search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா
    X

    10 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா

    இந்திய டெலிகாம் சந்தையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஐடியா செல்லுலார் தனது வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி இலவச டேட்டா வழங்குகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் வோல்ட்இ சேவைகள் முதற்கட்டமாக மகாராஷ்ட்ரா, கோவா, கேரளா, குஜராத், ஆந்திர பிரதேசம், செலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஐடியா ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தமிழ் நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மும்பை தவிர்த்து மகாராஷ்ட்ரா, கோவா, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் உள்ளிட்ட வட்டாரங்களில் வோல்ட்இ சேவைகளை ஐடியா செல்லுலார் துவங்கியுள்ளது. முன்னதாக 2017-ம் ஆண்டின் இறுதிக்குள் வோல்ட்இ சேவைகளை வழங்குவதாக ஐடியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    வோல்ட்இ சேவைகளை வழங்குவதால் இந்த வட்டாரங்களில் உள்ள ஐடியா வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி வரை இலவச டேட்டா வழங்க ஐடியா முடிவு செய்துள்ளது. முதல் வோல்ட்இ அழைப்பை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் கணக்கில் 48 மணி நேரத்தில் இலவச டேட்டா சேர்க்கப்பட்டு விடும் என ஐடியா அறிவித்துள்ளது.

    வோல்ட்இ சேவைகள் துவங்கப்பட்டு இருப்பதால் வாடிக்கையாளர்கள் ஹெச்டி தரத்தில் வாய்ஸ் கால், வேகமான கால் செட்டப், வாய்ஸ் கால் மேற்கொள்ளும் போதும் அதிவேக 4ஜி டேட்டா பயன்படுத்த முடியும். இத்துடன் வோல்ட்இ அழைப்புகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. 

    4ஜி நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் தானாக 2ஜி/3ஜி நெட்வொர்க்-க்கு மாற்றப்பட்டு விடும். சீரான நெட்வொர்க் வழங்குவதை உறுதி செய்ய சிங்கிள் ரேடியோ வாய்ஸ் கால் கன்டினியூட்டி தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தானாகே மற்ற நெட்வொர்க்க்கு மாற்றப்படுவர்.  


    கோப்பு படம்

    ஐடியா வோல்ட்இ சேவைகளை பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு ஐடியா 4ஜி சிம் மற்றும் வோல்ட்இ ஸ்மார்ட்போன் தேவைப்படும். ஹானர் 6X, ஹானர் 7X, ஹானர் 8 ப்ரோ, ஹானர் 9 லைட், ஹானர் 9i மற்றும் ஹானர் வியூ 10 உள்ளிட்டவை ஐடியா 4ஜி வோல்ட்இ வசதியை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

    இதைத் தொடர்ந்து ஹானர் 8 லைட், ஹானர் 8, ஹானர் ஹால்லி 4, ஹானர் P9, நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு விரைவில் ஐடியா 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து ஐடியா 4ஜி வோல்ட்இ வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்களுக்கு ஐடியா 4ஜி சேவை தானாகவே எனேபிள் செய்யப்படும். இவ்வாறு வேலை செய்யாதோர் தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து ‘ACT VOLTE’ என டைப் செய்து 12345 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். சீரான மற்றும் அதிவேக நெட்வொர்க் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களின் ஐடியா 4ஜி சிம் கார்டினை ஸ்மார்ட்போனின் சிம் கார்டு ஸ்லாட் 1-இல் சிம் கார்டினை பயன்படுத்த வேண்டும். 

    ஐடியா சிம் கார்டினை ஸ்லாட் 1-இல் வைத்து, பிரெஃபர்டு நெட்வொர்க் டைப் சென்று 4ஜி/3ஜி/2ஜி (ஆட்டோ) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் ஸ்மார்ட்போன் நெட்வொர்க் ஸ்டேட்டஸ் பாரில் 4ஜி ஹெச்டி/ வோல்ட்இ என தெரியும். இந்த குறியீடை பார்த்ததும் உங்களின் ஸ்மார்ட்போனில் வோல்ட்இ அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
    Next Story
    ×