் தனித்து களம் காண்கிறார். ஆகவே தமிழக அரசியல் களத்தில் நான்குமுனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற தலைப்பில் பிரமாண்ட மாநாடு திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டை முன்னிட்டு ஆலம்பட்டி புதூரில் இருந்து திருச்சி மாநகர் வரை சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்சி கொடிகள், தோரணங்கள், பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலானோர் குடும்பம் குடும்பமாக வந்தனர்.
பின்னர் அவர்கள் தலைவர்களின் பிரம்மாண்ட கட்டவுட்டுகள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாநாடு சரியாக மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான மேடை 200 அடி நீளம், 64 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மொழிப்போர் தியாகிகள், தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்கள், தமிழுக்காக போராடியர்கள் என மொத்தம் 570 தலைவர்களின் பதாகைகள் மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் நிறுத்த 47 ஏக்கரில் பிரமாண்ட பார்க்கிங் வசதி, 38 மாவட்ட நிர்வாகிகள் தனித்தனியாக அமர இருக்கைகளுடன் கேபின்கள், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் அமர தனி கேபின், வெளிநாட்டவர்கள் அமர தனி இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டு திடல் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது.
ஒயிலாட்டம், கரகாட்டம், பரதம் பறை போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இரண்டு மணி நேரம் நடைபெறுகிறது. அதன் பின்னர் மாலை 6 மணி அளவில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடியேற்றி வைக்கிறார். அதன் பின்னர் மாலை 6.15 மணியளவில் அவரது தாய் அன்னம்மாள், மனைவி கயல்விழி மற்றும் நாம் தமிழர் கட்சியின் பெண் நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார்கள்.
நிறைவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுச்சி உரை ஆற்றுகிறார். அப்போது பிரம்மாண்ட மேடையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 117 ஆண்கள், 117 பெண்கள் என மொத்தம் 234 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்துகிறார்.
இந்த தேர்தலில் சீமான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான காரைக்குடியில் களமிறங்கும் தகவலையும் வெளியிடுகிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 17 சதவீத வாக்குகளை காரைக்குடி அவருக்கு பெற்றுத்தந்தது. ஆகவே இந்த முறை காரைக்குடியில் வெற்றி கொடியை நாட்ட வேண்டும் என அவர் திட்டமிட்டு அங்கு களம் காண்கிறார்.
தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இருந்த காலத்தில் அரசியலுக்கு வந்து தனக்கான தனி இடத்தை பெற்றிருப்பவர் சீமான். ஒவ்வொரு தேர்தலிலும் தனக்கான வாக்கு வங்கியை உயர்த்திக் காண்பித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தலில் அடுத்த பாய்ச்சலாக மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு அமையும் என்பதில் சீமான் உறுதியாக உள்ளார். முன்னதாக மாநாட்டில் பங்கேற்பதற்காக சீமான் நேற்று இரவு திருச்சி வருகை தந்தார்.
- சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ்.
- மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன்.
சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி.
அடிபட்டால் அரற்றவும், உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ்.
அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம்.
மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன்.
தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2007ம் ஆண்டு ரொனால்டோவை பிரிந்தபோது அவரைப் பற்றி எதிர்மறையாக பேச எனக்கு நிறைய பணம் கொடுத்தனர்.
- ரொனால்டோ குறித்த எந்த எதிர்மறையான கருத்தையும் சொல்ல முடியவில்லை.
சென்னை:
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பிரிட்டிஷ் நடிகையும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முன்னாள் காதலியுமான ஜெம்மா அட்கின்சன், ரொனால்டோவை பற்றி மோசமாக பேச தனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறி உள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "2007ம் ஆண்டு ரொனால்டோவை பிரிந்தபோது அவரைப் பற்றி எதிர்மறையாக பேச எனக்கு நிறைய பணம் கொடுத்தனர். ஆனால் நான் அதை விரும்பவில்லை. ரொனால்டோ குறித்து எந்த எதிர்மறையான கருத்தையும் சொல்ல முடியவில்லை" என்றார்.
தற்போது ஜெம்மா அட்கின்சன், பிரபல நடனக் கலைஞர் கோர்கா மார்க்வெஸ் என்பவரை மணந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு மியா மற்றும் தியாகோ என இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டது. அதாவது சிறுநீரில் ரத்தம் வெளியேறியது.
