என் மலர்
தலைப்புச்செய்திகள்
- திட்டமிட்டதை விட சற்று கால தாமதம் ஆனது.
- தாமதமாக வந்ததற்கான காரணத்தை கூறினார்.
மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அம்மாநிலத்தின் போபாலில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இன்று காலை தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள ஏற்கனவே திட்டமிட்டதை விட சற்று கால தாமதம் ஆனது.
இதையடுத்து, மாநாட்டில் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி முதலில் தாமதமாக வந்ததற்கு தன்னை மன்னிக்குமாறு கேட்டார். தொடர்ந்து பேசிய அவர், தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தை விளக்கி கூறினார்.
அப்போது பேசிய அவர், "இங்கு வந்ததும் மாநிலத்தில் தேர்வுகள் நடைபெற இருப்பதும், மாணவர்கள் அதில் பங்கேற்க செல்லும் நேரமும், நான் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வரும் நேரமும் ஒன்றாக இருந்தது. ஒரே நேரமாக இருப்பதால், நாம் வெளியே வந்தால், போக்குவரத்து மாற்றங்களால் மாணவரகள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்படலாம்.
இதன் காரணமாக ஆளுநர் மாளிகையில் இருந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்படுவது என முடிவு செய்தேன். இதனால் தான் நான் இங்கு வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. தாமதமானதால் ஏற்பட்ட இடையூறுக்கு மீண்டும் உங்கள் அனைவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.
- சில நேரங்களில் சொகுசு காரில், யாருக்கும் சந்தேகம் வராதபடி சென்று கொள்ளையடித்துள்ளார்.
- மீதி பணத்தை வர்த்தகத்தில் போடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். ஞானசேகரன் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சொகுசு வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சிறையில் உள்ள ஞானசேகரனிடம் விசாரணை நடத்துவதற்காக பள்ளிக்கரணை போலீசார் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்தனர். அவரிடம் பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஞானசேகரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-
ஞானசேகரன் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள சொகுசு வீடுகளை குறிவைத்து ஆட்டோ மற்றும் காரில் சென்று கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். குறிப்பாக சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாத பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, வீடுகளின் பின்பக்கம் வழியாக சென்று கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளார்.
சில நேரங்களில் சொகுசு காரில், யாருக்கும் சந்தேகம் வராதபடி சென்று கொள்ளையடித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பள்ளிக்கரணையில் ஒரு வீட்டில் கொள்ளை அடிக்கும் போது வெளிமாநில கூட்டாளி ஒருவரை ஞானசேகரன் அழைத்து சென்று இருப்பதும் தெரியவந்துள்ளது.
அவர் கொள்ளையடிப்ப தற்கு 'கூகுள் மேப்' பார்த்து சொகுசு பங்களாக்களை தேடினார். ஆட்கள் இல்லாத பங்களாக்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணிக்குள் ஆட்டோ, கார், ஜீப் ஆகியவற்றில் சென்று கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
7-வது கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற ஜீப்பில் சென்றபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். கொள்ளையடித்த நகைகளை அடகு கடையில் விற்று, ஒரு பங்கை 3 மனைவிகளுக்கும் பிரித்துக்கொடுத்தார். மீதி பணத்தை வர்த்தகத்தில் போடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.
அவர் இதுவரை 250 பவுனுக்கும் மேற்பட்ட நகைகளை கொள்ளையடித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் கானத்தூர், நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் இவர் மீது சுமார் 16-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சிறை சென்று வந்த பின்னர் திருந்தி வாழ போவதாக கூறி, பிரியாணி கடை நடத்தினார். காலையில் பிரியாணி கடை நடத்திவிட்டு, இரவில் காரில் சென்று சென்னை புறநகர் பகுதிகளில் கைவரிசை காட்டினார்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஞானசேகரனை 7 கொள்ளை வழக்குகளிலும் கைது செய்த பள்ளிக்கரணை போலீசார், கொள்ளையடித்த நகைகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். அவரிடம் இருந்து இதுவரை சுமார் 100 பவுன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். மீதமுள்ள 150 பவுன் நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வர்த்தகத்தில் போட்ட பணத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தமிழிசை பகிர்ந்துள்ளார்.
