search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ: இந்தியாவில் சாம்சங் பே அறிமுகம், பதிவு செய்வது எப்படி?
    X

    வீடியோ: இந்தியாவில் சாம்சங் பே அறிமுகம், பதிவு செய்வது எப்படி?

    தென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் இந்தியாவில் சாம்சங் பே சேவைகளை இன்று அறிமுகம் செய்தது. இதற்கென பல்வேறு நிறுவனங்களுடன் சாம்சங் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் மொபைல் பேமென்ட் சேவையான சாம்சங் பே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் இதற்கான முன்பதிவுகள் துவங்கிய நிலையில் அதிகாரப்பூர்வமாக சாம்சங் பே சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    விசா, மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் சாம்சங் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இவை சாம்சங் பே சேவைக்கான கேட்வே போன்று செயல்படவுள்ளது. இந்நிலையில் ஆக்சிஸ் பேங்க், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ கார்டு மற்றும் ஸ்டான்டார்டு சாட்டர்டு பேங்க் கார்டு உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்யும் என்றும் விரைவில்  சிட்டி பேங்க் சப்போர்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



    தேர்வு செய்யப்பட்டுள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்களை தவிர சாம்சங் கியர் S3 ஸ்மார்ட்வாட்ச்சிலும் சாம்சங் பே சேவை வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் பே சேவையில் பதிவு செய்யப்பட்டுள்ள கார்டுகளை கொண்டு பணம் செலுத்த முடியும். பதிவு செய்யப்பட்ட கார்டுகளை கொண்டு கியூ ஆர் கோடு ஸ்கேனிங், ஒன்-டைம் பாஸ்வேர்டு உள்ளிட்டவை மூலம் பாதுகாப்பான பண பரிமாற்றம் செய்ய முடியும். 

    சாம்சங் பே சேவையானது சாம்சங் நிறுவனத்தின் மாக்னடிக் செக்யூர் டிரான்ஸ்மிஷன் எனும்  தொழில்நுட்பம் மற்றும் நியர் ஃபீல்டு கம்யூனிகேஷன் உள்ளிட்டவற்றை கொண்டு வேலை செய்கிறது. சாம்சங் ஸ்மார்ட்போனில் இருந்து வரும் மின்காந்த அலைகள் கார்டு ஸ்வைப் செய்வதற்கு மாற்றாக மாக்னடிக் செக்யூர் டிரான்ஸ்மிஷன் முறை வேலை செய்கிறது. இம்முறையானது மூன்று கட்ட பாதுகாப்பு கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

    சாம்சங் பே சேவையை நீங்களும் பயன்படுத்த எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வீடியோவை காணலாம்..


    Next Story
    ×