என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கச்சத்தீவை தாரைவார்த்த காங்கிரஸ் கட்சியை ஏன் விஜய் கண்டிக்கவில்லை?
    • விஜய் மேடையில் பேசுவதற்கு முன்பு, கொஞ்சமாவது விஷயங்களை படிக்க வேண்டும்.

    பா.ஜ.க. தலைவர் ஹெர் ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா வரி விதித்துள்ளதற்கு எதிர் நடவடிக்கையாக, ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை தவிர்த்து

    சுதேசிப் பொருட்களையே நாம் வாங்க வேண்டும்.

    பொருளாதார நடவடிக்கைக்கு அடி கொடுப்பது என்பது பொருளாதார நடவடிக்கையால் மட்டுமே என்பதால் அமெரிக்கப் பொருட்கள் வாங்குவதை நாம் தவிர்க்க வேண்டும்.

    கச்சத்தீவை தாரைவார்த்த காங்கிரஸ் கட்சியை ஏன் விஜய் கண்டிக்கவில்லை?

    விஜய் மேடையில் பேசுவதற்கு முன்பு, கொஞ்சமாவது விஷயங்களை படித்துவிட்டு பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நல்லகண்ணு சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமாகிய நல்லகண்ணு கடந்து ஆகஸ்ட் 22ம் தேதி அவரது வீட்டில் கீழே விழுந்து தலையில் காயம் அடைந்தார்.

    இதையடுத்து அவரை சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மேலும், நூறு வயது தாண்டிய நிலையில், வயது மூப்பின் காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபுணர், இருதய நிபுணர், தீவிர சிகிச்சைப் பிரிவு றிபுணர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது.

    இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நடிகர் சிவகார்த்திகேயன், நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    • ஆன்லைன் விளையாட்டு மூலம் பையன் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளான்.
    • இரண்டு சிறுமிகளிடம் ஆசைவார்த்தை கூறி டெல்லியில் இருந்து பானிபட்டுக்க வரவழைத்துள்ளான்.

    ஆன்லைன் விளையாட்டு வாலிபர்கள், சிறுவர்களை அடிமையாக்கியுள்ளது. அவர்களைத் தவிர இளம் பெண்களும், சிறுமிகளும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர். சிலர் பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டில் தீவிரமாக மூழ்கி விபரீத முடிவுகளை எடுக்கும் அபாய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இதனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்யும் வகையில், மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால் பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

    டெல்லியை சேர்ந்த இரண்டு நடுத்தர சிறுமிகள் "We Play" என்ற ஆன்லைன் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்துள்ளனர். அப்போது அரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த கிஷிஷ் என்ற பையனுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    தற்போது தடைவிதிக்கப்பட்ட நிலையில், அந்த பையன் இருவரையும் தொடர்பு கொண்டு நாம் தொடர்ந்து ஆன்லைனில் விளையாடலாம். அதற்கான வழிகள் எனக்குத் தெரியும் என ஆசைவார்த்தை கூறியுள்ளான். இதை நம்பி உறவினர்களான அந்த இரண்டு சிறுமிகளும் விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறி பானிபட் சென்றடைந்துள்ளனர். காலையில் விவேக் குமார் என்பவர் தன்னுடைய மகள், உறவினர் மகளுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர்களை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.

    உடனடியாக போலீசார் அவர்களை தேடும்பணியில் ஈடுபட்டு, இருவரும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அவர்கள் பாதுக்காப்ப மீட்டு, பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

    • ஐ.டி. ஊழியர் கடத்தல் தொடர்பாக நடிகை லட்சுமி மேனனின் நண்பர்கள் இருவர் கைது.
    • லட்சுமி மேனன் தரப்பில் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

    கேரள மாநிலம் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள ஒரு பாருக்கு கடந்த 24-ந்தேதி இரவு நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சென்றிருந்தனர். அப்போது அவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாரில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அவர்கள் நள்ளிரவு நேரத்தில் பாரில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றனர். அப்போது நடிகை லட்சுமி மேனன் தரப்பினர், தங்களிடம் தகராறு செய்த எதிர் தரப்பை சேர்ந்த ஐ.டி. ஊழியரான ஆலுவாவை சேர்ந்த அலியார் ஷா சலீம் என்பவரை தங்களது காரில் கடத்தி தாக்கியதாக தெரிகிறது.

