என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
    • இந்த க்யூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    தொடக்க விழா இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

    விழாவிற்கு பல திரைப்பிரபலங்கள் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி நட்சத்திர நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் இந்த விழாவில் கலந்துக் கொண்டார். இவர்களுடன் கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெனிலியா, மணிகண்டன், ஷ்ரத்தா ஸ்ரீனாத், மோகன் ராஜா, அதர்வா மற்றும் பலர் கலந்து கொண்டு ரவி மோகனை வாழ்த்தினர்.

    ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை இந்த விழாவில் தொடங்கினர்.

    மேலும் விழாவில் ஜெனிலியா - ரவி மோகன் இணைந்து நடித்து சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இடம் பெற்ற பிரபல காஃபி ஷாப் சீனை ரீகிரியேட் செய்தனர். இந்த க்யூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

    • இலங்கையின் ஜனாதிபதியாக 2022 முதல் 2024 வரை பணியாற்றியவர் ரணில் விக்ரமசிங்கே.
    • அரசுப்பணத்தை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் 2025 ஆகஸ்ட் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    இலங்கை அதிபராக 2022 முதல் 2024 வரை பணியாற்றியவர் ரணில் விக்ரமசிங்கே. ஆறு முறை பிரதமராகவும் இருந்தவர்.

    இவர் அதிபராக இருந்த போது அரசுப்பணத்தை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் 2025 ஆகஸ்ட் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மருத்துவ காரணங்களுக்காக ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

    • ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
    • ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை இந்த விழாவில் தொடங்கினர்.

    நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    தொடக்க விழா இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

    விழாவிற்கு பல திரைப்பிரபலங்கள் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி நட்சத்திர நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் இந்த விழாவில் கலந்துக் கொண்டார். இவர்களுடன் கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெனிலியா, மணிகண்டன், ஷ்ரத்தா ஸ்ரீனாத், மோகன் ராஜா, அதர்வா மற்றும் பலர் கலந்து கொண்டு ரவி மோகனை வாழ்த்தினர்.

    ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை இந்த விழாவில் தொடங்கினர்.

    இந்த விழாவில் ரவி மோகன் கூறியதாவது "என்னுடைய குடும்பம், ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரும் இங்கு வந்துள்ளீர்கள் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் சமீபத்தில் என் மீது பல எதிர்மறை விமர்சனங்கள் எழும்பியது. என் சொத்துக்கள் முடக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த பணம் , சொத்து எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாக இல்லை. என் உண்மையான சொத்து என்றும் நீங்கள் தான், குடும்பம், நண்பர்கள் மட்டுமே. இந்த சொத்தை யார் சம்பாதிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். என்ன வாழ்த்த வேண்டாம்-ன்னு சில பேர் இருக்காங்க. அவங்களுக்கு நான் சொல்றது ஒன்னே ஒன்னுதான், இங்கதான் இருப்பேன் வளர்ந்துட்டே இருப்பேன். நன்றி" என கூறினார்.

    • வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னாள் நடுவர் பக்னர் இந்தியா மற்றும் சச்சினுக்கு எதிராக நிறைய தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
    • 2008 ஆஸ்திரேலிய தொடரில் அவர் வழங்கிய மோசமான தீர்ப்புகள் இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் ரெடிட் சமூக வலைதளப்பக்கத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் ரெடிட் இணையத்தில் அவ்வப்போது சச்சின் டெண்டுல்கர் நேரலையில் தோன்றி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை கொடுத்து வருகிறார்.

    அந்த வகையில் நேற்று அவர் ரசிகர்களிடம் பேசினார். அப்போது சச்சின் டெண்டுல்கரிடம் நிறைய ரசிகர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பினார்கள்.

    அதில் ஸ்டீவ் பக்னர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் பேட்டிங் செய்யும் போது அவருடைய கைகளுக்கு குத்துச்சண்டை கையுறைகளை (பாக்ஸிங் கிளவுஸ்) வழங்குங்கள். அப்போது தான் அவரால் தன்னுடைய விரலை உயர்த்த முடியாது. என்று கலகலப்பான பதிலை கொடுத்தார்.

