என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தேசிய குறியீடான நிஃப்டி 22,000 புள்ளிகளாக இருந்தது.
    • இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.

    பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று (செவ்வாய் கிழமை) காலை சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை குறியீடான பி.எஸ்.இ. சென்செக்ஸ் இன்று காலை 72,800 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. தேசிய குறியீடான நிஃப்டி 22,000 புள்ளிகளாக இருந்தது.

    இன்றைய நாளின் தொடக்கத்தில் (காலை 9.17 மணி நிலவரம்) பி.எஸ்.இ. சென்செக்ஸ் 378 புள்ளிகள் சரிவடைந்தது. நிஃப்டி 146 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியுள்ளது. சர்வதேச நிர்வாக முதலீடு விற்பனை, அமெரிக்க வரி விதிப்பு மற்றும் ரஷியா-உக்ரைன் போர் என பல்வேறு காரணங்களால் நேற்று (திங்கள்கிழமை) இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.

    நேற்றைய நிலவரப்படி சர்வதேச போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (எஃப்.ஐ.ஐ.) ரூ. 4 ஆயிரத்து 781 கோடி மதிப்பிலான விற்பனையை பதிவு செய்தனர். உள்நாட்டு நிர்வாக முதலீட்டாளர்கள் ரூ. 8 ஆயிரத்து 790 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையும் உயர்வு
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கு விற்பனையானது. தொடர்ந்து மறுநாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று விலை மாற்றமின்றி விற்பனையானது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,010-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,080-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    01-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    28-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,680

    27-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    03-03-2025- ஒரு கிராம் ரூ.106

    02-03-2025- ஒரு கிராம் ரூ.105

    01-03-2025- ஒரு கிராம் ரூ.105

    28-02-2025- ஒரு கிராம் ரூ.105

    27-02-2025- ஒரு கிராம் ரூ.106

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாகன தணிக்கை, போக்குவரத்தை சீர் செய்யும் போக்குவரத்து காவலர்களுக்கு ஏ.சி. ஹெல்மெட் வழங்கப்பட்டது.
    • காவலர்களுக்கு நாரால் செய்யப்பட்ட தொப்பியும், கண்ணாடியும் வழங்கப்பட்டன.

    சென்னையில் அதிகாலையில் காணப்பட்ட பனிமூட்டம் குறைந்து தற்போது வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    இந்நிலையில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து காவலர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஏ.சி. ஹெல்மெட் வழங்கினார்.

    வாகன தணிக்கை மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையர் சங்கர், கூடுதல் காவல் ஆணையர் பவானீஸ்வரி ஆகியோர் ஏ.சி. ஹெல்மெட் வழங்கினர். இதேபோல் காவலர்களுக்கு நாரால் செய்யப்பட்ட தொப்பியும், கண்ணாடியும் வழங்கப்பட்டன.

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • யோசனை மனிதர்களுக்கா அல்லது ரோபோக்களுக்கா?
    • குடிமகனுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.

    இந்தியாவில் தொழிலாளர்கள் "வாரம் 90 மணி நேரம் வேலை" என்று வாதிடுவோரை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார். மேலும், இத்தகைய யோசனை மனிதர்களுக்கா அல்லது ரோபோக்களுக்கா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    வேலையின் தரம், அதன் அளவை விட மிக முக்கியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து பேசும் போது, "மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் வாழ விரும்புகிறார்கள். ஒருசிலர் தான் பொருளாதார வளர்ச்சியால் பலன் அடைகிறார்கள். பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலர்களை எட்டுகிறதா அல்லது 100 டிரில்லியன் டாலர்களை எட்டுகிறதா என்பது சாதாரண குடிமகனுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது," என்று கூறினார்.

