search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லா ஸ்மார்ட்போன்களுக்கும் கூகுள் அசிஸ்டண்ட்
    X

    எல்லா ஸ்மார்ட்போன்களுக்கும் கூகுள் அசிஸ்டண்ட்

    கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று கூகுள் அசிஸ்டண்ட் சேவையினை பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கியிருக்கிறது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்கும் விர்ச்சுவல் மென்பொருள் தான் கூகுள் அசிஸ்டண்ட். முதன் முறையாக கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்த சேவை தற்சமயம் பல்வேறு இதர நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டுள்ள தேர்வு செய்யப்பட்ட சில ஸ்மார்ட்போன்களில் கூகுள் அசிஸ்டண்ட் சேவை கிடைக்கிறது. 

    எனினும் கூகுள் அசிஸ்டண்ட் சேவையை இயக்க உங்களது ஸ்மார்ட்போன்களில் குறைந்தபட்சம் 1.5 ஜிபி ரேம் மற்றும் 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்க வேண்டும் என கூகுள் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக ஆங்கில மொழியினை பயன்படுத்தும் அமெரிக்க பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 



    இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய ராஜ்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியை தொடர்ந்து பல்வேறு மொழிகளுக்கும் விரைவில் கூகுள் அசிஸ்டண்ட் சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    புதிய வசதியை இயக்க ஹோம் பட்டனை அழுத்தி பிடிக்க வேண்டும், இனி வாடிக்கையாளர்கள் கூகுள் அதிஸ்டண்ட் சேவையினை இயக்க “Ok Google” என சொல்லி உங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முடியும். கூகுள் அசிஸ்டண்ட் சேவை கொண்டு வெளியான முதல் கூகுள் அல்லாத ஸ்மார்ட்போன் எல்ஜி G6 என்பதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×