    ஏனெனில் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னாள் அம்பயர் பக்னர் இந்தியா மற்றும் சச்சினுக்கு எதிராக நிறைய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

    குறிப்பாக 2008 ஆஸ்திரேலிய தொடரில் அவர் வழங்கிய மோசமான தீர்ப்புகள் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தது. அதே போல சச்சின் டெண்டுல்கரை பார்த்தாலே அவர் எதிரணி விக்கெட் கேட்டால் உடனடியாக கையை உயர்த்தி அவுட் வழங்கி விடுவார்.

    அவராலேயே சச்சின் டெண்டுல்கர் குறைந்தது 5 முதல் 7 சதங்களை தவற விட்டிருப்பார் என்றே சொல்லலாம். 

    • நடிகை ப்ரீத்தி முகுந்தன் தற்போது மலையாள சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.
    • திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது.

    நடிகை ப்ரீத்தி முகுந்தன் தற்போது மலையாள சினிமாவில் களம் இறங்கியுள்ளார். மலையாளத்தில் மைனே பியார் கியா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான ஃபைசல் இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக ஹ்ரிது ஹருன் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் முரா, All We Imagine As Light போன்ற படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இவர்களுடன் அஸ்கர் அலி, மிதுன், ஜெகதிஷ், முஸ்தஃபா, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஜியொ பேபி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது.

    திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 147 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஒரே நேரத்தில் இரண்டு மிகப்பெரிய கப்பல், கடற்படையில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
    • சூப்பர் சோனிக், பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை கடலில் உள்ள இலக்குகளுக்கு எதிராக செலுத்த முடியும்.

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் ஹிமகிரி, ஐஎன்எஸ் உதயகிரி ஆகிய இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கப்பட்டன.

    இந்தக் கப்பல்களில் இருந்து சூப்பர் சோனிக், பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை கடலில் உள்ள இலக்குகளுக்கு எதிராக செலுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.

    ஒரே நேரத்தில் இரண்டு மிகப்பெரிய கப்பல், கடற்படையில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஹிமகிரி கப்பல் கொல்கத்தாவில் கட்டப்பட்டது. உதயகிரி மும்பையில் கட்டப்பட்டுள்ளது.

    நாட்டுக்கு அர்ப்பணிக்கும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

    • கல்லூரி பாதை பெயர் ஜெய்சங்கர் சாலை என மாற்ற அரசாணை வெளியீடு.
    • கல்லூரி பாதையில் இருந்து வீட்டில் பல ஆண்டுகள் ஜெய்சங்கர் வசித்துள்ளார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் பெயரை (College lane) ஜெய்சங்கர் சாலை என்று மாற்றம் செய்ய அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. கல்லூரி பாதையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்து வந்த நடிகர் ஜெய்சங்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    • குழந்தைகளின் ஹெல்த் டெவலப் ஆகியிருக்கிறது.
    • ஒரு திட்டம் மிக மிகச் சிறப்பானது என்றால், மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றுவார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்க தொடக்க விழா சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று காலை நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு நேரில் சென்று காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அவரு டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் காலை உணவை சாப்பிட்டனர்.

    அங்கு நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    காலையிலே இங்கே வந்து குழந்தைகளுடன் உணவு சாப்பிட்ட உடனே இந்த குழந்தைகள் மாதிரி எனக்கும் 'எனர்ஜி' வந்திருச்சு.

    எப்படி இன்றைக்கு முழுக்க நீங்கள் ஆக்டிவ் ஆக இருப்பீர்களோ, அப்படி எனக்கும் இது ஆக்டிவ் ஆன டே தான். ஆக்டிவ் ஆன டே மட்டுமல்ல மனசுக்கு ரொம்ப நிறைவான நாள்.

    இந்த திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் என்றால், இதை விட மனநிறைவு என்ன இருக்க முடியும். அடுத்து இது மகிழ்ச்சிக்கு உரிய நாளும் கூட. ஏனென்றால் மதிப்புமிகு பஞ்சாப் முதல்-மந்திரி எனது நண்பர் பகவந்த் மான் இங்கு வந்துள்ளார். அவரை தமிழக மக்கள் சார்பாக வரவேற்கிறேன்.

    இதற்கு முன்பு இப்போது நாடே திரும்பி பார்க்கிற புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைக்க டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார்.

