என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
- டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு மிரட்டல் வந்துள்ளது.
அண்மைக் காலங்களாக விமானங்கள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகி உள்ளது. சில நாட்கள் முன் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் விமானத்துக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது.
இந்நிலையில் குஜராத்தில் உள்ள அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும்விதமாக கடிதம் ஒன்று விமான நிலைய வளாகத்தில் கிடந்துள்ளது.
பெயர் எழுதப்படாத அந்த கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி மற்றும் சில தனியார் பள்ளிகளுக்கும் போலி வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் மாபெரும் வசூலை குவித்தது.
- சூர்யா 45 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
தமிழில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் கடைசியாக இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1,100 கோடியை கடந்து அசத்தியது. இந்த நிலையில், இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இயக்குநர் அட்லி மற்றும் அல்லு அர்ஜூன் இணையும் புதிய படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில், அட்லி மற்றும் அல்லு அர்ஜூன் இணையும் படத்தில் இளம் இசையமைப்பாளர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்டிபென்டென்ட் பாடல்களுக்கு இசையமைத்து பிரபலமான சாய் அபயங்கர் அட்லி இயக்கும் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் நடிகர் சூர்யா இணையும் புதிய படத்திற்கு இசையமைக்கிறார்.
முன்னதாக இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க இருந்த நிலையில், சாய் அபயங்கர் இசையமைப்பார் என்று படக்குழு அறிவித்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- காசாவை சொந்தமாக்குவதற்கும், அதை எடுத்துக்கொள்வதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்
- அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீட்டைக் கொடுக்க முடிந்தால் அவர்கள் திரும்ப விரும்பமாட்டார்கள்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.
போர் நிறுத்தத்தையடுத்து இடப்பெயர்ந்த மக்கள் தங்களது பகுதிகளுக்குத் திரும்பி வருகிறார்கள். காசா எல்லையில் நிலைநிறுத்தப்பட்ட படைகளை இஸ்ரேல் திரும்பப்பெற்றுள்ளது.
இந்நிலையில் காசாவை அமெரிக்கா வாங்க உள்ளதாக டிரம்ப் தெரித்துள்ளார். நேற்று ஏர் போர்ஸ் 1 விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "காசாவை வாங்குவதற்கும் சொந்தமாக்குவதற்கும் நான் உறுதிபூண்டுள்ளேன். அதை ஒரு ரியல் எஸ்டேட் தளம் என்று எண்ணிக்கொள்ளுங்கள். எனவே அதை மாற்றியமைக்க வேண்டும்.
அந்த பொறுப்பை மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளுக்கு நாங்கள் கொடுக்கலாம். எங்கள் அனுமதியுடன் தான் செய்லபட முடியும். காசாவை சொந்தமாக்குவதற்கும், அதை எடுத்துக்கொள்வதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . மக்கள் மீண்டும் உள்ளே செல்ல காசாவில் எதுவும் இல்லை. அந்த இடம் ஒரு இடிபாடு தளம். மீதமுள்ளவையும் இடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், "அவர்கள் [காசா மக்கள்] காசாவுக்குத் திரும்ப விரும்பவில்லை. அவர்கள் காசாவுக்குத் திரும்புவதற்கு ஒரே காரணம் அவர்களிடம் மாற்று வழி இல்லை என்பதுதான். அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீட்டைக் கொடுக்க முடிந்தால் அவர்கள் திரும்ப விரும்பமாட்டார்கள்" என்று டிரம்ப் பேசியுள்ளார்.
அரபு நாடுகள் தன்னுடன் பேசிய பிறகு பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொள்ளும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஜோர்டான், எகிப்து மற்றும் பிற அரபு நாடுகள் நிரந்தர புகலிடம் வழங்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். "அதுதான் ஒரே வழி. அங்கே அவ்வளவு தான். எல்லாம் முடிந்துவிட்டது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதே சரியாக இருக்கும்.
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவை முழுவதுமாக சுத்தம் செய்யவேண்டும்" என்று கூறினார்
சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி டிரம்ப் காசாவை பாலஸ்தீனத்திடம் இருந்து முற்றிலுமாக பறிக்க திட்டமிடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிரம்ப்பின் திட்டம் அப்பட்டமான மோசடி என ஜெர்மன் அதிபர் ஷோல்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
- பொதுத் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும்.
- மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பள்ளி மாணவர்களுடன் இன்று கலந்துரையாடினார்.
பொதுத் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். திணை மற்றும் காய்கறிகளின் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றினார். மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
நோய் இல்லாததால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தமல்ல. தூக்கமும், ஊட்டச்சத்தையும் சார்ந்தது. மருத்துவ அறிவியலும் தூக்கத்தில் கவனம் செலுத்துகிறது. அனைவரும் காலை வெயிலில் தங்களது நேரத்தை செலவிட வேண்டும்.
உங்களுக்கு அழுத்தம் இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். தேர்வு பயத்தை எதிர்கொள்ள வேண்டாம். மேலும் நீங்கள் உங்களை சவால் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
உங்கள் நேரத்தை கட்டுப்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துங்கள். நிகழ்காலத்தில் வாழுங்கள், நேர்மறைகளை கண்டறியுங்கள். உங்களை நீங்களே சவால் செய்வது எப்படி என்பதை அறிய உங்கள் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். எப்போதும் முந்தைய முடிவுகளை விட சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும்.
