என் மலர்tooltip icon

    இந்தியா

    மோடி கங்கை நீர் போன்று தூய்மையானவர்: ராகுல் காந்தி குடும்பம் திருட்டு குடும்பம்- பாஜக கடும் பதிலடி
    X

    மோடி கங்கை நீர் போன்று தூய்மையானவர்: ராகுல் காந்தி குடும்பம் திருட்டு குடும்பம்- பாஜக கடும் பதிலடி

    • குஜராத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன்பே வாக்குத் திருட்டு தொடங்கிவிட்டது.
    • அதனை 2014ஆம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளனர் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

    குஜராத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன்பே வாக்குத் திருட்டு தொடங்கிவிட்டது. அதனை 2014ஆம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளனர். குஜராத் மாடல் என்பது பொருளாதார மாடல் அல்ல. அது வாக்குத் திருட்டு மாடல்.

    மத்திய பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிராவில் பாஜக வாக்குகளை திருடியுள்ளது. அப்போது எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லாததால் எதுவும் கூறாமல் இருந்தோம். மகாராஷ்டிராவில் ஆதாரத்தை கண்டுபிடித்துவிட்டோம்.

    ஓராண்டில் 1 கோடி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது. அனைத்தும் பாஜகவுக்கு சென்றுள்ளன.

    மக்களவைத் தேர்தலில் ஹரியானா, மகாராஷ்டிராவில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அம்பலப்படுத்துவோம் என ராகுல் காந்தி பீகாரில் நடைபெற்ற வாக்கு அதிகாரம் பேரணியில் கடுமையான வகையில் பாஜக-வையும், பிரதமர் மோடியையும் தாக்கி பேசியிருந்தார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு கடுமையான வகையில் எதிர்வினையாற்றியுள்ளது. பிரதமர் மோடி கங்கை நீர் போன்று தூய்மையானவர். ராகுல் காந்தி குடும்பம் திருட்டு குடும்பம் எனத் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதவாது:-

    மிகவும் ஊழல் நிறைந்த மற்றும் திருட்டு (Chor) குடும்பம் ஒன்று இருந்தால், அது போலி (Nakli) காந்தி குடும்பம்தான். சோனியா காந்தி, ராபர்ட் வதேரா, ராகுல் காந்தி ஆகியோர் ஊழல் வழக்கில் ஜாமின் பெற்று வெளியில் உள்ளனர்.

    பிரதமர் மோடி கங்கை நீரை போன்று தூய்மையானவர். மக்கள் சேவைக்காக அவரை முழுமையான அர்ப்பணித்துள்ளார். காந்தி குடும்பர் ஊழல் மற்றும் பொய்கள் நிறைந்தது.

    இவ்வாறு கவுரவ் பாட்டியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Next Story
    ×