    "பொழுதுபோக்கு மற்றும் திரைப்படத் துறை பொருளாதாரத்திற்கு பில்லியன் கணக்கான பங்களிப்பை வழங்குகிறது. இது மக்கள் புத்துணர்ச்சியுடனும், புத்துயிர் பெற்றவர்களாகவும், மீண்டும் உற்சாகமாகவும் உணர உதவுகிறது, இது இறுதியில் வேலை தரத்தை மேம்படுத்துகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், நீண்ட வேலை நேரத்தை பரிந்துரைப்பவர்கள் தங்கள் இளமை பருவத்தில் இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றினார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசும் போது, "90 மணி நேர வேலையை ஆதரிப்பவர்கள், உண்மையிலேயே வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்திருந்தால், நமது பொருளாதாரம் ஏன் இந்த நிலையை மட்டுமே எட்டியுள்ளது?" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெய்லி வரும் சின்ன சின்ன கட்சிகள் திருவிழாவில் வரும் வாணவேடிக்கை போல.
    • இது கட்சி. அது கூட்டம். உயிரை கொடுப்பது இது.

    சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

    * டெய்லி வரும் சின்ன சின்ன கட்சிகள் திருவிழாவில் வரும் வாணவேடிக்கை போல...

    * இது கட்சி. அது கூட்டம். உயிரை கொடுப்பது இது. தலைமுடியை கூட (சைகையில்) கொடுக்க மாட்டார்கள். அதனால் அவர்களை பற்றி எல்லாம் பேசுறதும் கிடையாது. பேச வேண்டிய அவசியமும் கிடையாது.

    * தேர்தல் வர வர எல்லா கட்சியும் கரைந்து போய்விடும்; நம்மை எதிர்க்கும் கட்சி அ.தி.மு.க.வாகத் தான் இருக்கும். அவர்களை எதிர்க்கும் சக்தி நம்மிடம் உண்டு. மீண்டும் தி.மு.க. தான் என்று கூறினார்.

    • வறண்ட ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆடுவது சவாலாக இருக்கப்போகிறது.
    • இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிப்பதற்கு சில திட்டங்களை வகுத்துள்ளோம்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதுகிறது.

    2023-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டிராவிஸ் ஹெட் பிரமாதமாக விளையாடுவார் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வறண்ட ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆடுவது சவாலாக இருக்கப்போகிறது. வருண் சக்ரவர்த்தி மட்டுமல்ல மற்ற சுழற்பந்து வீச்சாளர்களும் திறமையானவர்கள் தான். அவர்களின் பந்து வீச்சை நாங்கள் அடித்து நொறுக்க வேண்டும். அதை சமாளிப்பதற்கு சில திட்டங்களை வகுத்துள்ளோம்.

    பெரிய போட்டிகளில் ஆடும் போது நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் இது போன்ற ஆட்டங்களில் டிராவிஸ் ஹெட் பிரமாதமாக விளையாடி இருக்கிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் (மழையால் பாதியில் ரத்து) அருமையாக பேட் செய்தார். இந்த ஆட்டத்திலும் அதே போல் ஆக்ரோஷமாக ஆடுவார் என்று நம்புகிறேன்.

    இந்தியா இங்கே எல்லா ஆட்டங்களிலும் விளையாடியது தெளிவாகத் தெரிகிறது. எனவே அவர்கள் பிட்ச் என்ன செய்கிறது என்பதைப் பார்த்திருக்கிறார்கள். அது ஒரு சாதகமா என்று எனக்குத் தெரியவில்லை.

    இவ்வாறு ஸ்மித் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடலை எடுத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.
    • காவல் துறையினர் சச்சின் என்ற நபரை நேற்று கைது செய்தனர்.

    அரியானா மாநிலம் ரோதக்கில் கொல்லப்பட்ட காங்கிரஸ் தொழிலாளி ஹிமானி நர்வாலின் வீட்டிற்கு வெளியே பதிவான ஒரு அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் குற்றம்சாட்டப்பட்ட சச்சின் ஒரு கருப்பு சூட்கேஸில் பெண்ணின் உடலை எடுத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

    கடந்த சனிக்கிழமை ரோதக்கில் உள்ள ஒரு பேருந்து நிலையம் அருகே சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் காவல் துறையினர் சச்சின் என்ற நபரை நேற்று கைது செய்தனர்.

    அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சச்சின் நர்வாலை மொபைல் போன் சார்ஜிங் கேபிளால் அவரைக் கொன்று, உடலை சூட்கேஸில் அடைத்து வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.