அதிக மதிப்பெண்கள் பெறாவிட்டால் வாழ்க்கை வீணாகி விடும் என்று மாணவர்கள் கருதக்கூடாது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அடுத்தவர்களுடன் ஒப்பிடக்கூடாது. அதற்கு பதிலாக அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். மாணவர்களை அடைத்து வைக்கக்கூடாது. அவர்களின் ஆர்வத்தை ஆராய சுதந்திரம் வழங்க வேண்டும்.
தலைவர்களின் நடத்தையில் இருந்து மக்கள் குறிப்புகளை பெறுகிறார்கள். பேச்சுக்கள் மட்டுமே உதவாது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் செய்திருக்கிறார்கள்.
- இப்படி ஒரு ஆட்சி நடத்த அசிங்கமாக இல்லையா?
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,
பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் இலவச காட்டன் வேட்டி சேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழல் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர் கமிஷன் காந்தி. கடந்த ஆண்டு, வேட்டி நெசவு செய்யப் பயன்படுத்தப்படும் கிலோ ₹320 வரை விற்கப்படும் பருத்தி நூலைக் குறைவாகவும், அதில் பாதி விலையான ₹160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலை அதிகமாகவும் வாங்கி வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றியதை, தமிழக பாஜக சார்பாக, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்து, மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர், வெறும் 22 சதவீதம் மட்டுமே காட்டன் என்பதைக் கண்டறிந்து, உற்பத்திச் செலவில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதை வெளிப்படுத்தினோம்.
2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் என்னை சந்தித்து இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தனர். மேலும் அதிகாரிகள் கேட்டதற்கிணங்க. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வேட்டி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தில் ஜூலை 13ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், இந்த ஊழல் புகார் தொடர்பாக நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், வழக்கமாகப் பயன்படுத்தி வந்த பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் செய்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து, தமிழக அரசு கைத்தறித் துறையின் இயக்குனரான, ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம் அவர்கள், தரப்பரிசோதனையில் தெரிவு செய்யப்படாத சுமார் 20 லட்சம் வேட்டிகளை, அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கே திருப்பி அனுப்பி, அதே எண்ணிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை, அரசு கொள்முதல் கிடங்குக்கு அனுப்பி வைக்கக் கூறி கடந்த டிசம்பர் 3, 2024 அன்று குறிப்பாணை அனுப்பியிருக்கிறார்.
கூட்டுறவு சங்கங்கள் தரமான வேட்டிகளை அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும், கடந்த 06.02.2025 அன்று, நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை அரசு கொள்முதல் கிடங்குக்கு அனுப்பவில்லை என்றால், இழப்பீடு நடவடிக்கை எடுப்பதோடு, எதிர்காலத்தில் இந்த சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட மாட்டாது என்பதையும் விரைவுக் குறிப்பாணை மூலம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில் தனது பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் பணத்தை நூதனமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் காந்தி, தான் செய்யும் ஊழலுக்கு, ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம் அவர்கள் தடையாக இருக்கிறார் என்பது தெரிந்ததும், அடுத்த இரண்டு நாட்களில், நேற்று, அவரை கைத்தறித் துறையில் இருந்து பணிமாற்றம் செய்திருக்கிறார்கள்.
கைத்தறித் துறையில் நடக்கும் மெகா ஊழலைக் கடந்த ஆண்டே கண்டுபிடித்துக் கூறியும், முதலமைச்சர் அவரைத் தொடர்ந்து அதே துறையில் அமைச்சராக நீடிக்கச் செய்கிறார் என்றால் அமைச்சர் செய்யும் ஊழலின் பங்கு, முதலமைச்சருக்கும் செல்கிறது என்பதுதானே பொருள்? தனது பணியை சரியாகச் செய்து, ஊழல் நடப்பதை வெளிக்கொண்டு வந்த அரசு அதிகாரியை இரண்டு நாட்களிலேயே பணிமாற்றம் செய்திருப்பது அதைத்தானே உறுதிப்படுத்துகிறது? இப்படி ஒரு ஆட்சி நடத்த அசிங்கமாக இல்லையா?
ஒவ்வொரு ஆண்டும், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளில் கொள்ளையடிக்கும் அமைச்சர் காந்தி, இனியும் கைத்தறித் துறை அமைச்சராக நீடிக்கக் கூடாது. உடனடியாக அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
- அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்கள் புகார் அளிக்க அச்சப்பட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பள்ளி மாணவி ஆசிரியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை, திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை, ஓடும் ரெயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை, திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதுதொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:-
* புகார் தந்தால் திமுக ஆட்சியில் நடவடிக்கை இருக்கும் என்ற நம்பிக்கை, தைரியம் வந்ததால் தான் அதிக புகார் வருகிறது.
* பெண்கள் திமுக ஆட்சியில் புகார் அளிக்க தைரியமாக வெளியே வருகின்றனர்.
* அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்கள் புகார் அளிக்க அச்சப்பட்டனர் என்றார்.
- வெப்ப அணுசக்தி பரிசோதனை உலை திட்டத்தைப் இருவரும் பார்வையிடுவார்கள்.
- டிரம்ப் - மோடி சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு (AI) செயல் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டுள்ளார்.
அங்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து பிரான்சில் முதல் இந்திய துணைத் தூதரகத்தைத் திறந்து வைக்கிறார். மேலும் மார்சேயில் சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலை திட்டத்தைப் இருவரும் பார்வையிடுவார்கள்.
பிரான்சிலிருந்து, அதிபர் டொனால்டு டிரம்பின் அழைப்பின் பேரில், மோடி அமெரிக்காவிற்கு இரண்டு நாள் பயணமாகச் செல்வார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி இரண்டாவது முறையாக பதவியேற்றார். உலக நாடுகள் மீதான வரிவிதிப்பு, சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்துவது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார்.
அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கை, கால்கள் விலங்கிடப்பட்டு கீழ்த்தரமாக நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. எனவே டிரம்ப் - மோடி சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
- சமீபத்தில் படத்தின் பூஜை நடைபெற்றது.
- படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.
யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். யூடியூப்-ஐ தாண்டி வெள்ளித்திரையில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர். அதன்படி பொது மக்களிடம் பணம் வசூலித்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டனர். இருவரின் முயற்சிக்கு அதிக தொகை கிடைத்த போதிலும், அந்தப் படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தின் தலைப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.

முன்னதாக இந்தப் படம் துவங்கியதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்தப் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ள நிலையில், அடுத்தடுத்த தகவவல்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பின்னர் அதிமுகவிற்கு கிடைத்த 11-வது தோல்வி இது.
- வெற்றிப்பாதையில் அதிமுகவை அழைத்து செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என்பது நிரூபணம்.
சென்னை:
அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுகவினர் திமுகவிற்கு வாக்கு செலுத்தியுள்ளனர்.
* அதிமுகவினர் திமுகவிற்கு மனமுவந்து வாக்கு செலுத்தியது தான் எங்களுக்கு கிடைத்த வெற்றி.
* பல்வேறு புதிய திட்டஙகளை திமுக அரசு கொண்டுவந்துள்ளது.
* எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பின்னர் அதிமுகவிற்கு கிடைத்த 11-வது தோல்வி இது.
* வெற்றிப்பாதையில் அதிமுகவை அழைத்து செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என்பது நிரூபணம்.
* அதிமுக எடப்பாடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதே கேள்விக்குறி. கட்சியை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.
* பாஜக கொண்டு வரும் திட்டங்களை வெளிப்படையாக எதிர்க்கும் எடப்படி பழனிசாமி மறைமுகமாக ஆதரிப்பார்.
* சீமான் கைது செய்யப்படாவிட்டாலும் நீதிமன்றத்தில் அவர் வழக்கை சந்தித்தாக வேண்டும்.
* சீமான் மீதான அனைத்து புகார்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
- பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறி வந்தார்.
- சீமான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு திராவிடர் கழகம், பெரியாரிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் தமிழ் நாடு முழுக்க போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக சீமானுக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், சீமான் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில், பெரியார் குறித்து அவதூறு பேசிய சீமானுக்கு காவல் துறை நோட்டீஸ் அளித்துள்ளது.
அதன்படி வருகிற வெள்ளிக்கிழமை வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்திற்கு சென்று காவல் துறையினர் சம்மன் அளித்தனர்.
- கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
- 13,020 சதுர அடி கொண்ட இந்த கட்டிடம் தரைத்தளம், முதல் மாடி, 2-வது மாடி, 3-வது மாடி என 4 தளங்களைக் கொண்டு பொலிவுடன் திகழ்கிறது.
சென்னை:
டெல்லியில் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் புதுடெல்லி, எம்.பி. ரோடு, இன்ஸ்டிட்யூ ஷனல் ஏரியா, புஷ்ப் விஹார், செக்டார்- 6, பிளாட் எண்கள். 15 மற்றும் 22'' என்ற முகவரியில் அமைந்துள்ளது.
புதிதாகக் கட்டப்பட்ட புதுடெல்லி அ.தி.மு.க. அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். - புரட்சித் தலைவி அம்மா மாளிகையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவால் புதுடெல்லியில் அ.தி.மு.க. அலுவலகம் அமைப்பதற்காக 21.2.2012 அன்று 10,850 சதுர அடி கொண்ட இடம் மத்திய அரசிடமிருந்து ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டது. ஜெயலலிதாவால் 5.10.2015 அன்று அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டிலான 13,020 சதுர அடி கொண்ட இந்த கட்டிடம் தரைத்தளம், முதல் மாடி, 2-வது மாடி, 3-வது மாடி என 4 தளங்களைக் கொண்டு பொலிவுடன் திகழ்கிறது.
புதுடெல்லியில், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். - புரட்சித் தலைவி அம்மா மாளிகை'' கழக அலுவலகத் திறப்பு விழா நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் புதுடெல்லி மாநிலக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.