    இப்போது இந்த திட்டத்துக்கு பகவந்த்மான் வந்திருக்கிறார். தனது பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி வருகை தந்திருக்க கூடிய பஞ்சாப் முதல்-மந்திரிக்கு மனமார்ந்த நன்றி.

    பசியும் பிணியும் பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடாக பாராட்டப்படும் என்று சொல்லப்பட்டு உள்ளது. வள்ளுவர் வாக்குக்கு இலக்கணமாக இன்றைய நிகழ்ச்சி அமைந்துள்ளது.

    கல்வி அறிவை வழங்கும் இடமாக மட்டும் பள்ளிகள் இருக்கக் கூடாது. வயிற்றுப் பசியையும் போக்கணும். நீதிக்கட்சி காலத்தில் நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றபோது, அப்போது சென்னை மாநகராட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பெருந்தலை வர் காமராஜர் ஆட்சியில் மதிய உணவு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. தொடர்ச்சியாக காலை உணவு திட்டத்தை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடங்கினோம்.

    இந்த திட்டத்தை தொடங்க காரணம் என்ன என்றால், ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாளில் சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளிக்கு போனபோது, அங்கிருந்த மாணவிகளிடம் காலையிலே என்ன சாப்பிட்டீர்கள் என்று சாதாரணமாக கேட்டேன்.

    ஆனால் நிறைய குழந்தைகள் சாப்பிடவில்லை என்று சொன்னார்கள். சில மாணவிகள் டீ மட்டும் குடித்து விட்டு வந்துட்டேன். 'பன்' சாப்பிட்டேன் இந்த மாதிரி சொன்னாங்க. இதை மனதில் வைத்துதான் காலை உணவு திட்டம் தேவை என்பதை அரசின் கொள்கையாக அறிவித்தேன்.

    2022-ம் ஆண்டு செப் டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன். முதல் கட்டமாக 1,545 பள்ளிகளில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைந்தார்கள்.

    பிறகு 25.8.2023 அன்று கலைஞர் பிறந்த திருக்கு வளையில் எல்லா அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இதை விரிவாக்கம் செய்தோம். 2024-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தார்கள்.

    இந்த திட்டத்தோட அட்டகாசமான சக்சஸ் பற்றி கொடுக்கக்கூடிய அபாரமான ரிசல்ட்டை பார்த்து இனி நகர் பகுதிகளில் செயல்படுகிற 2,429 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்கிறோம்.

    இதனால் கூடுதலாக 3 லட்சத்து 6 ஆயிரம் குழந்தைகள் பயன் பெற போகிறார்கள். இனி தமிழ்நாட்டில் செயல்படுகிற 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கக் கூடிய 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினமும் காலையில் சூடாக சுவையாக, சத்தாக சாப்பிட்டு பள்ளி வகுப்பறையில் தெம்பாக நுழையப் போகிறார்கள்.

    ஆண்டு ஒன்றுக்கு ரூ.600 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இதை செலவு என்று சொல்ல மாட்டேன். இது ஒரு சூப்பரான சோசியல் இன்வெஸ்ட்மெண்ட் (முதலீடு) இது.

    எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல மடங்கு லாபத்தை தமிழ் சமுதாயத்துக்கு தரப் போகிற முதலீடு இது.

    என் தமிழ்நாட்டு மாணவ செல்வங்களை நம்பி அவர்களின் திறமை மீது, அறிவு மீது, ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாடு அரசு இந்த முதலீட்டை செய்கிறோம்.

    நீங்கள் எல்லோரும் நன்றாக படித்து முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் பணியாற்றினால் அதுதான் இந்த திட்டத்தோட உண்மையான வெற்றி.

    இன்னும் கொஞ்சம் இறுமாப்போடு சொல்ல வேண்டும் என்றால், இனிமேல், பள்ளிக்கு வருகின்ற குழந்தைகள், பசி காரணமாக வாடிய முகத்துடனும், சோர்வுடனும் இருக்க மாட்டார்கள். புன்னகையும், நம்பிக்கையும், ஆர்வமும், சுறுசுறுப்பும் நிரம்பிய முகங்களைத்தான் இனி பார்க்கப் போகிறோம்.

    காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, நான் இதை க்ளோசா…மானிட்டர் செய்து கொண்டு வருகி றேன். மாநில திட்டக்குழு மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பசி இல்லாத நிலை, பிள்ளைகள் வயிறு நிறைகிறது என்று மட்டும் இந்தத் திட்டத்தை சிம்ப்பிளாக பார்க்க முடியாது. இதனால்,

    * உணவுண்ணும் பழக்க வழக்கங்களில் இம்ப்ரூவ் மெண்ட் வந்திருக்கிறது.

    * பாசிட்டிவான பழக்க வழக்கங்களை வளர்ப்பதில் பிள்ளைகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    * மற்ற குழந்தைகளுடன் ஈசியா, ஜாலியா பழகுகிறார்கள்.

    * குழந்தைகளின் ஹெல்த் டெவலப் ஆகியிருக்கிறது.

    * ஸ்கூலுக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள்.

    * கிளாஸ் ரூமில் கவனம் மற்றும் ஈடுபாடு அதிகமாகி இருக்கிறது.

    * வகுப்பில் தோழமை உணர்வு மேம்பட்டிருக்கிறது என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்திருக்கிறது.

    எதிர்பாராத பல நன்மைகளையும் இந்தத் திட்டம் ஏற்படுத்தி இருக்கிறது. காலை உணவை பள்ளிகளே வழங்குவதால், ஒரு குடும்பத்தில் அம்மா – அப்பா இரண்டு பேருமே வேலைக்கு செல்கிறார்கள் என்றால், அவர்களுடைய பணிச்சுமை குறைந்திருப்பதுடன், குழந்தைகள் ஸ்கூலில் வயிறார சாப்பிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையையும், நிம்மதியையும் தருகிறது.

    அவ்வளவு ஏன்… டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2024 வரை, அரசுப் பள்ளிகளில், குழந்தைகளிடையே ஆரோக்கியம் அதிகரித்திருக்கிறது. ஹாஸ்பிடலுக்குச் செல்வதும் குறைந்திருக்கிறது. இன்னும் சொல்கிறேன். காலை உணவுத் திட்டத்தால், அட்டெண்டன்ஸ் கூடியிருக்கிறது.

    கற்றல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு குறைந்திருக்கிறது. நோய்த்தொற்று வாய்ப்புகள் அதுவும் குறைந்திருக்கிறது. இப்படி, நிறைய பாசிட்டிவாக இருப்பது ஆய்வு மூலமாக நமக்கு தெரிய வந்திருக்கிறது.

    ஒரு திட்டம் மிக மிகச் சிறப்பானது என்றால், மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றுவார்கள். அப்படித்தான், காலை உணவுத் திட்டத்தை பிற மாநிலங்களும், பிற நாடுகளுமே கூட தொடங்கவும், செயல்படுத்தவும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    கனடா போன்ற வளர்ந்த மேலை நாடுகளிலும், காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக நாம் இதை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம் என்பது நமக்கெல்லாம் இருக்கின்ற பெருமை! இந்த நேரத்தில் நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கின்ற மற்றொரு முக்கியமான திட்டத்தையும் சொல்ல விரும்புகிறேன்…

    அது, "ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்! இந்த திட்டத்தால் என்ன பயன் என்றால், இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் முதல் பகுதியில், ஆறு மாதம் வரையிலான 14 ஆயிரத்து 901 குழந்தைகளில், 13 ஆயிரத்து 262 குழந்தைகளையும், இரண்டாம் பகுதியில், ஆறு மாதத்தில் இருந்து ஆறு வயது வரையிலான 92 ஆயிரத்து 15 குழந்தைகளில், 61 ஆயிரத்து 651 குழந்தைகளையும் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம்.

    அதேபோல, இரண்டாம் கட்டத்தில், ஆறு மாதம் வரையிலான 76 ஆயிரத்து 705 குழந்தைகளில், 67 ஆயிரத்து 913 குழந்தைகளை சத்துள்ள குழந்தைகளாக வளர்த்தெடுத்திருக்கிறோம்.

    இந்தத் திட்டங்கள் மட்டும் கிடையாது, நம்முடைய அரசின் முத்திரை திட்டங்களில் முக்கியமான சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறுகின்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சம் பேர்!

    பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்!

    அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேருகின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன்!

    வேலைக்குச் செல்கின்ற மகளிருக்கு தோழி விடுதிகள்!

    மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீட்டுக்கே சென்று, நேரில் ரேஷன் தருகின்ற தாயுமானவர் திட்டம்!

    ஏழை, எளிய நடுத்தர மக்கள் இருக்கின்ற இடத்திற்கே சென்று பயனளிக்கின்ற உங்களுடன் ஸ்டாலின்! நலம் காக்கும் ஸ்டாலின்!

    இது எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக, நாட்டிலேயே பொருளாதாரத்தில் டபுள் டிஜிட் வளர்ச்சி அடைந்திருக்கின்ற மாநிலம் என்றால், அது நம்முடைய தமிழ்நாடு தான்!

    நான் சி.எம். ஆன நாளில் இருந்து எனக்கு இருந்த, இருக்கின்ற ஒரே குறிக்கோள், "தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் எல்லா வகையிலும் முன்னேற வேண்டும்!" இந்த நேரத்தில் நான் பெரிதாக நன்றி சொல்லிக் கொள்ள விரும்புவது… இந்த குழந்தைகளுக்கு சமைக்கின்ற தாய்மார்களுக்குதான்! உங்கள் வீட்டில், உங்கள் குழந்தைகளுக்கு சமைக்கின்றது போல, நன்றாக சமைக்கிறீர்கள்! மகளிர் சுயஉதவிக் குழு சகோதரிகளுக்கு நான் மனமார்ந்த நன்றியை சொல்கிறேன். உங்கள் பணியும் சிறப்பாக தொடரவேண்டும்!

    மாணவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான்… நன்றாக சாப்பிடுங்கள்… நன்றாக படியுங்கள்… நன்றாக விளையாடுங்கள்… உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்!

    முதலமைச்சரான உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், நம்முடைய திராவிட மாடல் அரசும், எங்களால் முடிந்த எல்லாவற்றையும் உங்களுக்காக செய்து தருவோம்! எங்களுக்கு நீங்கள்தான் எல்லாமே! எப்போதும் உங்களுக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்! இருப்போம்! இருப்போம்! குழந்தைகளுக்கு ஆல் த பெஸ்ட்!நன்றி! வணக்கம்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • ஸ்ரீரங்கம் கோவிலானது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதன் தொன்மையை பாதுகாக்க முடியும்.
    • முதலமைச்சர் புகழ்கொடி இமயத்தின் உச்சியில் பறக்கிறது.

    சென்னை:

    இந்தாண்டு ரூ.2.50 கோடி அரசு நிதியில் 2,000 பக்தர்கள் அறுபடைவீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். முதற்கட்டப் பயணத்தை இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கந்தக்கோட்டத்தில் நடந்த விழாவில் 199 பக்தர்களுக்கு பயண வழி பைகள் வழங்கி ஆன்மிகப் பஸ்சை தொடங்கி வைத்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அரண்டு போய் இருக்கின்றார். இந்த ஆட்சியின் மீது ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி என்ற வலையை வீசலாம் என்று நினைத்தவர்களுக்கு வலையை அறுத்து இது ஆன்மிக ஆட்சி என நிருபித்த பெருமை நமது முதலமைச்சரையே சாரும். கேரள அரசின் அழைப்பை ஏற்று உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் கலந்து கொண்டால் அவர்களின் பிம்பம் முழுவதும் இடிந்து தரைமட்டம் ஆகும் என்று பயந்து நயினார் நாகேந்திரன் அறிக்கை விட்டுள்ளார்.

    கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் வாசன் முதலமைச்சர் சந்தித்து அழைப்பு விடுத்தபோது ஏற்கனவே திட்டமிட்ட பயணத் திட்டத்தில் மாறுதல் செய்ய இயலாத சூழ்நிலை இருப்பதை தெளிவாக எடுத்துக் கூறினார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் நானும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் மாநாட்டில் பங்கேற்க உள்ளோம். நயினார் நாகேந்திரனின் பயத்திற்கான முடிவு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுகின்ற சட்டமன்ற தொகுதியையே தி.மு.க. கைப்பற்றும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருச்செந்தூர் அர்ச்சகர்களிடம் ஒளிவு மறைவு இல்லாத நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றபோது அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி தீர்ப்பினை பெற்று வருகின்றோம். வெகு விரைவில் ஒழுங்குப்படுத்தி எவ்வித கையூட்டும் இல்லாமல் தரிசனம் செய்கின்ற சூழ்நிலையை நிச்சயம் துறை மேற்கொள்ளும். நடவடிக்கை எடுக்கும்.

