என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மத்திய அரசு பணியிலும் 8 ஆண்டுகள் இருந்துள்ளார்.
- காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
சென்னை:
தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக உள்ள சங்கர் ஜிவால் வருகிற 31-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
இதையொட்டி இன்று மாலையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அவருக்கு பணி நிறைவு விழா நடத்தப்படுகிறது. சங்கர் ஜிவாலுடன், காவல் துறை வீட்டு வசதி நிறுவன இயக்குனர் உள்ள டி.ஜி.பி. சைலேஸ் குமார் யாதவும் ஓய்வு பெறுகிறார்.
இதைத் தொடர்ந்து இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விழாவில் தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சங்கர் ஜிவால், சைலேஸ் குமார் யாதவ் ஆகிய இருவரையும் வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறார்கள்.
டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் சட்டம்-ஒழுங்கு பதவியில் டி.ஜி.பி.யாக பணி அமர்த்தப்பட்டார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த போது தான் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால் 1990-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் சில ஆண்டுகள் முன்னணி நிறுவனங்களில் என்ஜினீயராகவும் பணி புரிந்துள்ளார். அதன் பிறகே ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். மதுரை மற்றும் சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து உள்ள சங்கர் ஜிவால், திருச்சி கமிஷனராகவும், உளவு பிரிவில் ஐ.ஜி.யாகவும் பணியாற்றி உள்ளார். மத்திய அரசு பணியிலும் 8 ஆண்டுகள் இருந்துள்ளார். சிறப்பான பணிக்காக 2 முறை ஜனாதிபதி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை மறுநாள் ஓய்வு பெற உள்ள போலீஸ் டி.ஜி.பி சங்கர் ஜிவால் சந்தித்து பேசினார். அதேபோல் பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட உள்ள வெங்கடராமனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். மேலும் காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட உள்ள வெங்கடராமன் குறித்த தகவல்கள்...
* 1968-ம் ஆண்டு மே 8-ந்தேதி நாகப்பட்டினத்தில் பிறந்தார்.
* யு.பி.எஸ்.சி. தேர்வில் 1994-ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* இளங்கலை பொருளாதாரம்; பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை படிப்புகளில் முதுகலைப் பட்டம்.
* நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்தபோது, காவல்துறையில் காகிதமில்லாப் பணியை நடைமுறைப்படுத்தினார்.
* ஏடிஜிபியாக சிபிசிஐடி மற்றும் சைபர் கிரைம் பிரிவுகளில் முக்கியமான வழக்குகளை வெற்றிகரமாகக் கையாண்டவர்.
* கடந்த டிசம்பர் மாதம் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றார்.
* தற்போது சட்டம்-ஒழுங்குப் பிரிவுக்கான கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
* சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்புடன், படைத் தலைவர் பொறுப்பையும் கவனிக்க உள்ளார்.
- நல்லகண்ணு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த 22-ந்தேதி வீட்டில் தவறி விழுந்ததால் காயம் அடைந்தார். கடந்த 24-ந்தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவை நேரில் பார்த்தார். மேலும் அவரது உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர்.
- சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,500, சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.5,545-க்கும் கொள்முதல் செய்யப்படும்.
- செப்டம்பர் 1 முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை குவிண்டால் நெல் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும்.
சென்னை:
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,500, சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.5,545-க்கும் கொள்முதல் செய்யப்படும்.
செப்டம்பர் 1 முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை குவிண்டால் நெல் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை வைகை ஆற்றில் வீசியவர்கள் யார்?
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திருப்புவனம் வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்தது தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை வைகை ஆற்றில் வீசியவர்கள் யார்? என விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
- விஷாலுக்கு இன்று திருமண நிச்சயம் நடந்தது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. திரைப்படம் இதுவரை 500 கோடியை கடந்துள்ளது.
மேலும் நடிகர் விஷால் அவர் காதலித்து வந்த நடிகை தன்ஷிகா இருவருக்கும் இன்று அவர்களது இல்லத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமண நிச்சயம் நடந்தது.
சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் " சினிமாவில் 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருப்பது உலக சாதனை, ரஜினிகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும்" என கூறியுள்ளார்.
- பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.
- விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள், இன்று சிவங்கங்கை வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனங்கள்.
எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.
நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல, சிவகங்கை வைகையாற்றில் மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது.
மக்களின் வலிகளை, உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி, உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.
- விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பை பிரசன்னா செய்துள்ளார்.
இந்நிலையில், 'பாம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.
- நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார்.
- தடபுடல் விருந்தும் அளிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் 'மகுடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 35-வது படம் ஆகும். நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார்.
