என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் தரவில்லை? என பிரதமர் மோடியிடம் கேளுங்க.
    • மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை.

    மதுரையில் நடந்த திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அடுத்த 2 மாதங்களுக்கு நமக்கு ஓய்வே கிடையாது. அடுத்த 2 மாதங்களுக்கு உங்களுக்கும் சரி எனக்கும் சரி No Rest. வாக்குபதிவு அன்று பூத்துக்கு வந்து வாக்காளர்கள் நமக்கு வாக்கு செலுத்தும் வரை ஓய்வே இருக்க கூடாது!

    மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் தரவில்லை? என பிரதமர் மோடியிடம் கேளுங்க.

    மார்ச் 1ம் தேதி வருகை தரவுள்ள பிரதமரிடம், மதுரைக்கு ஏன் மெட்ரோ ரெயில் திட்டம் தரவில்லை? என மக்கள் கேட்க வேண்டும்.

    மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அப்பாவி பெண்கள் ஏமாற்றப்படுவது, மத மாற்றம் செய்வது என கலாசார ஊடுருவல் நடந்து வருகிறது.
    • படேல், தாக்கூர் மற்றும் சத்திரிய சமூகத்தினர் நீண்டகாலமாகக் கோரி வந்தனர்.

    குஜராத்தில் பதிவு திருமணம் செய்ய இனி பெற்றோர் சம்மதம் கட்டாயம் என என சட்டம் இயற்ற உள்ளதாக அங்கு ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது.

    குஜராத் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பேசிய ணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி, திருமண பதிவு முறையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்தார்.

    காதல் திருமணம் என்ற பெயரில் அப்பாவி பெண்கள் ஏமாற்றப்படுவது, மத மாற்றம் செய்வது என கலாசார ஊடுருவல் நடந்து வருவதாக கூறிய அவர், இதனை தடுக்கும் பொருட்டு திருமண பதிவு முறையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்தார்.

    பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் அரசு காதல் திருமணங்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் கூறினார்.

    இந்தத் திருத்தங்கள் குறித்து 30 நாட்களுக்குள் பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, ஒரு குழுவின் ஆய்வுக்குப் பிறகே இது இறுதிச் சட்டமாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள், தாங்கள் அந்த தகவலை பெற்றோருக்கு தெரிவித்துவிட்டோம் என்பதற்கான உறுதிமொழிப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    உதவிப் பதிவாளர் மணமக்களின் பெற்றோருக்குத் தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ தகவல் தெரிவிப்பார்.

    அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில், திருமணச் சான்றிதழ் வழங்கப்படும்.

    பெற்றோரின் அனுமதியின்றி நடக்கும் திருமணங்களை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று படேல், தாக்கூர் மற்றும் சத்திரிய சமூகத்தினர் நீண்டகாலமாகக் கோரி வந்த நிலையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

    ஆனால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

    வழக்கறிஞர் மகேஷ் பாரியா கூறுகையில், "இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்தை இது மீறுகிறது" என்று தெரிவித்துள்ளார். 

    • டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது.
    • தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது

    நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று (21-ம் தேதி) தொடங்குகிறது. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெறுகிறது.

    தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

    • மதுரையில் தென் மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு தொடங்கியுள்ளது.
    • கடந்த 2 மாதங்களில் மட்டும் பல்வேறு மாநாடுகளை திமுக நடத்தி இருக்கிறது.

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளததை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஆளும் கட்சி யான தி.மு.க. மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு மாநாடுகள், தேர்தல் சந்திப்பு கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    தி.மு.க. சார்பில் தொடர்ந்து தஞ்சையில் மகளிர் அணி மாநாடு, தாம்பரம், திருப்பத்தூரில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டங்கள், விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி மாநாடு என நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கூட்டங்களில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.

    அதன் தொடர்ச்சியாக மதுரையில் இன்று மாலை 5 மணிக்கு தென் மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு தொடங்கியுள்ளது.