    சிசிடிவி வீடியோவில், குற்றம் சாட்டப்பட்டவர் அமைதியாக சூட்கேஸுடன் பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு தெரு வழியாக நடந்து செல்வதை காாண முடிகிறது. சிசிடிவி காட்சிகளை போலீசார் சரிபார்த்துள்ளனர்.

    சச்சினை அந்த பெண்ணின் நண்பர் என்று போலீசார் விவரித்துள்ளனர். பணம் தொடர்பாக ஏற்பட்ட சண்டைக்கு பிறகு காங்கிரஸ் பிரமுகரான நர்வாலின் கழுத்தை சச்சின் நெரித்துள்ளார்.

    அரியானாவின் ஜஜ்ஜார் பகுதியை சேர்ந்த சச்சின், பணம் தொடர்பான தகராறு காரணமாக காங்கிரஸ் பிரமுகரை கொன்றதாக அரியானா காவல் துறையினர் கூறினர். அவர் பாதிக்கப்பட்டவரின் நண்பர் என்றும், ரோதக்கில் உள்ள அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்வார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    "உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது, சிறப்பு விசாரணைக் குழுக்களை அமைத்தோம். பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது அவரை அடையாளம் காண்பதே எங்கள் முன்னுரிமையாக இருந்தது. குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டதும், குற்றம் சாட்டப்பட்டவரை கண்டுபிடிக்க போலீசார் விரைவான விசாரணைகளை மேற்கொண்டனர்."

    "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, குற்றம் சாட்டப்பட்டவர் சமூக ஊடகங்கள் மூலம் அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். மேலும் அவரது வீட்டிற்கும் சென்று வந்தார்," என்று கூடுதல் டிஜிபி கே.கே. ராவ் கூறியதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்கு பிறகு இந்த கொலை நடந்ததாக ராவ் கூறினார்.

    "இருவருக்கும் இடையே பணப் பிரச்சினை இருந்தது. ஆனால் அது என்ன, இதையெல்லாம் முதலில் சரிபார்க்க வேண்டும். இதுதான் கொலைக்கான காரணம் என்று நாங்கள் கூற முடியாது," என்று அவர் மேலும் கூறினார்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'நுணலும் தன் வாயால் கெடும்' என்று சொல்வார்கள் சீமான் தன்னுடைய வாயாலே தன்னை கெடுத்துக்கொண்டிருக்கிறார்.
    • கம்யூனிஸ்டுகள் என்றாலே போராட்டக்காரர்கள் என்று தான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்திய மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, பாலியல் வழக்கு குறித்து பேச தகுதியற்றவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர். காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளனர். பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறுகிறார்?. கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அதை பற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் வாய் திறக்கவில்லை என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் சீமான் கூறியதற்கு பதில் அளித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

    'நுணலும் தன் வாயால் கெடும்' என்று சொல்வார்கள் சீமான் தன்னுடைய வாயாலே தன்னை கெடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு அவரது ஏராளமான ஊடக பேட்டிகள், மேடை பேச்சுகள் ஒரு உதாரணம்.

    பிரச்சனைகளை பட்டியலிட்டு இதில் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்தார்கள் என்று அவர் கேள்வி கேட்டு இருக்கிறார்.

    அவர் பட்டியலிட்ட எல்லா பிரச்சனைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப் போராட்டத்தில் நின்று, பலவற்றில் வெற்றி பெற்றுள்ளோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்.

    இந்த போராட்டம் நடைபெற்ற காலம் முழுவதும் சீமான் கருத்து கந்தசாமியாகவும், வாயால் வடை சுடுகிற வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தார். அவர் களப் போராட்டத்திற்கு என்றுமே வந்ததில்லை என்பதை சம்பந்தப்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிற மக்கள் அறிவார்கள்.