இதனிடையே, சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், இருவரும் ஆகஸ்டு 29-ந்தேதி (இன்று) திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் விஷால் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தடபுடல் விருந்தும் அளிக்கப்பட்டது.

48 வயதாகும் விஷால் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்? என்று எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த திருமண நிச்சயதார்த்தம் குறித்த தகவல் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக அமைந்திருக்கிறது. திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
- தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது,
கோவில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் தவறில்லை எனக்கூறி தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன.
- கௌதம் தின்னனுரி எழுதி இயக்கிய அதிரடி திரில்லர் படம் கிங்டம்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
'கிங்டம்'
கௌதம் தின்னனுரி எழுதி இயக்கிய அதிரடி திரில்லர் படம் கிங்டம். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'லவ் மேரேஜ்'
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் 'லவ் மேரேஜ்'. இதில் நடிகை சுஷ்மிதா பட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'கெவி'
இப்படம் கொடைக்கானல் மலைப்பகுதியில், சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஆதவன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ள இப்படம் கடந்த 27ந் தேதி சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'மாயக்கூத்து'
'மாயக்கூத்து' என்பது ஏ.ஆர்.ராகவேந்திரா எழுதி இயக்கிய படமாகும். நாகராஜன், ஐஸ்வர்யா, காயத்ரி மற்றும் டில்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
'தண்டர்போல்ட்ஸ்'
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடுத்ததாக வெளியான படம் 'தண்டர்போல்ட்ஸ்'. இது எம்.சி.யுவின் 36-வது படமாகும். பிரபல இயக்குனர் ஜேக் ஷ்ரேயர் இயக்கி உள்ளார். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'வசந்தி'
வசந்தி ரஹ்மான் சகோதரர்களால் எழுதி இயக்கப்பட்ட மலையாள படம் வசந்தி. இதில் வசந்தியாக ஸ்வாசிகா சிஜு வில்சன், ஸ்ரீல நல்லேடம், மது உமாாலயம், ஷபரிஷ் வர்மா, சிவாஜி குருவாயூர், வினோத் குமார், ஹரிலால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'கராத்தே கிட் லெஜண்ட்ஸ்'
இயக்குநர் ஜோனதன் எண்ட்விஸ்ட் இயக்கத்தில் ஜாக்கி சான், பென் வாங் உள்ளிடோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் (karate kid: legends). இப்படத்திலும் சிறுவனுக்கு கராத்தே பயிற்றுவிக்கும் மாஸ்டராக ஜாக்கி ஜான் நடித்துள்ளார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'தி டோர்'
இயக்குனர் ஜெய்தேவ் இயக்கத்தில் பாவனா நடிப்பில் வெளியான படம் 'தி டோர்'. மிஸ்டரி திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராமேஷ் ஆறுமுகம், பிரியா வெங்கட், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
- 2006 தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார்.
- தேர்தல் ஆணையம் எப்போதும் பொம்மையாக தான் செயல்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறது.
மதுரையில் நடைபெற்ற த.வெ.க. 2-வது மாநில மாநாடு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குறித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
2006 தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார். அதே போல 2026 தேர்தலில் விஜய் தனித்து நின்றால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
தேர்தல் ஆணையம் எப்போதும் பொம்மையாக தான் செயல்படுகிறது. வாக்கு திருட்டு தொடர்பாக இந்தியா முழுக்க சீர்திருத்தம் நடைபெற வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பது, ஓட்டு திருட்டு, கள்ள ஓட்டு எல்லாமே சரி செய்ய வேண்டும்.
தே.மு.தி.க.விற்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.
கூட்டணி, விஜய் பற்றி கேள்வி கேட்டால் இனிமேல் பதில் சொல்ல மாட்டேன். மக்கள் பிரச்சனை குறித்து கேள்வி கேளுங்கள்.
மக்களுக்காக தான் அரசியல், மக்களுக்காக தான் ஆட்சி, மக்கள் நல்லா இருந்தா தான் நாடு நல்லா இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜாய் கிரிசில்டா தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.
- ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராமில், குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் என அறிவித்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல்துறை நிபுணர் ஆவார். தமிழ் திரையுலகில் நடக்கும் பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் சேவையை செய்வது மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம்தான். தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகராகவும் உள்ளார். அவரது முதல் படம் 'மெஹந்தி சர்க்கஸ்'.
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே, மாதம்பட்டி ரங்கராஜ் பேஷன் டிசைனரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. ஜாய் கிரிசில்டா தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார். மாதம்பட்டி ரங்கராஜ் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஜாய் கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதனிடைடேய, கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றது பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராமில், குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் என அறிவித்தார்.
இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா புகார் கூறியுள்ளார்.
சென்னையில் கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ், 7 மாத கர்ப்பமாக இருக்கும் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசில்டா காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.






