என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirumavalan"

    • மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார்.
    • மாநாட்டை ஒட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் திருச்சி வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை மறுநாள்( வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது.

    அக்கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைவரின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

    மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டிஇ ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சாரியார்,

    திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ.,

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநாட்டு பொறுப்பாளருமான பெரம்பலூர் இரா. கிட்டு மற்றும் இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். மேலும் தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார்.

    முன்னதாக சென்னையில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மேல் புறப்பட்டு திருச்சி வருகை தருகிறார்.

    பின்னர் கார் மூலமாக சாலை மார்க்கத்தில் மாநாடு நடைபெறும் சிறுகனூருக்கு செல்கிறார். முன்னதாக செல்லும் வழியில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் சிலை அமைக்கும் பணிகளை பார்வையிடுவார் என கூறப்படுகிறது. இதை போன்று மாநாட்டில் பங்கேற்கும் மல்லிகார்ஜூன கார்கே பெங்களூரில் இருந்து திருச்சி புறப்பட்டு வருகிறார்.

    மாநாட்டை ஒட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    முதல்வர் வருகையை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் முதலமைச்சரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி டிஐஜி திருநாவுக்கரசு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி, பெரம்பலூர் இரா. கிட்டு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

    மாநாடு மேடை மற்றும் பந்தள் அமைக்கும் பணிகள் இன்று மாலைக்குள் இறுதி வடிவம் பெறும் என கட்சியினர் தெரிவித்தனர்.

    இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மற்றும் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • முன்னணி கதாப்பாத்திரத்தில் ஹரிசங்கர் மற்றும் சங்கீதா கல்யாண் நடித்துள்ளனர்.
    • பராரி திரைப்படத்தை எழில் பெரியவேடி இயக்கியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படமாக ஜோக்கர் மற்றும் குக்கூ திரைப்படங்கள் பார்க்கப்படுகிறது. இப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜு முருகன். இவர் தற்பொழுது பராரி என்ற திரைப்படத்தை வழங்கியுள்ளார்.

    பராரி திரைப்படத்தை எழில் பெரியவேடி இயக்கியுள்ளார். இவர் ராஜு முருகனின் உதவி இயக்குனராக இருந்தவராவார். இப்படத்தில் பெரும்பாலானோர் புதிய முக நடிகர்களாக அறிமுகமாகவுள்ளனர். படத்தின் முன்னணி கதாப்பாத்திரத்தில் ஹரிசங்கர் மற்றும் சங்கீதா கல்யாண் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    உமா தேவி பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை சாம் மேற்கொண்டுள்ளார்.

    மொழி, ஜாதி, கலப்பு திருமணம் ஆகியவற்றை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று பராரி திரைப்படத்தை பார்த்த வி.சி.க தலைவரான திருமாவளவன் படத்தை பாராட்டியுள்ளார். அவரி கூறியதாவது " இன வெறியையும் ஜாதி வெறியையும் தூண்டும் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். உழைக்கிற மக்கள் இயல்பாகவே வாழவேண்டும். இதை மிகவும் பொறுப்புணர்வோடு இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். எழில் பெரியவேடி எடுத்த இந்த முயற்சிக்கு பாராட்டுகள். இத்திரைப்படத்தை அனைவரும் வந்து பார்க்க வேண்டும் . இது மாதிரியான படங்களை வெகு ஜனங்களுக்கு சென்று சேர்க்க வேண்டும்" .

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்துள்ளார்.
    • விசிகவில் இருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்துள்ளார்.

    தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்துள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்துள்ளார்.

    தவெகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா மரியாதை நிமித்தமாக திருமாவளவனை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா இன்று சந்தித்தார்.

    தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா இன்று சந்தித்தார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்தார்.

    தவெகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா மரியாதை நிமித்தமாக திருமாவளவனை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியானது.

    இந்நிலையில், திருமாவளவன் - ஆதவ் அர்ஜூனா சந்திப்பு பிறகு இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

    அப்போது ஆதவ் அர்ஜூனா கூறுகையில், " தவெக கட்சி தலைவரும் சரி, அண்ணன் திருமாவளவனும் சரி ஒரே கருத்து, ஒரே கொள்கையில்தான் இருக்கிறோம். அதனால், நாங்கள் எதிர்துருவம் அல்ல. ஒரே துருவத்தில் கொள்கை அடிப்படையில் பயணம் எப்போதுமே இருக்கும். கொள்கை அடிப்படையில் நாங்கள் ஒற்றுமையாகதான் இருக்கிறோம்.

    அவருடைய அறிவுரைகளை எடுத்துக்கொண்டு அதை செயல்களில் காட்டுவோம்" என்றார்.

    தொடர்ந்து பேசிய திருமாவளவன், " தமிழக அரசியலில் ஒரு புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார். பொதுவாக ஒரு கட்சியில் இருந்து விலகினாலோ அல்லது விலக்கி வைத்தாலோ அதை ஒரு பகையாக கருதுகின்ற ஒரு பாரம்பரியம் தான் அரசியல் களக்கில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    ஆனால், ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறக் கூடிய ஒரு சூழல் இருந்த நிலையிலும்கூட, அதை ஒரு பகையாக கருதவில்லை.

    வலிகள் இருந்தாலும் கூட அதை எதிராக நிறுத்தவில்லை. தான் இன்னொரு கட்சியில் போய் சேர்ந்து, பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்று செயல்படுகிற இந்த சூழலில் உங்களுடைய வாழ்த்தும் எங்களுக்கு தேவை என்று என்னை தேடி ஆதவ் வந்திருக்கிறார் என்பது தமிழக அரசியல் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நாகரிகமாக நான் பார்க்கிறேன்.

    கருத்தியல் ரீதியாக எவ்வளவு முரண்கள் இருந்தாலும் களத்தில் நாம் எதிர் எதிர் துருவத்தில் நின்று செயல்படக்கூடிய நிலையில் இருந்தாலும்கூட இத்தகைய நட்புறவை பேணுவது ஒரு நாகரிகமாக அணுகுமுறை.

    அந்த வகையில் ஆதவ் அர்ஜூனாவுக்கு வாழ்த்துகள்" என்றார்.

    • பட்டியல் சமூகத்தினரை வணிகர்களாக வளர்த்தெடுக்கும் வகையில் வணிக வளாகங்களை அமைத்துத் தர வேண்டும்.
    • கோரிக்கையை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வலியுறுத்தினேன்.

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., சந்திரகுமாரின் பதவியேற்பு விழாவில் வி.சி.க., எம்.பி., திருமாவளவன் கலந்து கொண்டார்.

    அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், "பட்டியல் சமூகத்தினரை வணிகர்களாக வளர்த்தெடுக்கும் வகையில் வணிக வளாகங்களை அமைத்துத் தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து திருமாவளவன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பட்டியல் சமூகத்தினருக்கென வணிக வளாகங்களை அமைத்துத் தர வேண்டும்.

    அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், நன்னிலம் திட்டம் எனத் தமிழ்நாடு அரசு நடைமுறைப் படுத்தும் திட்டங்கள் சிறப்பான பலன்களைத் தந்துள்ளன. அந்தத் திட்டங்களுக்கான பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏதுவாகக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுகிறோம்.

    அத்துடன் பட்டியல் சமூகத்தினரை வணிகர்களாக வளர்த்தெடுக்கும் வகையில், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் வணிக வளாகங்களை அமைத்துத் தருவதற்குத் திட்டம் ஒன்றை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்னும் கோரிக்கையை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அவர்களை சந்தித்து வலியுறுத்தினேன்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×