என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஸ்நாப்சாட் செயலியில் புதிய வசதி: இனி போட்டோ, வீடியோக்களை தேடலாம் ஸ்நாப்சாட் செயலியில் புதிய வசதி: இனி போட்டோ, வீடியோக்களை தேடலாம்](https://img.maalaimalar.com/Articles/2017/Apr/201704011332311721_Snapchat-adds-more-accessible-search-feature_SECVPF.gif)
X
ஸ்நாப்சாட் செயலியில் புதிய வசதி: இனி போட்டோ, வீடியோக்களை தேடலாம்
By
மாலை மலர்1 April 2017 8:02 AM GMT (Updated: 1 April 2017 8:02 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஸ்நாப்சாட் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய வசதியை கொண்டு வாடிக்கையாளர்கள் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்களை தேட முடியும்.
புதுடெல்லி:
பிரபல குறுந்தகவல் செயலியான ஸ்நாப்சாட் அதன் பனயாளிகளுக்கு பொதுவாக (public) பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை தேடுவதற்கான வசதியை வழங்கியுள்ளது. இதன் மூலம் புகைப்படங்களை பதிவு செய்வதை கடந்து நண்பர்கள் பதிவு செய்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்களை தேடும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையளர்களை அதிக புகைப்படங்களை எடுத்து அதனினை எடிட் செய்யும் வசதியை வழங்கியதை தொடர்ந்து ஸ்நாப்சாட் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![]( http://img.maalaimalar.com/InlineImage/201704011332311721_snapchat app._L_styvpf.gif)
ஸ்நாப்சாட்டில் 'ஸ்நாப்ஸ்' மற்றும் 'அவர் ஸ்டோரி'-களை தேடுவதற்கு பயனாளிகள் புதிய ஸ்டோரீஸ் உருவாக்க கோரும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும் என அந்நிறுவனத்தின் வளைப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஸ்நாப்சாட்டில் ஸ்நாப்ஸ் மற்றும் அவர் ஸ்டோரி என அழைக்கப்படுகிறதும் குறிப்பிடத்தக்கது.
அவர் ஸ்டோரி ஆப்ஷன் இந்த செயலியில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஸ்டோரீஸ் வசதியை தழவி உருவாக்கப்பட்டதாகும். ஸ்டோரீஸ் வசதியில் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் மறைந்து விடும். அவர் ஸ்டோரீஸ் ஆப்ஷனில் பயனாளிகள் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம்.
புதிய வசதியை வழங்கும் அப்டேட் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் பயனாளிகள் உலகின் பிரபல நிகழ்வுகளின் புகைப்படங்களை செயலியில் தேடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)