என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கல்வியும், மருத்துவமும் தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- முதல்வர் மருந்தகங்களால் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
- நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும்.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 முதல்வர் மருந்தகங்களின் விற்பனையை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையை மாற்றுவதற்காக முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
* முதல்வர் மருந்தகம் அமைக்க அரசு சார்பில் மானியம், கடன் உதவி வழங்கப்படுகிறது.
* 1000 மருந்தகங்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு செயல்பாட்டிற்கு வந்ததால் மகிழ்ச்சி.
* ஜெனரிக் மருந்துகளையும் மற்ற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் 1000 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
* திமுக அரசு சாதாரண சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கான எடுத்துக்காட்டு தான் முதல்வர் மருந்தகங்கள்.
* மருந்துகள் வாங்க அதிகமாக செலவாகிறது என பலர் தெரிவித்ததால் சுமையை குறைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
* மாவட்ட மருந்து கிடங்குகளில் இருந்து 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
* 48 மணி நேரத்தில் மருந்துகளை முதல்வர் மருந்தகத்திற்கு அனுப்ப வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* முதல்வர் மருந்தகங்களால் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
* நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும்.
* பொதுமக்களுக்கு தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்பட உள்ளது.
* கல்வியும், மருத்துவமும் தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள்.
* கல்வியில் சிறந்த மாநிலமாகவும், சிறந்த மருத்துவ கட்டமைப்பை உருவாக்கி அனைவருக்கும் தரமான மருத்துவம் வழங்க திட்டம்.
* கொரோனா காலத்தில் தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசியும் போட்டு மக்களை காப்பாற்றினோம்.
* மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் காலத்தை மாற்றி மக்களை தேடி மருத்துவத்தை கொண்டு சென்றோம்.
* மக்களுக்கான செலவுகளை செய்வதில் கணக்கு பார்ப்பதில்லை என்றார்.






