என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை நாளைக்குள் அறிவிக்க வேண்டும்.
- பும்ரா இடம்பெறுவது குறித்து பிசிசிஐ நாளை முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட மறுப்பு தெரிவித்ததால் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான முதற்கட்ட அணியை கடந்த மாதம் இந்தியா அறிவித்தது. இதில் பும்ரா இடம் பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பந்து வீசும்போது பும்ராவிற்கு முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் பந்து வீசாமல் வெளியேறினார். உடனடியாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பந்து வீச வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் பும்ரா பந்து வீசவில்லை.
இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார். ஆனால் ஐந்து வாரங்களுக்கு பந்து வீசாமல் ஓய்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அவரால் பந்து வீச முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
அதேவேளையில் பிப்ரவரி 11-ந்தேதி (நாளை) வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக அறிவிக்க அணியில் மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் நாளை இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடக்கூடிய அணியை அறிவிக்க வேண்டும். அதன்பின் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் தொடருக்கான தொழில்நுட்ப குழுவிடம் அனுமதி பெறவேண்டும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மத்தியில் பும்ரா பந்து வீச தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் பாதியை சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்தால் பும்ரா இடம்பெற வாய்ப்புள்ளது. இல்லை என்றால் ஹர்ஷித் ராணா அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்படலாம்.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ அகாடமியில் பும்ராவின் காயம் குறித்து மருத்துவக்குழு ஆராய்ந்து வருகிறது.
வருகிற 12-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பும்ரா விளையாட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், பும்ரா பெஙகளூரு சென்றுள்ளார். இதனால் சாம்பியன்ஸ் டிராபியில் தொடரில் பங்கேற்பாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
என்றபோதிலும், நாளை பிசிசிஐ இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிடும்போதுதான் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது குறித்து தெரியவரும்.
ஒருவேளை பும்ரா இடம்பெறவில்லை என்றால், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
- அப்துல் ரஷீத், உபா சட்டத்தில் கைதாகி 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார்.
- அப்துல் ரஷீத் சுயேட்சையாக போட்டியிட்டு முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா தொகுதியில் ஷேக் அப்துல் ரஷீத் சுயேட்சையாக போட்டியிட்டு முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஞ்சினியர் ரஷீத் என அழைக்கப்படும் அப்துல் ரஷீத், உபா சட்டத்தில் கைதாகி 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார்.
எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் நீதிமன்ற உத்தரவை பெற்றால்தான் பாராளுமன்ற கூட்டங்களில் பங்கேற்க முடியும். இந்நிலையில், திகார் சிறையில் உள்ள எம்.பி. அப்துல் ரஷீத் பிப்ரவரி 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் பங்கேற்பதற்காக கஸ்டடி பரோல் கொடுத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்துல் ரஷீத் சிறையில் இருந்து வெளியே அழைத்து செல்லும்போது இன்ஸ்பெக்டர் அல்லது உதவி ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் பாதுகாப்புக்கு செல்ல வேண்டும். மேலும் செல்போன் பேசுவதற்கும், எம்.பி.க்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் தவிர இதர நபர்களை சந்தித்து பேச கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள அப்துல் ரஷீத் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்தால் தனது எம்.பி பதவியை அவர் இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக "டிராகன்" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- 'டிராகன்' திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக "டிராகன்" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா மற்றும் வி.ஜே. சித்து, ஹர்ஷத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் 'ரைஸ் ஆஃப் தி டிராகன்' மற்றும் 'வழித்துணையே' பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
'டிராகன்' திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில்,டிராகன் படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஒரு அடாவடியான கல்லூரி மாணவனின் கதை மற்றும் அவன் வாழ்க்கையில் அவன் சந்திக்கும் காதல், நட்பு , சிக்கல் என டிரெய்லர் காட்சி அமைந்துள்ளது.
டிராகன் திரைப்படம் வெளியாகும் இதே நாளில் தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழக அரசின் ரிட் மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
- பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
மசோதாக்கள், துணை வேந்தர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட கோரும் தமிழக அரசின் ரிட் மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த மீனு மீதான விசாரணையின்போது, அரசமைப்பு சட்டத்தின்படி பேரவையில் 2வது முறையாக இயற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முதன் முறையாக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஆளுநர் அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியும்.