    மாநாட்டிற்கு திறந்தவெளி வாகனத்தில் வருகை தந்த முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், மாநாட்டில் முதலமைச்சர் உரையாற்றியதாவது:-

    வீரம் என்றால் மதுரை, பாசம் என்றால் மதுரை, கோவில் என்றால் மதுரை, சாப்பாடு என்றால் மதுரை, இங்கு எல்லாமே பேமஸ் தான் சித்திரைத்திருவிழா போல கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து உற்சாகம் அடைகிறேன், இனி நாமதான், எப்போதுமே நாமதான்!

    கடந்த 2 மாதங்களில் மட்டும் பல்வேறு மாநாடுகளை திமுக நடத்தி இருக்கிறது. இந்த மாநாடுகள் எல்லாம் "வெறும் ட்ரெய்லர்தான்; மெயின் பிக்சர் திருச்சியில் இருக்கிறது".

    அடுத்த 2 மாதங்களுக்கு நமக்கு ஓய்வே கிடையாது. "ஒன்றிய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ்!"

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
    • 2 டிராகன் படம் கொண்ட புகைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ரூ.100 கோடி வசூலை கடந்து இப்படம் சாதனை படைத்தது.

    இந்நிலையில், டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 'டிராகன்- 2' பட அப்டேட்டை பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார். 2 டிராகன் படம் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து விரைவில் என்று பிரதீப் ரங்கநாதன் பதிவிட்டுள்ளார்.

    அதே போல், டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பதிவில், "டிராகன் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. Self made star பிரதீப் ரங்கநாதனுடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. மீண்டும் ஒருமுறை இந்த காம்போ ஒன்றிணையவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின் இந்த திட்டத்தை தொடர்ந்தது.
    • பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறும் பெண்களுக்கு ரூ.500 மட்டுமே வழங்கப்படுகிறது.

    மகாராஷ்டிராவில் கடந்த 2024 நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு சில மாதங்கள் முன் ஆளும் பாஜக கூட்டணி அரசு பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் லட்கி பாஹின் யோஜ்னாவை அறிமுகம் செய்தது.

    நவம்பரில் நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின் இந்த திட்டத்தை தொடர்ந்தது.

    ஆனால் இந்த திட்டத்தின் கீழ், 2024 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு 2.4 கோடியாக இருந்த பெண் பயனாளிகளின் எண்ணிக்கை, 2025 டிசம்பரில் 1.57 கோடியாக குறைப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 90 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    தீவிர சரிபார்ப்பு பணி, வங்கிக் கணக்கில் ஆதார் இணைக்கும் e-KYC செயல்முறையில் குளறுபடி எனக் கூறி பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறும் பெண்களுக்கு, இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.1,500-ல் இருந்து ஒரு பகுதி குறைக்கப்பட்டு, நிகர தொகையாக ரூ.500 மட்டுமே வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. 

     

    • இ.பி.எஸ்.காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்
    • அதிமுக வெற்றிபெற்றால் RSS தான் நாட்டை ஆளும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

    சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் படத்தை இபிஎஸ் பதிவிட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "அதிமுக காவி மயமாகி வருகிறது, பாஜக பிடியில் சென்றுவிட்டது என்பதை பிரதிபலிக்கும் செயல் இது. அதிமுக வெற்றிபெற்றால் RSS தான் நாட்டை ஆளும்" என்று தெரிவித்தார்.

    • தற்கொலைப்படை தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லஷ்கர் அமைப்பு இதனை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • கடந்த நவம்பர் 10 ஆம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்.

    தலைநகர் டெல்லியில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை, பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரித்த நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லஷ்கர் அமைப்பு இதனைத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சூழலில் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இரண்டு IED வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள ராய்யா புறக்காவல் நிலையம் அருகே ஒரு சந்தேகத்திற்கிடமான பையில் IED வெடிகுண்டு கண்டறியப்பட்டது.

    வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டது.

    அதேபோல ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சபபோரா பகுதியில் மற்றொரு IED கண்டறியப்பட்டது. ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து அதை செயலிழக்கச் செய்தனர்.