    அதனால் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்களா என்ற சான்றிதழ்களை சீமான் போன்றவர்கள் வழங்க வேண்டியதில்லை. கம்யூனிஸ்டுகள் என்றாலே அவர்கள் போராட்டக்காரர்கள் என்று தான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்திய மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

    ஆகவே சீமானிடம் இருந்து கம்யூனிஸ்டுகளுக்கான சான்றிதழை பெற வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமூக சேவை செய்ய மனதில் தைரியம், ஆசை யாருக்கெல்லாம் இருக்கோ அவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரலாம்.
    • மனிதனின் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் திணிக்க முடியாது.

    சென்னை கோடம்பாக்கத்தில் விஷால் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார் இல்ல நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பங்கேற்றார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த விஷாலிடம் விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் கூறுகையில்,

    விஜய் முதலில் செய்தியாளர்களை சந்திக்கட்டும். அவர் செய்தியாளர்களை சந்தித்தால் நீங்க கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் வரும். சமூக சேவை செய்ய மனதில் தைரியம், ஆசை யாருக்கெல்லாம் இருக்கோ அவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரலாம்.

    எல்லா பள்ளிகளிலும் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. அப்படி நீங்க மும்மொழியை ஒழிக்கணும்னா எல்லா பள்ளிகளிலும் ஒழிக்கணும்.

    மனிதனின் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் திணிக்க முடியாது. அது வெற்றி அடையாது. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி. பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்2 மாணவர்களுக்கு வாழ்த்துகள். நல்ல படிங்க என்றார்.

    மேலும், சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் போல் மேலே கை காமித்து, நல்லதா நடக்கும் என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு.
    • அவர் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட பிறகு பிரபலமான ஐ.ஐ.டி. பாபா கஞ்சா வழக்கில் கைதான சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர் மீது போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஐ.ஐ.டி. பாம்பேயில் பட்டம் பெற்ற அபய் சிங் (ஐ.ஐ.டி. பாபா) மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட பிறகு பிரபலமடைந்தார். உண்மையை தேடிய பயணத்தால் ஆன்மிகத்தில் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்த அபய் சிங் பிறகு ஐ.ஐ.டி. பாபாவாக உருவெடுத்தார்.

    இந்த நிலையில், ஜெய்ப்பூரை அடுத்த ரித்தி சித்தி பகுதியில் செயல்பட்டு வரும் ஓட்டல் ஒன்றில் ஐ.ஐ.டி. பாபா பிரச்சினை செய்வதாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஐ.ஐ.டி. பாபாவை கைது செய்து, அவர் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    நிர்ணயிக்கப்பட்டதை விட குறைந்த அளவில் கஞ்சா வைத்திருந்ததை அடுத்து ஐ.ஐ.டி. பாபா மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், பிறகு அவரை ஜாமினில் விடுவித்தனர்.

    இது குறித்து பேசிய ஐ.ஐ.டி. பாபா, "நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த காவல் துறையினர் என்னை கைது செய்தனர். அவர்களுக்கு நான் பிரச்சினை செய்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததாக என்னிடம் கூறினர். அந்த காரணம் எனக்கு வினோதமாக இருந்தது. கும்பமேளாவில் ஒவ்வொரு பாபாவும் கஞ்சாவை பிரசாதமாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவரையும் கைது செய்வீர்களா?" என்று கூறினார்.

    • ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
    • சட்டத்துக்கு உட்பட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயன்று வருவதாக பேடிஎம் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓ.சி.எல்., அதன் நிர்வாக இயக்குனர், அதன் துணை நிறுவனங்களான லிட்டில் இன்டர்நெட், நியர்பை இண்டியா ஆகியோருக்கு அமலாக்கத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    மேற்கண்ட நிறுவனங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்தது, வெளிநாட்டில் இருந்து அன்னிய நேரடி முதலீடு பெற்றது போன்றவற்றில் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட (பெமா) விதிமுறைகளை மீறியதாகவும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறியதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.

    3 நிறுவனங்களும் மொத்தம் ரூ.611 கோடி அளவுக்கு பண பரிமாற்றம் செய்ததில் இந்த விதிமீறல்களில் ஈடுபட்டதால், நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

    சட்டத்துக்கு உட்பட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயன்று வருவதாக பேடிஎம் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

    ×