- இரும்பு பெண்ணாக நின்று கடுமையான அரசியல் சூழ்நிலைகளை துரும்பு என சமாளித்தவர் ஜெயலலிதா
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் இன்று வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மூத்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், "இரும்பு பெண்ணாக நின்று.. கடுமையான அரசியல் சூழ்நிலைகளை.. துரும்பு என்று சமாளித்து... கடுமையாகத் தெரிந்தாலும்.. மனதில் கரும்பு என்று... நிரூபித்து... கட்சி எல்லை கடந்து.. பெண்கள் விரும்பும் தலைவியாக.. வலம் வந்த... மரியாதைக்குரிய.. முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அவர்களை அவர் பிறந்த நாளில் நினைவு கூறுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏ அரவிந்தர் சிங் லவ்லி பொறுப்பேற்றார்.
- முன்னாள் முதல்வர் அதிஷி எதிர்க்கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைநகர் டெல்லிக்கு கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களை பாஜக கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. 22 இடங்களுடன் ஆம் ஆத்மி பின்தங்கியது.
பாஜக சார்பில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி சாலிமார் பாக் தொகுதி எம்எல்ஏ ரேகா குப்தா டெல்லி முதல்வராகப் பதவியேற்றார். எதிர்கட்சித் தலைவராக ஆம் ஆத்மி சார்பில் கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் அதிஷி எதிர்க்கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏ அரவிந்தர் சிங் லவ்லி, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின் டெல்லியில் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று (பிப்ரவரி 24) தொடங்கியது.
இதில் பாஜக கேபினட் அமைச்சர்களாக பர்வேஷ் சிங், கபில் சர்மா, பங்கஜ் குமார், ஆசிஷ் சூட், மஞ்சிந்தர் சிங், ரவீந்தர் சிங் ஆகியோர் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
- ரெயிலின் என்ஜின் பெட்டி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி உள்ளது.
- சறுக்கி கொண்டு சென்ற சரக்கு ரெயில் தானாகவே நின்றுள்ளது.
திருவாரூர் மாவட்டம், பேரளத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம், காரைக்கால் வரை அகல ரெயில் பாதை பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக அவ்வப்போது திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஜல்லி கற்கள் சரக்கு ரெயில் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
அதேபோல், இன்று (திங்கட்கிழமை) காலை ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டுள்ளது. 12 பெட்டிகள் கொண்ட இந்த சரக்கு ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரெயிலின் என்ஜின் பெட்டியானது தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி உள்ளது. இதனையடுத்து சிறிது தூரம் ஜல்லி கற்களில் சறுக்கி கொண்டு சென்ற சரக்கு ரெயில் தானாகவே நின்றுள்ளது.
பின்னர், ரெயில் டிரைவர் கொடுத்த தகவலில் அடிப்படையில் திருவாரூர் ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து, ரெயிலின் சக்கரம் கீழே இறங்கி கிடப்பதை பார்வையிட்டனர். பின்னர், என்ஜின் பெட்டியை தவிர்த்து மீதமுள்ள பெட்டிகளை மாற்று என்ஜின் மூலம் அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். இதனால் மற்ற ரெயில் போக்குவரத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
தொடர்ந்து, அந்த என்ஜின் பெட்டியை கிரேன் மூலம் அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டு, திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சரக்கு ரெயில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வன்னியர் சங்கம் சார்பில் சோழமண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்தது.
- மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் புறவழிச் சாலையில் வன்னியர் சங்கம் சார்பில் சோழமண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்தது.
மாநாட்டுக்கு வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார்.
