Maine Pyar Kiya படத்திற்கு `யு/ஏ' சான்றிதழ்

நடிகை ப்ரீத்தி முகுந்தன் தற்போது மலையாள சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது.
Maine Pyar Kiya படத்திற்கு `யு/ஏ' சான்றிதழ்
Published on

நடிகை ப்ரீத்தி முகுந்தன் தற்போது மலையாள சினிமாவில் களம் இறங்கியுள்ளார். மலையாளத்தில் மைனே பியார் கியா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான ஃபைசல் இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக ஹ்ரிது ஹருன் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் முரா, All We Imagine As Light போன்ற படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்களுடன் அஸ்கர் அலி, மிதுன், ஜெகதிஷ், முஸ்தஃபா, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஜியொ பேபி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது.

திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 147 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com