    ஸ்ரீரங்கம் கோவிலை மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோவிலானது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதன் தொன்மையை பாதுகாக்க முடியும். மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறிய மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றாலும், அவர்களை அணுகி அனுமதி பெற்று செய்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையை முதலமைச்சரின் அனுமதியை பெற்று துரை வைகோ சந்தித்து கூட்டணி தர்மத்தோடு விளக்கமாக எடுத்துக் கூற உள்ளேன்.

    விஜய் 2 மாநாடுகளை முடித்திருக்கின்றார். நரியின் வேசம் கலைந்து போச்சு. டும் டும் டும், ராஜா வேசம் கலைந்து போச்சு. டும் டும் டும், என்பதுபோல் அனைத்து தரப்பினரின் விமர்சனங்களையும் தாங்கி சென்று கொண்டிருக்கிறார். அவர் இன்னும் 2, 3 மாநாடுகள் நடத்தினாலே காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார் என்பதே எனது கருத்தாகும். அவரது உயரம் அவ்வளவுதான். முதலமைச்சர் புகழ்கொடி இமயத்தின் உச்சியில் பறக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் சி.பழனி, கோ.செ.மங்கையர்க்கரசி, இணை ஆணையர்கள் ரேணுகா தேவி, முல்லை, உதவி ஆணை யர்கள் சிவக்குமார், பாரதிராஜா, கோவில் அறங்காவலர் குழு தலைவர் அசோக்குமார் மற்றும் அறங்காவலர்கள், கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சஞ்சு பிஷ்னோயிடம் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    • சஞ்சு கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் சஞ்சு பிஷ்னோய். இவருக்கு திலீப் என்பவருடன் திருமணமாக 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு யஷஸ்வி (வயது3) என்ற குழந்தை இருந்தது. சஞ்சு பிஷ்னோய் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    சஞ்சு பிஷ்னோயிடம் அவரது கணவர் திலீப், மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சு கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்.

    சம்பவத்தன்று காலை அவரது கணவர் சஞ்சுவை பைக்கில் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு மதியம் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சு வீட்டுக்கு வந்தவுடன் டைனிங் டேபிளில் இருந்த பெட்ரோலை தனது குழந்தை மீது ஊற்றி தீவைத்தார். மேலும் தன் மீதும் தீவைத்துக் கொண்டார். 2 பேரின் அலறல் சத்தத்தை கேட்டு கணவர், மாமியார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    குழந்தை யஷஸ்வி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சஞ்சுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சஞ்சுவின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கணவர் திலீப், மாமியார் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார்.
    • இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார்.

    2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.

    கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    மோகன் ஜி அடுத்து இயக்கும் திரௌபதி 2 படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 10.58 மணிக்கு வெளியிட இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

    • கோயில் குளத்தில் ஜாஸ்மின் என்ற பெண் காலைக் கழுவுவது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
    • தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

    கேரளா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோயில் குளத்தில் யூடியூப் பிரபலம் ஜாஸ்மின் ஜாஃபர் என்ற பெண் காலைக் கழுவுவது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்துக்கள் அல்லாதவர்கள் குருவாயூர் கோவில் குளத்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் கோவில் குளத்தில் புஸ்கிப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று கூறி தேவசம் போர்டு ஜாஸ்மின் மீது புகார் அளித்தது.

    இந்நிலையில், குருவாயூர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு, அதன் புனிதத் தன்மையை மீட்க பரிகாரம் நடத்தப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இத்தனிடையே,ரீல்ஸ் எடுத்த ஜாஸ்மின் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டு, மன்னிப்பு கேட்டுள்ளார்.

    ஜாஸ்மின் ஜாஃபர், மலையாள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×