என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஐபிஎல் 2025 சீசனின் 5வது போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
    • முதலில் ஆடிய பஞ்சாப் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால் 243 ரன்களைக் குவித்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 27 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் மிரட்டினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். கடைசி கட்டத்தில் இறங்கிய சஷாங்க் சிங் அதிரடி காட்டினார்.

    இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களைக் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்னும், சஷாங்க் சிங் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 21 பந்தில் 81 ரன்களை சேர்த்தது.

    இதையடுத்து, 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

    • நடிகர் மனோஜின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ்.

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பு ஏற்பட்டு இன்று மாலை காலமானார்.

    இவரது மறைவின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் மனோஜின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.

    இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமியுடன் தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகளும் அமித்ஷாவுடன் சந்தித்துள்ளனர்.
    • கொள்கை வேறு கூட்டணி வேறு என அண்மையில் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் சந்திப்பு.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் செய்தார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை காண செல்ல உள்ளதாக கூறினர்.

    டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமி அங்கு புதிதாக கட்டப்பட்டு காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட்டார்.

    பின்னர் பேசிய அவர், "பிரத்யேகமான நபரை பார்க்க வரவில்லை. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தை பார்வையிடவே வந்துள்ளேன்" என்றார்.

    இருப்பினும், சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் திடீர் பயணம் கூட்டணி குறித்தாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

    2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக்கு ஆயத்தமாகிறாரா எடப்பாடி பழனிசாமி என அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கொள்கை வேறு கூட்டணி வேறு என அண்மையில் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் அமித்ஷாவை சந்தித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகளும் அமித்ஷாவுடன் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • பஞ்சாப் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் அரை சதமடித்து அசத்தினார்.

    அகமதாபாத்:

    ஐபிஎல் 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. இதில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை எடுத்தது.

    இதற்கிடையே, ஆட்டத்தின் 11வது ஓவரில் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

    இந்நிலையில், பஞ்சாப் வீரர் கிளென் மேக்ஸ்வெல் 19வது முறையாக டக் அவுட்டாகி ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.

    • டொவினோ தாமஸ் அடுத்ததாக நரிவேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • நரிவேட்டை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி வெளியாகும்ம் பிருதிவிராஜ் இயக்கத்தில் வெளியாகும் எம்புரான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நரிவேட்டை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    • இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார்.
    • கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

    ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் கடைசியாக ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் தொடரில் நடித்து இருந்தார்.

     

    இந்நிலையில் மனோஜ் மாரடைப்பு காரணமாக அவரது வீட்டில் இன்று மாலை காலமானார். இவருக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.  இச்செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோஜுக்கு திரைத்துறை சார்ந்தவர்கள் அவர்களது இரங்கலை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹம்தான் பல்லால் இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் கடுமையாக தாக்கப்பட்டார்.
    • பின்னர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டபோது, இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது.

    'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றவர் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இவர் இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்துள்ள பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் (west bank) இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். தற்போது இஸ்ரேல் ராணுவம் இவரை விடுதலை செய்துள்ளது.

    இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்ட நிலையில், ஹம்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இஸ்ரேல் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழும்பின.

    இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம், "நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொண்டிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.

    பயங்கரவாதிகள் (பாலஸ்தீனியர்கள்) இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பாலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்" எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் ஹம்தான் பல்லால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேற்கு கரையில் உள்ள கிர்யாத் அர்பா காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியதை பத்திரிகையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

    அவருடன் மேலும் இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பல்லால் முகத்தில் கடுமையான காயமும், அவர் அணிந்திருந்த ஆடையில் ரத்தக்கறை படிந்திருந்ததாகவும் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

    • ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST
    • திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.

    விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

    இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். நயன் தாரா , மாதவனின் மனைவி குமுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

    டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.

    • 27ம் தேதி முதல் ஈரப்பதம் இல்லாத சூழல் உள்ளதால் வெயில் அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
    • வேலூரில் வரும் 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.

    தமிழகத்தில் வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல இடங்களில் வெயில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    27ம் தேதி முதல் ஈரப்பதம் இல்லாத சூழல் உள்ளதால் வெயில் அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது.

    குறிப்பாக, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    வெயில் காலத்தில் எப்போதும் சதம் அடிக்கும் வேலூர் மாவட்டத்தில், 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.

    வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்கும்படி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    • ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.
    • பாரத ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன்.

    ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதம் வரலாறாகிவிட்டு என மத்திய உள்துறை அமைச்சர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஹரியத்தின் இரண்டு அமைப்புகளான ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.

    பாரத ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். இதைபோன்று அனைத்து அமைப்புகள் (குழுக்கள்) முன்வந்து பிரிவினைவாதத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    வளர்ந்த, அமைதியான மற்றும் ஒன்றுபட்ட பாரதத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இது ஒரு பெரிய வெற்றியாகும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • ஐபிஎல் 2025 சீசனின் 5வது போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
    • இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்கிறது.

    குஜராத் டைட்டன்ஸ்:

    சுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர், சாய் சுதர்சன், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா, சாய் கிஷோர், அர்ஷத் கான், ரஷித் கான், காகிசோ ரபாடா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    இம்பேக்ட் பிளேயர்ஸ்:

    ஷெர்பேன் ரூதர்போர்டு, கிளேன் பிலிப்ஸ், இஷாந்த் சர்மா, அனுஜ் ராவத், வாஷிங்டன் சுந்தர்.

    பஞ்சாப் கிங்ஸ்:

    பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், சூர்யான்ஷ் ஷெட்ஜ், அஸ்மதுல்லா உமர்சாய், மார்கோ யான்சன், அர்ஷ்தீப் சிங், சாஹல்.

    இம்பேக்ட் பிளேயர்ஸ்:

    நேஹல் வதேரா, பிரவீன் துபே, வைஷாக், ஹர்பிரித் பரார், விஷ்ணு வினோத்.

    • யூனியன் பிரதேசம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது.
    • பாராளுமன்றத்தில் நம்முடைய மாநில அந்தஸ்தை திரும்பப்பெறும் வரை, நாம் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகத்தான் இருப்போம்.

    ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) சட்டம் 2017, திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் என குறிப்பிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    மக்கள் மாநாட்டு கட்சி உறுப்பினர் சஜாத் கானி லோன், இந்த மசோதாவை நிறைவேற்றியது, சட்டமன்றத்தால் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசம் என அங்கீகரிப்பதாகிவிடும் விமர்சித்தார்.

    இதற்கு பதில் அளித்து முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:-

    யூனியன் பிரதேசம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. துரதிருஷ்டவசமாக, பாராளுமன்றத்தில் நம்முடைய மாநில அந்தஸ்தை திரும்பப்பெறும் வரை, நாம் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகத்தான் இருப்போம். எனவே, இதை அரசியலாக்க வேண்டாம்.

    ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் பெற வேண்டும். Inshallah, அதை மீட்டெடுப்போம். யூனியன் பிரதேசம் என்ற வார்த்தையை நீக்குவது நம்முடைய யதார்த்தத்தை மாற்றாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் யூனியன் பிரதேசம்தான். இந்த அரசாங்கம் யூனியன் பிரதேசமாக ஆட்சி செய்கிறது.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    ×