என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ, அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை
    • தண்டனைக் கைதிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு திட்டவட்டம்

    மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும், தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்பு, அவசரகால விடுப்பு வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனுக்கள் நிலவையில் இருக்கும்போது விடுப்பு வழங்கக்கோரி தண்டனைக் கைதிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மாறுபட்ட தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கியதால், இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என்று உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

    • நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'.
    • இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.

    ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.

    கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.

    'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு


    • பெண்களை சீட்டிலிருந்து எழக்கோரி இளைஞர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஐயப்பன் தாங்கலில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற பேருந்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

    தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதியை தமிழ்நாடு வழங்கி வருகிறது.

    இந்நிலையில், "ஓசி டிக்கெட்ல தானே பயணம் பண்றீங்க.. நாங்க டிக்கெட் எடுத்துட்டு வர்றோம்" என அரசுப்பேருந்தில் பெண்களை சீட்டிலிருந்து எழக்கோரி இளைஞர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஐயப்பன் தாங்கலில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற 'எண் 26' பேருந்தில் வடபழனி அருகே இச்சம்பவம் நடந்துள்ளது.

    சீட்டில் அமர்ந்து இருந்த வயதானவர்கள், பெண்களை எழுப்பி விட்டு, அந்த சீட்டில் இளைஞர்கள் அமர்ந்துள்ளனர். இதற்கு பெண் பயனைகள் எதிர்ப்பு தெரிவிக்க, இளைஞர்கள் பெண்களிடம் ஆபாசமாக பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 133 ரன்கள் விளாசினார்.
    • 1 ரன் தேவை என்றபோது பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்ததுடன், 7 ஆயிரம் ரன்களை கடந்தார்.

    பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு போட்டியில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 304 ரன்கள் குவித்தது. பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து கேன் வில்லியம்சன் (133 நாட்அவுட்), கான்வே (97) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 48.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து 304 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமநிலை செய்தபோது, கேன் வில்லியம்சன் 6,997 ரன்கள் எடுத்திருந்தார். ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கேன் வில்லியம்சன் பவுண்டரி விளாசினர். இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, கேன் வில்லியம்சன் 7 ஆயிரம் ரன்களை கடந்தார்.

    167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 159 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி 159 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார். தற்போது விராட் கோலியை பின்னுக்கு தள்ளி வில்லியம்சன் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    150 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்து ஹசிம் அம்லா முதல் இடத்தில் நீடிக்கிறார். ஏபி டி வில்லியர்ஸ் 166 இன்னிங்சில் கடந்து 4-வது இடத்தில் உள்ளார்.

    • பட்டியல் சமூகத்தினரை வணிகர்களாக வளர்த்தெடுக்கும் வகையில் வணிக வளாகங்களை அமைத்துத் தர வேண்டும்.
    • கோரிக்கையை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வலியுறுத்தினேன்.

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., சந்திரகுமாரின் பதவியேற்பு விழாவில் வி.சி.க., எம்.பி., திருமாவளவன் கலந்து கொண்டார்.

    அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், "பட்டியல் சமூகத்தினரை வணிகர்களாக வளர்த்தெடுக்கும் வகையில் வணிக வளாகங்களை அமைத்துத் தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து திருமாவளவன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பட்டியல் சமூகத்தினருக்கென வணிக வளாகங்களை அமைத்துத் தர வேண்டும்.

    அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், நன்னிலம் திட்டம் எனத் தமிழ்நாடு அரசு நடைமுறைப் படுத்தும் திட்டங்கள் சிறப்பான பலன்களைத் தந்துள்ளன. அந்தத் திட்டங்களுக்கான பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏதுவாகக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுகிறோம்.

    அத்துடன் பட்டியல் சமூகத்தினரை வணிகர்களாக வளர்த்தெடுக்கும் வகையில், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் வணிக வளாகங்களை அமைத்துத் தருவதற்குத் திட்டம் ஒன்றை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்னும் கோரிக்கையை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அவர்களை சந்தித்து வலியுறுத்தினேன்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து சுமார் 6 மைல் தெற்கே உள்ளது.
    • இரத்தத்தில் மூழ்கியது போல் இருந்தது. இதுபோன்ற ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை.

    அர்ஜென்டினா தலைநகரான பியூனஸ் அயர்ஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஓடை நீர் ரத்த சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து சுமார் 6 மைல் தெற்கே மக்கள் அதிகம் வசிக்கும் புறநகர் பகுதியில் சரண்டி என்ற நதி ஓடுகிறது.

