search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூன்று ஆண்டுகளாய் உருவாகும் ஸ்டீவ் ஜாப்ஸ் கனவு: மெய்ப்படும் முன் வெளியான சுவாரஸ்யங்கள்
    X

    மூன்று ஆண்டுகளாய் உருவாகும் ஸ்டீவ் ஜாப்ஸ் கனவு: மெய்ப்படும் முன் வெளியான சுவாரஸ்யங்கள்

    ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் கனவு திட்டமான ஸ்பேஸ்ஷிப் கேம்பஸ் 2 வளாகத்தின் கட்டுமான பணிகள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஐபோன், மேக், ஐபேட் உள்ளிட்ட சாதனங்களை உலகிற்கு அறிமுகம் செய்த ஸ்டீவ் ஜாப்ஸ்-ஐ யாரும் மறந்து விட முடியாது. நுகர்வோர் தொழில்நுட்ப சாதனங்களில் பல்வேறு புரட்சிகளை மேற்கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ், தனது கனவு திட்டம் குறித்த அறிவிப்பை தன் மரணத்திற்கு முன் வெளியிட்டார்.  

    ஆப்பிள் நிறுவனத்திற்கான புதிய தலைமையகத்தை கலிஃபோர்னியாவில் உருவாக்கவும், அதில் பல்வேறு புதுமைகளை புகுத்தவும் அவர் திட்டமிட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு இந்த வளாகத்தின் கட்டுமான பணிகள் துவங்கின. கட்டுமான பணிகள் நிறைவுற்று பயன்பாட்டிற்கு வரும் தேதி பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. 

    இந்நிலையில் ஆப்பிள் புதிய வளாகத்தின் கட்டுமான பணிகள் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு.   

    ஃபோஸ்டர்+பார்ட்னர்ஸ் எனும் ப்ரிட்டன் நிறுவனம் ஆப்பிள் புதிய வளாகத்தை வடிவமைத்துள்ளது. ஸ்பேஸ்ஷிப் வளாகத்தின் ஒவ்வொரு அங்கமும் கச்சிதமாகவும், அதிக கவனத்துடனும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 2.8 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட வளாகத்தின் ஒட்டு மொத்த கட்டுமான செலவு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 

    வளாகம் முழுக்க கதவு திறப்பான்கள் முழுமையான சோதனைக்காக பலமுறை திரும்ப அனுப்பப்படுகிறது. ஆப்பிள் சாதனங்களை போன்றே வளாகம் முழுக்க சிறிய குறைபாடும் இன்றி முழு கவனத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    ஒவ்வொரு சுவர், மேல்தளம் மற்றும் தரை என அனைத்தும் அதிக மென்மையாக இருக்கும் படி வடிவமைக்கப்படுகிறது. உள்கட்டமைப்புகளில் பயன்படுத்தப்பட இருக்கும் மரம், மேப்பில் எனும் குறிப்பிட்ட மரத்தின் நடுப்பகுதியை கொண்டு செய்யப்படுகிறது. 



    2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துங்கிய கட்டுமான பணிகளில் இதுவரை மொத்தம் 13,000 முழு நேர கட்டுமான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 176 ஏக்கர் பரப்பளவில் கண்ணாடிகளால் ஆன பெரிய சுவர்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் மொத்தம் 14,200 ஊழியர்கள் பணியாற்ற முடியும். 
     
    புதிய ஆப்பிள் வளாகத்தில் ஏற்கனவே உலகின் மிகப்பெரிய வளைந்த கிளாஸ் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கேம்பஸ் 2 என அழைக்கப்படும் இந்த வளாகத்தை ஒருமுறை நடந்தே கடக்கும் போது ஒரு மைல் தூரத்திற்கும் அதிகமாகும். மேலும் வளாகம் முழுக்க சுமார் 7000க்கும் அதிகமான மரங்கள் நடப்படுகின்றன.    

    மிகப்பெரிய வளாகம் என்பதால் இதனுள் சென்று வர 1000க்கும் அதிகமான வாகனங்கள் எந்நேரமும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தின் முதன்மை கட்டிடத்தின் உள்கட்டமைப்புகளுக்கு மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. வளாகத்தினுள் 14,200 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் நிலத்துக்கடியில் 1000 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வளாகம் தயாரானதும் ஆப்பிள் சாதனங்கள் அனைத்தும் இங்கு அறிமுகம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. 300,000 சதுர அடியில் இரு பெரிய கட்டிடங்கள் இந்த வளாகத்தினுள் ஆய்வு மற்றும் தயாரிப்பு பணிகளுக்காக கட்டமைக்கப்படுகிறது. 

    புதிய ஆப்பிள் வளாகத்தின் மேல் ஆயிரத்துக்கும் அதிகமான சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வளாகம் முழுக்க புதுப்பிக்கத்தக்க மின்சாரம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதே போல் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஒட்டு மொத்த ஆப்பிள் வளாகமும் 500,000 சதுர அடியில் அமைந்துள்ளது. மேலும் இந்த வளாகம் பெரிய அலுவலகங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
    Next Story
    ×