- அலட்சிய சிகிச்சை பற்றிய விவரத்தை அறிந்ததும் டாக்டர்கள் பதற்றமடைந்தனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா புன்னபுரா பகுதியை சேர்ந்தவர் உஷா ஜோசப் (வயது 51). இவர் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உஷாவுக்கு, கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அதன் பிறகு வீடு திரும்பிய நாளில் இருந்து வயிற்று வலி இருந்தது. பல ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குறையவில்லை. அதே சமயத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.
ஆண்டு கணக்கில் தொடர்ந்து வலி மாத்திரை சாப்பிட்டு வந்ததால் அந்த பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டது. அதாவது சிறுநீரில் ரத்தம் வெளியேறியது.
இதனால் பயந்து போன அவர் சிறுநீரக மருத்துவரை பார்த்தார். அப்போது எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனை முடிவில் தான் அதிர்ச்சி தகவல் வெளியானது.
பெண்ணின் வயிற்றில் 10 செ.மீ. நீளமுள்ள கத்தரிக்கோல் இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த பெண் எக்ஸ்ரே பரிசோதனை முடிவுகளுடன் மீண்டும் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றார்
அலட்சிய சிகிச்சை பற்றிய விவரத்தை அறிந்ததும் டாக்டர்கள் பதற்றமடைந்தனர். பிறகு வயிற்றில் உள்ள கத்தரிக் கோலை எடுத்து விடலாம். இது தொடர்பாக யாரிடமும் கூற வேண்டாம் எனவும் கூறி அனுப்பியுள்ளனர்.
அதன்பிறகு நடந்த விசாரணையில், அதே ஆஸ்பத்திரியில் கடந்த 2021-ம் ஆண்டு அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த விவகாரம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும் அலட்சிய சிகிச்சை விஷயம் பூதாகரமானது. அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட பெண் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற விரும்பவில்லை. கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார்.
அந்த பெண்ணின் அறுவை சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும், அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்து துணை தலைவர் தொபியாஸ் கேட்டு கொண்டார். அதற்கு தேவையான உதவிகளை செய்வதாக வேணுகோபால் எம்.பி.யும் உறுதியளித்து உள்ளார்.
அரசு ஆஸ்பத்திரியின் அலட்சிய அறுவை சிகிச்சையால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இன்று உலகத் தாய்மொழிகள் நாள்!
- நம் தமிழைக் காத்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!
சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழே நீ வாழ்ந்திடு!
இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் "தமிழே" என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!
நம் தமிழைக் காத்து - அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது
உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (22.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
அம்பத்தூர் தொழிற்பேட்டை: 1வது பிரதான சாலை, 3வது தெரு, தபால் அலுவலக சாலை தெற்கு கட்ட பிரிவு 1, எம்டிஎச் சாலை, 3வது பிரதான சாலை.
அம்பத்தூர் சிட்கோ: 5வது தெரு, யாதவா தெரு, ஈபி சாலை, கிராமம் தெரு, 4வது தெரு, 5வது தெரு, செக்டார் 3 வடக்கு கட்டத்தின் 6வது தெரு.
- தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைத்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா.. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைத்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த குழுவில் ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுனராஜ், செந்திலதிபன், ஜீவன், சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- சூப்பர் 8ல் அழுத்தம் அதிகமாக இருக்கும்.
- தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது
நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
குரூப் ஏ பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது. தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன்.
இந்திய அணியின் போட்டிகளை பார்க்கும் போது அனைத்து போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பி இருக்கின்றனர். சூப்பர் 8ல் அழுத்தம் அதிகமாக இருக்கும் என அவர் கூறினார்.
- சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் ரொக்கப்பணம், பாஸ்டேக் போன்ற முறையில் கட்டணம் செலுத்தி வருகிறார்கள்
- நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்துவதை நிறுத்துவது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலனை.
புதுடெல்லி:
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் ரொக்கப்பணம், பாஸ்டேக் போன்ற முறையில் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்துவதை நிறுத்துவது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இதன்படி இனிமேல், பயணிகள் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அல்லது யு.பி.ஐ. போன்ற டிஜிட்டல் முறைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். ஏப்ரல் 1 முதல் இது அமலுக்கு வரும் என தெரிகிறது.
- ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
- கூட்டணி கட்சிகளுடன் நாளை முதல் தொகுதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்த நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா.. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைத்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டி.ஆர். பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் நாளை முதல் தொகுதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்த நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.