இந்த மாநாட்டில் பேசிய ஏர்போர்ட் மூர்த்தி, "இந்த சமூகத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து நாம் தமிழராக ஒன்றிணைய வேண்டும். அப்படி நடந்தால் நாம் எவரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் இருக்காது" என்று பேசினார்.
இதனையடுத்து குறுக்கிட்டு பேசிய ராமதாஸ், "இனிமேல் பேச வருகின்றவர்கள் இரத்தின சுருக்கமாக பேச வேண்டும். இனிமேல் 1 நிமிடம் அல்ல அரை நிமிடத்தில் உங்கள் கருத்தை சொல்லுங்கள். சமயம், சமுதாயம், நல்லிணக்கம் அவ்வளவு தான் முடிந்துவிட்டது. , சாதி, மதம் எல்லாம் ஒன்றுதான் நல்ல இணக்கத்துடன் வாழ வேண்டும் என்று கூறினால் முடிந்து விட்டது. ஆகவே நிறைய பேர் பேச உள்ளதால் இரத்தின சுருக்கமாக பேச வேண்டும்" என்று தெரிவித்தார்.
- நிஃப்டி 165 புள்ளிகள் (0.73 சதவீதம்) வீழ்ச்சியுடன் தொடங்கி
- ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன
வாரத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 24) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
இன்று காலை 9.15 நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 536.05 புள்ளிகள் (0.71 சதவீதம்) சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 74,775 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 165 புள்ளிகள் (0.73 சதவீதம்) வீழ்ச்சியுடன் தொடங்கி 22,630 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஐடிசி, சன் பார்மா, மாருதி, சிப்லா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன.
கோட்டக் மஹிந்திரா,ஆக்சிஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஏசியன் பெயிண்ட், டைட்டன், ஹிந்துஸ்தான் லீவர், ஹீரோ மோட்டார்ஸ், பிரிட்டானியா, டாடா ஸ்டீல், அப்பல்லோ மருத்துவமனை பங்குகள் சரிவில் உள்ளன.
- முதல்வர் மருந்தகங்களால் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
- நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும்.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 முதல்வர் மருந்தகங்களின் விற்பனையை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையை மாற்றுவதற்காக முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
* முதல்வர் மருந்தகம் அமைக்க அரசு சார்பில் மானியம், கடன் உதவி வழங்கப்படுகிறது.
* 1000 மருந்தகங்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு செயல்பாட்டிற்கு வந்ததால் மகிழ்ச்சி.
* ஜெனரிக் மருந்துகளையும் மற்ற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் 1000 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
* திமுக அரசு சாதாரண சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கான எடுத்துக்காட்டு தான் முதல்வர் மருந்தகங்கள்.
* மருந்துகள் வாங்க அதிகமாக செலவாகிறது என பலர் தெரிவித்ததால் சுமையை குறைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
* மாவட்ட மருந்து கிடங்குகளில் இருந்து 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
* 48 மணி நேரத்தில் மருந்துகளை முதல்வர் மருந்தகத்திற்கு அனுப்ப வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* முதல்வர் மருந்தகங்களால் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
* நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும்.
* பொதுமக்களுக்கு தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்பட உள்ளது.
* கல்வியும், மருத்துவமும் தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள்.
* கல்வியில் சிறந்த மாநிலமாகவும், சிறந்த மருத்துவ கட்டமைப்பை உருவாக்கி அனைவருக்கும் தரமான மருத்துவம் வழங்க திட்டம்.
* கொரோனா காலத்தில் தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசியும் போட்டு மக்களை காப்பாற்றினோம்.
* மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் காலத்தை மாற்றி மக்களை தேடி மருத்துவத்தை கொண்டு சென்றோம்.
* மக்களுக்கான செலவுகளை செய்வதில் கணக்கு பார்ப்பதில்லை என்றார்.
- தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம்
- ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் இன்று வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று. சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
- நாட்டில் பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
- ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் விதிகளின்படி ஒளிபரப்பப்படும்
ஆப்கனிஸ்தானில் 'ரேடியோ பேகம்' என்ற பெண்கள் வானொலி கடந்த மார்ச் 2021 இல் சர்வதேச மகளிர் தினத்தன்று தொடங்கப்பட்டது.
இது முழுக்க முழுக்க ஆப்கானிய பெண்களால் இயங்கும் ஒரு வானொலி ஆகும். இதன்மூலம் ஏழாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆப்கானிய பள்ளி பாடத்திட்டத்தை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் இதன் இணை சேவையாக பேகம் டிவி என்ற சாட்டிலைட் தொலைக்காட்சியும் இயங்கி வந்தது.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கனிஸ்தானில் இருந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து அங்கு தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். மத அடிப்படைவாதத்துடன் செயல்படும் தாலிபான்கள் பெண்களுக்கான பல்வேறு உரிமைகளை முடக்கினர். நாட்டில் பெண்கள் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தாலிபான்கள் தடை விதித்தனர்.

'ரேடியோ பேகம்' தடை செய்யப்பட்டது. இந்த தடையை நீக்கும்படி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ரேடியோ பேகம் மீதான தடையை தாலிபான் அரசு நீக்கியுள்ளது.
தாலிபானின் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகம் நேற்று (சனிக்கிழமை) இரவு வெளியிட்ட அறிக்கையில், 'ரேடியோ பேகம்' செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதி கோரி பல முறை கோரிக்கைகள் வந்தன.
பத்திரிகை கொள்கைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் விதிகளின்படி ஒளிபரப்பப்படும் என்றும், எதிர்காலத்தில் எந்த மீறல்களையும் செய்யாது என்றும் அந்த நிலையம் உறுதி அளித்துள்ளதை அடுத்து தடை தளர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கைகள் மற்றும் விதிகள் என்ன என்பது குறித்து அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. இது தொடர்பாக ரேடியோ பேகம் நிலையமும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
- சென்னையிலும் அதனையொட்டிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
- கட்சியில் உள்ள ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. அவரது உருவப் படத்தை முக்கிய பகுதிகளில் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அன்னதானம், ரத்ததானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள்.
சென்னையில் அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் வாழை மரம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. தொண்டர்கள் காலையில் இருந்தே வரத் தொடங்கினார்கள். சென்னையிலும் அதனையொட்டிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வந்த போது திரண்டிருந்த தொண்டர்கள் புரட்சித் தலைவியின் புகழ் ஓங்குக! எடப்பாடி வாழ்க என கோஷங்களை முழங்கினர். அவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தலைமை கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 77 கிலோ பிரமாண்ட கேக்கினை வெட்டினார்.
கட்சியின் தலைமை நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கேக் வழங்கினார். அதனை தொடர்ந்து கட்சியில் உள்ள ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அவை தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, பா.பென்ஜமின், சோமசுந்தரம், அப்துல்ரகீம், மாதவரம் மூர்த்தி, ரமணா, சின்னையா, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ்பாபு, தி.நகர் சத்யா, வி.என்.ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி.கந்தன், அசோக், முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மற்றும் சந்தான கிருஷ்ணன்.
கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர் நங்கநல்லூர் வெ.பரணிபிரசாத், 193-வது வார்டு மாமன்ற உறுப்பினர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, கழக மாணவர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆ.பழனி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம்.ராமலிங்கம், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில்.வி.ஆயிரம் விளக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னையன் (எ) ஆறுமுகம் வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக பொருளாளர் வழக்கறிஞர் எம்.பாலாஜி, வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் இமானுவேல், மதுரவாயல் வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
- ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தில் ஜெ.தீபா இன்று பிறந்தநாள் விழா நடத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் இன்று வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தில் ஜெ.தீபா இன்று பிறந்தநாள் விழா நடத்தினார்.
அவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு அனைவரது மனதிலும் நிலைத்திருக்கும் இதற்கு முன்பு 3 முறை வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.