    கடந்த ஒரு வாரத்தில் வட காஷ்மீரில் கண்டெடுக்கப்படும் மூன்றாவது IED இதுவாகும். இதற்கு முன் பாரமுல்லா மற்றும் டாங்மார்க் சாலைகளிலும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.

    முன்னதாக கடந்த நவம்பர் 10 ஆம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த  தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு தொடர்பிருப்பதாக கருதப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. 

    • சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
    • மாநாட்டுதிடலின் முகப்பு அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    இந்தநிலையில் தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

    மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றுகிறார். துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வரவேற்கிறார். அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட, மாநகர செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறுகிறார்.

    மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம் , கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து கலந்து கொள்ள உள்ளனர். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

    இதையொட்டி கணியூர் டோல்கேட் அருகில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டுதிடலின் முகப்பு அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜிநேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். அவரது வழிகாட்டுதலின்பேரில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதிமுருகேசன் மாநாட்டு பந்தலில் நடைபெறும் பணிகளை உடனிருந்து கவனித்து வருகிறார்.

    மேற்கு மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 39 சட்டசபை தொகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

    மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு மாநாட்டு பந்தலிலேயே உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    • இந்தியா 176 ரன்கள் குவித்தது. ஸ்மிரிதி மந்தனா 82 ரன்கள் விளாசினார்.
    • ஆஸ்திரேலியாவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது.

    3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போடடி இன்று அடிலெய்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவிததது. ஸ்மிரிதி மந்தனா 82 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 59 ரன்களும் விளாசினர்.

    பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்தரேலியா களம் இறங்கியது. அந்த அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய மகளிர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஆஸ்லே கார்ட்னெர் அதிகபட்சமாக 57 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீ சாரணி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியிலும் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தன. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

    • சாலை அமைப்பதற்கான டெண்டரை பெற 11 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • 5 லட்சம் ரூபாய் வாங்கும்போது லோக்ஆயுக்தா போலீசார் பிடித்துள்ளனர்.

    கர்நாடக மாநிலத்தில் ஒப்பந்ததாரரிடம் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, பாஜக எம்.எல்.ஏ. சந்த்ரு லமானி லோக்ஆயுக்தா போலீசாரால் பிடிபட்டார்.

    கர்நாடகா மாநிலம் கடாக் மாநிலத்தில் உள்ள சின்சாலி பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் விஜய் புஜார். இவர் சிறு நீர்ப்பாசனம் துறையின் கீழ் சாலையோர சுவர் அமைப்பதற்கான வேலையை பெற முயன்றுள்ளார். அப்போது இந்த வேலையை அவருக்கு ஒதுக்குவதற்கு 11 லட்சம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. சந்த்ரு லமானி கேட்டதாக தெரிகிறது. இதனால் விஜய் புஜார் லோக்ஆயுக்தா போலீசாரிடம் புகார் அளித்தார்.

    இதனால் எம்.எல்.ஏ.-வை கையும் களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். ஒப்பந்ததாரர் 5 லட்சம் ரூபாய் கொடுக்க சம்மதம் தெரிவித்து எம்.எல்.ஏ.-விடம் பேசியுள்ளார். எம்.எல்.ஏ.-வும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து ஒப்பந்ததாரரிடம் இருந்து பணத்தை பெறும்போது போலீசார் எம்.எல்.ஏ-வை பிடித்தனர். எம்.எல்.ஏ.-வுடன் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருவதாக லோக் ஆயுக்தா போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • மணமகள் செல்வி வேலைக்காக ஜப்பான் சென்றபோது ஷூன்யா யாஷிமாக் உடன் காதல் ஏற்பட்டுள்ளது.
    • சென்னை பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.

    சென்னையில் உள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஜப்பான் மாப்பிள்ளைக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் நடைபெற்ற சுயமரியாதை திருமணம் நடைபெற்றுள்ளது.

    மணமகள் செல்வி வேலைக்காக ஜப்பான் சென்றபோது ஷூன்யா யாஷிமாக் உடன் காதல் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இருவரும் மதங்களைக் கடந்து சென்னை பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.

    ×