    அர்ஜென்டினாவிற்கும் உருகுவேவிற்கும் இடையிலான ஒரு முக்கிய நீர்நிலையான ரியோ டி லா பிளாட்டா நதியின் துணை நதியான இது பல கிலோமீட்டர் தூரம் பயணித்து கடைசியில் ஆற்றில் கலக்கும். பயணிக்கும் வழியில் ஏராளமான தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன.

    அங்கிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் இந்த ஓடையில் கலக்கிறது. இதற்கு முன்னரும் எண்ணெய் போலவும் சில நேரம் சாம்பல் அல்லது ஊதா நிறத்திலும் இந்த நீர்நிலை மாறியுள்ளது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

    ஓடை நிறம் மாறியது குறித்து பேசிய உள்ளுரர்வாசிகள், திடீரென சில நாட்களுக்கு முன்பு காலை இதுபோல நீரோடை நிறம் மாறியிருந்தது. அது இரத்தத்தில் மூழ்கியது போல் இருந்தது. இதுபோன்ற ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை என்கின்றனர்.

    இந்த நீரோடையை தவிர்த்து இந்தப் பகுதியில் உள்ள ஆறுகள் பலவும் மாசுபாடுகள் நிறைந்தவை. உதாரணமாக மடான்சா-ரியாசுலோ நதிப் படுகை, லத்தீன் அமெரிக்காவில் மிகவும் மாசுபட்ட நீர்நிலைகளில் ஒன்றாக அழைக்கப்படுகிறது.

    • கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் விளாசினார்.
    • கான்வே 97 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

    மூன்று அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். கடந்த 8-ந்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தானை 78 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியிருந்தது.

    லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியில் போஸ்ச், மிலானி மோங்க்வானா, மேத்யூ பிரீட்ஸ்கீ, முத்துசாமி ஆகியோர் அறிமுகம் ஆகினர். இதில் தொடக்க வீரரான பிரீட்ஸ்கி சிறப்பாக விளையாடி 148 பந்தில் 11 பவுண்டரி, 5 சிக்சருடன் 150 ரன்கள் விளாசினார்.

    அறிமுக போட்டியில் 150 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். வியான் முல்டர் 64 ரன்களும், ஜேசன் ஸ்மித் 41 ரன்கள் அடிக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், வில் ஓ'ரூர்கே 72 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வில் யங் 19 ரன்கள் எடுது்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து டேவன் கான்வே உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 18.2 ஓவரில் 100 ரன்களை கடந்த நியூசிலாந்து 30.1 ஓவரில் 200 ரன்களை கடந்தது.

    கான்வே 64 பந்தில் அரைசதமும், கேன் வில்லியம்சன் 44 பந்தில் அரைசதமும் அடித்தனர். தொடர்ந்து இருவரும் சதத்தை நோக்கி சென்றனர்.

     கேன் வில்லியம்சன் 72 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் கான்வே சதத்தை எட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 1 சிக்சர் இடங்கும். கான்வே- கேன் வில்லியம்சன் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது.

    அடுத்து வந்த டேரில் மிட்செல் 10 ரன்னிலும், டாம் லாதம் ரன்ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.

    என்றாலும் கேன் வில்லியம்சன் கடைசி வரை விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். நியூசிலாந்து 48.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேன் வில்லியம்சன் 133 ரன்னுடனும், பிலிப்ஸ் 28 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    • ரெயில் நிலையத்தில் டேவிட் தனது சகோதரியுடன் போனில் ஸ்பீக்கர் ஆன் செய்து பேசிக்கொண்டிருந்தார்.
    • ரெயில்வே அதிகாரி கிண்டலடிக்கிறார் என்று டேவிட் நினைத்துள்ளார்.

    பிரான்ஸ் நாட்டின் நான்டெஸில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் தனது செல்போனில் ஸ்பீக்கர் ஆன் செய்து பேசியதற்காக டேவிட் என்ற நபருக்கு 207 அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.16,640 க்கு மேல்) அபராதம் விதிக்கப்பட்டது.

    ரெயில் நிலையத்தில் டேவிட் தனது சகோதரியுடன் போனில் ஸ்பீக்கர் ஆன் செய்து பேசிக் கொண்டிருந்தபோது ரெயில்வே அதிகாரி ஒருவர் அவரிடம் வந்து ஸ்பீக்கரை ஆப் செய்யாவிட்டால் 154 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    ரெயில்வே அதிகாரி கிண்டலடிக்கிறார் என்று டேவிட் அப்போது நினைத்துள்ளார். ஆனால் டேவிட் அதன்பின்னும் ஸ்பீக்கரை ஆப் செய்யாததால் அவருக்கு 207 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

    • நடன இயக்குனர் சதீஷ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்
    • ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்இப்படத்தை தயாரித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்திற்கு கிஸ் என்ற தலைப்பை வைத்துள்ளனர். இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார்.

