கவின் நடித்த Kiss படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடன இயக்குனர் சதீஷ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்இப்படத்தை தயாரித்துள்ளார்.
கவின் நடித்த Kiss படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்திற்கு கிஸ் என்ற தலைப்பை வைத்துள்ளனர். இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு பணி சமீபத்தில் முடிவடைந்த நிலையில்.

இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார். இத்திரைப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com