ஆனால், மீண்டும் நிறைவேற்றப்பட்டு கிடைக்கப்பெறும் மசோதாககளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியாது என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து நீதிபதிகள், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்தனா். அதாவது தமிழக அரசு அனுப்பிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் என்றால் அதற்கான காரணம் என்ன?. ஆளுநர் அப்படி ஏன் செய்ய வேண்டும். அது என்னவென்று ஆளுநர் தரப்பில் கூறப்படவில்லை என்றால் தமிழக அரசுக்கு எப்படி அதுபற்றி தெரியவரும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
மேலும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? ஆளுநருக்கா அல்லது மாநில அரசுக்கா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தொடர்ந்து, தமிழக அரசின் ரிட் மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
- சீயான் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்து வெளியானது மகான் திரைப்படம்.
- இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்து வெளியானது மகான் திரைப்படம். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன் மற்றும் பாபி சிம்ஹா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இப்படம் அப்பாவும் மகனும் கொள்கை ரீதியாக இருவேறு கோட்பாட்டில் இருப்பார்கள். மகன் ஒரு காவல் அதிகாரியாகவும் அப்பா ஒரு சமூகத்திற்கு தீங்கு விளைவிற்கும் செயல்களில் ஈடுப்பட்டு வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இப்படத்தின் மையக்கதையாகும்.
இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியாகி 3 வருடங்கள் முடிவடைந்த நிலையில் படத்தின் டெலிடட் காட்சியை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் சீயான் விக்ரம் அவருக்கு பிடிக்காத நபர்களையும், தன் முன்னால் காதலியின் கணவனையும் அழைத்து பிரம்பால் அடிக்கும் காட்சி நகைச்சுவையாக இடம் பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புலியை மீண்டும் காட்டிற்குள் கொண்டு செல்வதற்கான வனத்துறை ஊழியர்கள் புலியை துரத்தியுள்ளனர்.
- புலி தாக்கியத்தில் காயமைடந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சுந்தரவன புலிகள் காப்பகத்தில் வனத்துறை ஊழியரை புலி ஒன்று தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
காட்டிற்கு வெளியே உலா வந்த புலியை மீண்டும் காட்டிற்குள் கொண்டு செல்வதற்கான வனத்துறை ஊழியர்கள் புலியை துரத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த புலி, வனத்துறை ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளது. உடனே மற்ற ஊழியர்கள் புலியை தாக்கியுள்ளனர். இதனால் புலி அந்த ஊழியரை தாக்குவதை விட்டுவிட்டு காட்டிற்குள் ஓடியது.
புலி தாக்கியத்தில் காயமைடந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
- கொல்கத்தாவை சேர்ந்த பிரபல ஃபேஷன் புகைப்படக் கலைஞர் தகதா கோஷ்.
- பயந்துபோன அந்த பெண் நிர்வாண படப்பிடிப்பிற்கு ஒப்புக்கொண்டாள்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பிரபல ஃபேஷன் புகைப்படக் கலைஞர் தகதா கோஷ். இவரின் குழுவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் என கூறி இரண்டு மோசடி பேர்வழிகள் இளம் பெண்களை ஏமாற்றி வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
போலி சமூக ஊடக கணக்குகளை தொடங்கி பிரதிக் பால் (37) மற்றும் தபன் பால் ஆகிய இருவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த கணக்குகள் மூலம் மாடல் ஆக விரும்பும் பெண்களை போட்டோஷூட்கள் நடத்துவதாகவும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டி ஸ்டுடியோவிற்கு வரவழைத்து நிர்வாண புகைப்படங்கள் எடுத்து பின்னர் வன்கொடுமை செய்துள்ளனர்.
22 மற்றும் 25 வயதுடைய இரண்டு பெண்கள் தாங்கள் ஏமாற்றப்ட்டை உணர்ந்து தற்போது முன்வந்து புகார் அளித்ததால் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் புகைப்படக்கலைஞர் தகதா கோஷ் நம்பரை கண்டுபிடித்து அவருக்கு போன் செய்து தங்களுக்கு நடந்தது பற்றி கூறியுள்ளனர்.
அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு போலீஸ் நிலையம் சென்று தகதா கோஷ், தனது பெயரில் நடந்த மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குற்றவாளி பிரதிக் பால் போலீசாரால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டான். தலைமறைவான மற்றொரு குற்றவாளி தபன் பால் தேடப்பட்டு வருகிறான்.