    படத்தின் படப்பிடிப்பு பணி சமீபத்தில் முடிவடைந்த நிலையில்.

    இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார். இத்திரைப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு

    • தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் கூடியது.
    • பட்டா வழங்கும் பணிகளை 6 மாத காலத்தில் முடித்துக் கொடுக்கச் சொல்லி உள்ளார்கள்.

    தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் கூடியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில், சென்னையை சுற்றியிருக்கிற பெல்ட் ஏரியா என்று சொல்லக் கூடிய சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் 32 கிலோ மீட்டரில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்படுவதும், அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்ய முடியாமல் இருப்பதும் நமது முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதன்விளைவாக சென்னையை சுற்றி இருக்கிற 4 மாவட்டங்களில் உள்ள பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக

    அதன் பேரில் பட்டா இல்லாமல் ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கும் பணிகளை 6 மாத காலத்தில் முடித்துக் கொடுக்கச் சொல்லி உள்ளார்கள்.

    இந்நிலையில், ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் "பெல்ட் ஏரியாக்களில்" ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர்,

    மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய #CabinetMeeting-இல் ஒப்புதல் வழங்கியுள்ளோம்!

    6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்!

    உங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • "பீர்பைசெப்ஸ்" என்று பரவலாக அறியப்படும் பாட்காஸ்டரும் யூடியூபருமான ரன்வீர் அல்லாபாடியா
    • மும்பையில் நடந்த India's Got Latent நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் தோன்றினார்

     "பீர்பைசெப்ஸ்" என்று பரவலாக அறியப்படும் பாட்காஸ்டரும் யூடியூபருமான ரன்வீர் அல்லாபாடியா கருத்து ஒன்றால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    மும்பையில் நடந்த India's Got Latent நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் தோன்றிய ரன்வீர், போட்டியாளர் ஒருவரிடம்  ஆத்திரமூட்டும் கேள்வி ஒன்றை கேட்டு சர்ச்சை கிளப்பினார்.

    போட்டியாளரை பார்த்து, "உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை  நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார்.

    ரன்வீர் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பாக ரன்வீர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மகாராஷ்டிர அரசியல் தலைவர்களும் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தனது பேச்சுக்கு ரன்வீர் மன்னிப்பு கேட்டுள்ளார். 

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை நாளைக்குள் அறிவிக்க வேண்டும்.
    • பும்ரா இடம்பெறுவது குறித்து பிசிசிஐ நாளை முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல்

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட மறுப்பு தெரிவித்ததால் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற இருக்கிறது.

    இந்த தொடருக்கான முதற்கட்ட அணியை கடந்த மாதம் இந்தியா அறிவித்தது. இதில் பும்ரா இடம் பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பந்து வீசும்போது பும்ராவிற்கு முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் பந்து வீசாமல் வெளியேறினார். உடனடியாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பந்து வீச வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் பும்ரா பந்து வீசவில்லை.

    இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார். ஆனால் ஐந்து வாரங்களுக்கு பந்து வீசாமல் ஓய்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அவரால் பந்து வீச முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.

    அதேவேளையில் பிப்ரவரி 11-ந்தேதி (நாளை) வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக அறிவிக்க அணியில் மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் நாளை இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடக்கூடிய அணியை அறிவிக்க வேண்டும். அதன்பின் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் தொடருக்கான தொழில்நுட்ப குழுவிடம் அனுமதி பெறவேண்டும்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மத்தியில் பும்ரா பந்து வீச தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் பாதியை சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்தால் பும்ரா இடம்பெற வாய்ப்புள்ளது. இல்லை என்றால் ஹர்ஷித் ராணா அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்படலாம்.

    பெங்களூருவில் உள்ள பிசிசிஐ அகாடமியில் பும்ராவின் காயம் குறித்து மருத்துவக்குழு ஆராய்ந்து வருகிறது.

    வருகிற 12-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பும்ரா விளையாட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், பும்ரா பெஙகளூரு சென்றுள்ளார். இதனால் சாம்பியன்ஸ் டிராபியில் தொடரில் பங்கேற்பாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    என்றபோதிலும், நாளை பிசிசிஐ இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிடும்போதுதான் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது குறித்து தெரியவரும்.

    ஒருவேளை பும்ரா இடம்பெறவில்லை என்றால், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.

    ×