என் மலர்
நீங்கள் தேடியது "இயக்குனர் பாரதிராஜா"
- உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜாவுக்கு வீசிங் போன்ற சுவாச பிரச்சனைகளும் ஏற்பட்டது.
- அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார்.
'சிவப்பு ரோஜாக்கள்', 'கிழக்கு சீமையிலே', 'முதல் மரியாதை', 'வேதம் புதிது' என தனது படைப்புகளால் இந்திய சினிமாவையே கவனிக்க வைத்த இயக்குனர் பாரதிராஜா, தனது மகன் மனோஜ் மறைவுக்கு பிறகு (கடந்த மார்ச் மாதம்) மனமுடைந்து போனார்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜாவுக்கு வீசிங் போன்ற சுவாச பிரச்சனைகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாரதிராஜா உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவ குழுவினரால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு கடுமையான நுரையீரல் தொற்று இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
- பாரதிராஜாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. இவர் இயக்குநர் இமயம் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். முன்னணி நடிகர்கள், நடிகைகளை கொண்டு படத்தை இயக்கியதோடு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார்.
இதனிடையே, கடந்த ஆண்டு பாரதி ராஜாவின் ஒரே மகனும் நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா திடீரென காலமானார். தனது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவால் ஏற்பட்ட துயரத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த நிலையில், மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து, பின்னர் சென்னை திரும்பினார். தற்போது 80 வயதை கடந்துள்ள பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில், பாரதிராஜாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷிற்கு தாத்தா கேரக்டரில் நடித்திருந்தார்.
- மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து பின்னர் சென்னை திரும்பினார்.
'16 வயதினிலே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதி ராஜா. அவரது முதல் படத்திலேயே ரஜினி, கமல், ஸ்ரீதேவி என முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படத்தை இயக்கினார்.
தொடர்ந்து பல படங்களை இயக்கிய பாரதிராஜா ராதிகா, ராதா, கார்த்திக் உட்பட பல முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்த பெருமை இவரை சாரும். முதல் மரியாதை, கிழக்கே போகும் ரெயில், அலைகள் ஓய்வதில்லை உட்பட பல வெற்றி படங்களை இயக்கியிருக்கிறார். இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் படங்களில் நடித்துள்ளார்.
திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷிற்கு தாத்தா கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது ஒரே மகனும் நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் திடீரென காலமானார். மகன் மரணம் பாரதி ராஜாவை மிகவும் நிலைகுலைய செய்தது. இதை தொடர்ந்து மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து பின்னர் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் 80 வயதை கடந்துள்ள பாரதிராஜா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாரதிராஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் பாரதிராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நடிகர் மனோஜின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ்.
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பு ஏற்பட்டு இன்று மாலை காலமானார்.
இவரது மறைவின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் மனோஜின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.
இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாரதிராஜா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- அவர் பூரண நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் வாழ்த்து.
இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து, அவரது மனைவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். இயக்குநர் பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் பூரண நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரதிராஜாவின் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.