இதுகுறித்து போலீஸ் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்தப் பெண்களை ஆடிஷன்களுக்கு அழைத்துள்ளனர். முதல் பெண் மே-ஜூன் மாதங்களில் மத்தியம்கிராம் ஸ்டுடியோவிற்கு வந்தார். முதலில், ஒரு சாதாரண போட்டோஷூட் நடந்தது.
பின்னர், நிர்வாண போட்டோஷூட்கு வற்புறுத்தி உள்ளனர். அந்தப் பெண் மறுத்ததால், தனது மாடலிங் கனவை மறந்துவிடுமாறு அவளை மிரட்டியுள்ளனர். பயந்துபோன அந்த பெண் நிர்வாண படப்பிடிப்பிற்கு ஒப்புக்கொண்டாள். அப்போதுஇரண்டு ஆண்களும் அவளை பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்தச் செயலைப் படம்பிடித்தும் உள்ளனர்.
மாடலின் வாய்ப்புகளை எதிர்பார்த்து அந்த பெண் அமைதியாக இருந்தாள். ஆனால் அப்படி எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்துள்ளார். இரண்டாவது பெண் கடந்த அக்டோபரில் இதேபோன்ற முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் பல பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
- யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
- அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் ஹை ஆன் லவ் என்ற படங்களை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்தார். இந்த இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ரெஞ்சி பானிக்கர் தமிழில் நடிகராக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றூம் ஃபௌசி நடித்துள்ளனர்.
திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் நாளை வெளியாகவுள்ளது. பாடலிற்கு Awsum Kissa என தலைப்பு வைத்துள்ளனர்.
ஜோ திரைப்படத்தை தொடர்ந்து ரியோவிற்கு இப்படமும் வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முதல் இன்னிங்சில் 5 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.
- 2-வது இன்னிங்சில் 76 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 70 ரன்கள் விளாசினார்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் காலிறுதி போட்டி ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்று வரும் 3-வது காலிறுதி போட்டியில் மும்பை- ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
மும்பை அணியில் இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இடம்பிடித்துள்ளார். டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முலானி 91 ரன்களும், தனுஷ் கோட்டியான் 97 ரன்களும் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் முதல் இன்னிங்சில் 315 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ரகானே 31 ரன்களும், ஷிவம் துபே 28 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஹரியானா 301 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமான அங்கித் குமார் சிறப்பாக விளையாடி 136 ரன்கள் விளாசினார். இவரது சதத்தால் ஹரியானா 300 ரன்களை தாண்டியது.
பின்னர் 14 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான விளையாடினார். அவர் 86 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரகனுனே 71 ரன்களுடன் ஆட்டமிழக்காமல உள்ள மும்பை 4 விக்கெட் இழப்பிற்க 238 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
சூர்யகுமார் யாதவ் கடந்த சில போட்டிகளில் ரன்கள் குவிக்க திணறி வருகிறார். அவர் ஃபார்ம் அவுட்டில் உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 2-வது இன்னிங்சில் 70 ரன்கள் விளாசியது அவருக்கு உத்வேகத்தை கொடுக்கும்.
- வேகமாக வந்த பைக்கின் மீது மோதியதால் சிறுத்தைக்கும் காயம் ஏற்பட்டது.
- பின்னர் அந்த இடத்தை விட்டு சிறுத்தை மெதுவாக நடந்து சென்றது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பால்காரர் பைக்கில் வந்துகொண்டிருக்கும்போது சாலையை கடக்க வேகமாக ஓடிவந்த சிறுத்தை அவர்மீது மோதியதில் பால்காரர் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் கொண்டு வந்த பால் அனைத்தும் தரையில் கொட்டி வீணானது.
வேகமாக வந்த பைக்கின் மீது மோதியதால் சிறுத்தைக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த இடத்தை விட்டு சிறுத்தை மெதுவாக நடந்து சென்றது.
சத்தம் கேட்டு விபத்து நடந்த இடத்திற்கு வந்த இருவர் சாலையில் காயமடைந்த கிடந்த பால்காரரை காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் மணிக்கணக்கில் பசியையும் தாகத்தையும் எதிர்கொள்கின்றனர்.
- அனைவரையும் திருப்ப செல்லும்படி அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மகா கும்பமேளா
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெறும்.
உலகின் மிகப்பெரிய இந்த கலாசார, ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவுக்கு ரெயில் மற்றும் சாலை மார்கமாக பலவேறு இடங்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜுக்கு வரும் வழியில் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.
