search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜியோவை விடுங்க: ஆறு ரூபாய்க்கு ஸ்பெஷல் சலுகை அறிவித்த வோடபோன்
    X

    ஜியோவை விடுங்க: ஆறு ரூபாய்க்கு ஸ்பெஷல் சலுகை அறிவித்த வோடபோன்

    ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 12 கோடிகளை நெருங்கும் நிலையில், போட்டி நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவிக்க துவங்கியுள்ளன. அதன்படி வோடபோன் அறிவித்துள்ள புதிய சலுகை சார்ந்த தகவல்களை பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள மலிவு விலை சலுகைகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பரில் இருந்த வேகம் தற்போது இல்லையென்றாலும் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 12 கோடிகளை நெருங்கி வருகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. 

    அந்த வரிசையில் வோடபோன் இந்தியா இணைந்துள்ளது. வோடபோன் அறிவித்துள்ள புதிய சலுகைகளில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.6 என்ற விலையில் சலுகைகளை வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ சலுகைகள் நாள் ஒன்றிற்கு ரூ.10 விலையில் 1 ஜிபி அளவு 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 

    வோடபோன் அறிவித்துள்ள புதிய சலுகைகளின் விலை ரூ.29 முதல் துவங்குகிறது. இதில் ஒவ்வொரு வட்டாரம் மற்றும் சாதனத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் 3ஜி /  4ஜி டேட்டா அதிகாலை 1.00 மணி முதல் காலை 6.00 மணி வரை வழங்கப்படுகிறது. இது ஒரு மணி நேரத்திற்கு ரூ.6-க்கும் குறைவாகவே இருக்கிறது என்றாலும் திட்டத்தின் விலை ஒவ்வொரு வட்டாரங்களிலும் மாறும் என வோடபோன் அறிவித்துள்ளது.  



    வோடபோன் ரூ.29 திட்டம்:

    வோடபோன் அறிவித்துள்ள புதிய ரூ.29 திட்டத்தை எந்நேரத்திலும் ஆக்டிவேட் செய்ய முடியும். இந்த திட்டம் அதிகாலை 1.00 மணி முதல் வேலை செய்யும். புதிய சூப்பர்நைட் திட்டம் டிஜிட்டல் சேனல், அனைத்து விற்பனை மையங்கள் மற்றும் *444*4# எனும் குறியீடு மூலம் ஆக்டிவேட் செய்ய முடியும்.

    முன்னதாக வோடபோன் ரூ.786 எனும் புதிய திட்டத்தை அறிவித்தது. வோடபோன் ரம்ஜான் 786 திட்டத்தில் அசாம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், அன்லிமிட்டெட் தேசிய ரோமிங் மற்றும் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

    இதேபோல் ராஜஸ்தான் வட்டாரங்களில் உள்ள பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஃபுல் டாக்டைம் மற்றும் நொடிக்கு ரூ.0.14 விலையில் சர்வதேச அழைப்புகள் ஐக்கிய அரபுகள், குவைத், பஹ்ரைன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படுகிறது.
    Next Story
    ×