    பின்பு அவரை ஆலுவா-பரவூர் சந்திப்பில் இறக்கிவிட்டு சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து ஐ.டி. ஊழியர் எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தன்னை காரில் கடத்தி தாக்கியபோது லட்சுமிமேனன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் இருந்ததாக அலியார் ஷா சலீம் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதைதொடர்ந்து, ஐ.டி. ஊழியர் கடத்தல் தொடர்பாக நடிகை லட்சுமி மேனனின் ஆண் நண்பர்கள் மிதுன், அனீஷ் ஆகிய 2 பேரை எர்ணாகுளம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் ஐ.டி.ஊழியர் காரில் கடத்தி தாக்கப்பட்டபோது நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கடத்தல் சம்பவம் தொடர்பாக நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. இதனால் நடிகை லட்சுமி மேனனை எர்ணாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், லட்சுமி மேனன் தரப்பில் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதைதொடர்ந்து, ஐ.டி.ஊழியரை தாக்கிய புகாரில் நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய செப்டம்பர் 17ம் தேதி வரை தடை விதித்து கோரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
    • படம் நீதிமன்ற களத்தை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கும் படம் Right. இப்படத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கின்றனர்.

    இப்படம் நீதிமன்ற களத்தை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியானது.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

    • 2021 முதல் 2023 முறை ஒன்றாக இருந்தோம்.
    • அந்த காலக்கட்டத்தில் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொடர்பில் இருந்ததாக பெண் டாக்டர் குற்றச்சாட்டு.

    கேரளாவின் பிரபல ராப் பாடகர் வேடன். வேடன் என்று அறியப்படும் ஹிரன்தாஸ் முரளி மீது பெண் டாக்டர் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொடர்பில் இருந்துவிட்டு பின்னர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வேடன் கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது.

    வேடன் 2021 முதல் 2023 வரை தாங்கள் ஒன்றாக இருந்தோம். பின்னர் பிரிந்துவிட்டோம். ஒன்றாக இருந்தபோது பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெண் டாக்டர் புகார் அளித்திருந்தார்.

    இருவரும் ஒன்றாக இருந்து பல சந்தர்ப்பங்களில் உடல் ரீதியான உறவுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், மனுதாரருக்கு முன்ஜாமீன் மறுப்பது கடுமையான பாரபட்சத்தை ஏற்படுத்தும் எனக் கூறிய நீதிமன்றம், முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    மேலும், சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு இடையேயான உறவில் முறிவு ஏற்பட்டு, அது குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் கைதுக்கும் வழிவகுத்தால், ஒரு தனிநபரின் எதிர்காலத்தை அழிக்கும் போக்கிற்கு வழிவகுக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
    • கார்த்திக் யோகி இயக்கத்தில் "ப்ரோ கோட்" என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்கிறார் ரவி மோகன்.

    நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    இதன் தொடக்க விழா நேற்று பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

    விழாவிற்கு பல திரைப்பிரபலங்கள் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி நட்சத்திர நடிகர்களும் கலந்து கொண்டனர். அந்தவகையில் கன்னட சூப்பர்ஸ்டாரான சிவராஜ்குமார் இந்த விழாவில் கலந்துக் கொண்டார்.

    விழாவின்போது, ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை நடத்தினர்.

    இதில், டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் "ப்ரோ கோட்" என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்கிறார் ரவி மோகன்.

    இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இந்நிலையில், ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ வீடியோவை ரவி மோகன் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.

    • இட்லி கடை படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
    • ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலில், தெருக்குரல் அறிவு ராப் பாடியுள்ளார்.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரே எழுதிப் பாடியுள்ள 'எஞ்சாமி தந்தானே' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலில், தெருக்குரல் அறிவு ராப் பாடியுள்ளார்.

    • மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரவை பரிந்து செய்திருந்தது.
    • அகமதாபாத் போட்டியை நடத்த சிறந்த இடமாக இருக்கும் என அமைச்சரவை தெரிவித்துள்ளது.

    மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையின் பரிந்துரையை ஏற்று, 2030 காமன்வெல்த் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிதுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு, குஜராத் மாநிலம் அகமதாபாத் காமன்வெல்த் போட்டியை நடத்த சிறந்த இடமாக இருக்கும். அங்கு உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள், பயிற்சி வசதிகள், விளையாட்டு கலாசார பேரார்வம் உள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.

    ஒருவேளை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, போட்டியை நடத்தும் உரிமையை பெற்றால், குஜராத் அரசுக்கு உதவக்குடிய ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆகஸ்ட் 31ஆம் தேதி விண்ணப்பம் செய்ய கடைசி நாளாகும். இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்னும் 48 மணி நேரத்திற்குள் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து நடைமுறைகளை நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கடைசியாக 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்தியது.

    கிளாஸ்கோவில் நவம்பர் மாதம் கடைசி வாரம் நடைபெற இருக்கும் காமன்வெலத் போட்டிக்கான பொதுக்கூட்டத்தில் போட்டியை நடத்தும் நாடு தேர்வு செய்யப்படும். பட்ஜெட் விவகாரம் தொடர்பாக கனடா போட்டியை நடத்துவதில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

    2036 ஒலிம்பிக் போட்டியையும் நடத்த இந்தியா தீவிராக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அகமதாபத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. உள்அரங்கம் போட்டி நடத்துவதற்கான இரண்டு இடங்கள் உள்ளன. கால்பந்து போட்டி நடத்துவதற்கான இடமும் உள்ளது.

    மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்போர்ட்ஸ் என்கிளேவ் முக்கிய மைதானமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்வார்கள். 

    • குஜராத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன்பே வாக்குத் திருட்டு தொடங்கிவிட்டது.
    • அதனை 2014ஆம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளனர் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

    குஜராத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன்பே வாக்குத் திருட்டு தொடங்கிவிட்டது. அதனை 2014ஆம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளனர். குஜராத் மாடல் என்பது பொருளாதார மாடல் அல்ல. அது வாக்குத் திருட்டு மாடல்.

    மத்திய பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிராவில் பாஜக வாக்குகளை திருடியுள்ளது. அப்போது எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லாததால் எதுவும் கூறாமல் இருந்தோம். மகாராஷ்டிராவில் ஆதாரத்தை கண்டுபிடித்துவிட்டோம்.

    ஓராண்டில் 1 கோடி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது. அனைத்தும் பாஜகவுக்கு சென்றுள்ளன.

    மக்களவைத் தேர்தலில் ஹரியானா, மகாராஷ்டிராவில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அம்பலப்படுத்துவோம் என ராகுல் காந்தி பீகாரில் நடைபெற்ற வாக்கு அதிகாரம் பேரணியில் கடுமையான வகையில் பாஜக-வையும், பிரதமர் மோடியையும் தாக்கி பேசியிருந்தார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு கடுமையான வகையில் எதிர்வினையாற்றியுள்ளது. பிரதமர் மோடி கங்கை நீர் போன்று தூய்மையானவர். ராகுல் காந்தி குடும்பம் திருட்டு குடும்பம் எனத் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதவாது:-

    மிகவும் ஊழல் நிறைந்த மற்றும் திருட்டு (Chor) குடும்பம் ஒன்று இருந்தால், அது போலி (Nakli) காந்தி குடும்பம்தான். சோனியா காந்தி, ராபர்ட் வதேரா, ராகுல் காந்தி ஆகியோர் ஊழல் வழக்கில் ஜாமின் பெற்று வெளியில் உள்ளனர்.

    பிரதமர் மோடி கங்கை நீரை போன்று தூய்மையானவர். மக்கள் சேவைக்காக அவரை முழுமையான அர்ப்பணித்துள்ளார். காந்தி குடும்பர் ஊழல் மற்றும் பொய்கள் நிறைந்தது.

    இவ்வாறு கவுரவ் பாட்டியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    • சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • டீசல் படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

    துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

    படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் 'டீசல்' படத்தின் டீசர் வெளியானது!

    திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

    • பீகார் மாநிலத்தில் வெளிப்படையாக கூறியிருப்பது உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
    • ராகுல் காந்தி அவர்களின் உரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனமுவந்து வரவேற்கிறது.

    தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குஜராத் மாடல் என்றால் அது வளர்ச்சி அல்ல, வாக்கு திருட்டு தான் என்று மக்கள் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் இன்று பீகார் மாநிலத்தில் வெளிப்படையாக கூறியிருப்பது உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    மக்களின் நம்பிக்கையை பறித்து ஆட்சியைப் பிடிக்கும் பாசிச ஒன்றிய அரசின் முகமூடியை கிழித்து எறியும் வலிமையான வார்த்தைகளாக இது திகழ்கிறது.

    இந்திய ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டத்தில் இவ்வாறு வெளிப்படையான நிலைப்பாடு எடுக்கும் ராகுல் காந்தி அவர்களின் உரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனமுவந்து வரவேற்கிறது.

    நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கும் உண்மையான மாற்றத்தின் குரல் என்றும், ஜனநாயகத்தின் காவலன் என்றும் அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×