இதை உலகின் மிகப்பெரிய டிராபிக் ஜாம் என பலரும் குறிப்பிடுகின்றனர். 48 மணி நேரமாக வாகனங்கள் காத்துக்கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. சனி, ஞாயிறுகளில் அதிகப்படியான மக்கள் மகா கும்பமேளாவை நோக்கிப் படையெடுக்கின்றனர்.
டிராபிக் ஜாம்
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை ஒட்டி லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்தனர்.
இதனால் உத்தரப் பிரதேச எல்லை வரை சுமார் 200 முதல் 300 கிலோமீட்டருக்கு வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் யாரும் பிரயாக்ராஜுக்குள் சாலை மார்க்கமாக வர வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
பிரயாக்ராஜை இணைக்கும் வாரணாசி, ஜான்பூர், மிர்சாபூர், கௌசாம்பி, பிரதாப்கர், ரேவா மற்றும் கான்பூர் ஆகிய அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் வாகனங்களின் நீண்ட வரிசை மட்டுமே தென்படுகிறது.

மக்கள் அவதி
குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் மணிக்கணக்கில் பசியையும் தாகத்தையும் எதிர்கொள்கின்றனர். நகரத்திற்கு வெளியே உள்ள நெடுஞ்சாலையில் தனித்தனி வாகன நிறுத்துமிடங்களை நிர்வாகம் உருவாக்கியுள்ளது.
இருப்பினும், பெரும்பாலான பார்க்கிங் இடங்கள் நிரம்பியதால், வாகனங்கள் சாலைகளில் சிக்கித் தவிக்கின்றன. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய சிவில் மற்றும் போக்குவரத்து போலீசாரைத் தவிர, துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸ் அறிவுரை
மத்தியப் பிரதேசத்தின் கட்னி, ஜபல்பூர், மைஹார் மற்றும் ரேவா மாவட்டங்களில் சாலைகளில் பல ஆயிரம் கார்கள் மற்றும் டிரக்குகள் நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரேவா மாவட்டத்தில் உள்ள சக்காட்டில் கட்னி பகுதியில் இருந்து மத்தியப் பிரதேச- உத்தரப் பிரதேச எல்லை வரை 250 கிமீ தூரத்திற்கு மோசனமான டிராபிக் நிலவுகிறது.
சூழலை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகின்றனர். அனைவரையும் திருப்ப செல்லும்படி அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் பிரயாக்ராஜ் வந்து மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
போக்குவரத்து நெரிசல் குறித்து ஆளும் பாஜக அரசை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"நெரிசலில் சிக்கிக் கொண்ட மக்கள் மணிக்கணக்கில் தங்கள் வாகனங்களிலேயே அடைந்து கிடக்க நேர்கிறது. பெண்கள் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூட இடமில்லை. சாலைகளில் மயங்கி விழுபவர்களைக் கவனித்துக் கொள்ள எந்த ஏற்பாடும் இல்லை. பக்தர்களின் மொபைல் போன்களில் பேட்டரி தீர்ந்து போனதால், அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தொடர்பு மற்றும் தகவல் இல்லாததால், மக்களிடையே பதட்டம் அதிகரித்துள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த எந்தப் பொறுப்பான அமைச்சரோ அல்லது அதிகாரியோ இருப்பதாகத் தெரியவில்லை. முதலமைச்சர் முழுமையான தோல்வியடைந்துவிட்டார். துணை முதலமைச்சர் மற்றும் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல முக்கிய அமைச்சர்களும் காணவில்லை.
பொதுமக்களிடையே இருந்திருக்க வேண்டியவர்கள் வீட்டிலேயே அமர்ந்திருக்கிறார்கள். இரவும் பகலும் பசியும் தாகமும் தாங்காமல் களத்தில் நிற்கும் காவலர்களுக்கும், ஊழியர்களுக்கும், துப்புரவுப் பணியாளர்களுக்கும் உணவு மற்றும் தண்ணீருக்கு எந்த ஏற்பாடும் இல்லை என்று தெரிகிறது. அதிகாரிகள் அறைகளில் அமர்ந்து உத்தரவுகளை வழங்குகிறார்கள், ஆனால் களத்தில் இறங்குவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ்,
- இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு பணி சமீபத்தில் முடிவடைந்த நிலையில். படத்தின் டைட்டிலை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார். இப்படத்திற்கு கிஸ் என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் பரவி வருகின்றன. இத்திரைப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு






