search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்சங் கேலக்ஸி A டீஸர் அறிமுகம்: புது தகவல்கள்
    X

    சாம்சங் கேலக்ஸி A டீஸர் அறிமுகம்: புது தகவல்கள்

    சாம்சங் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன் டீஸர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    கோலாலம்பூர்:

    சாம்சங் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் கசிந்தன. நிறைய புகைப்படங்களின் மூலம் உறுதி செய்யப்படாத பல்வேறு தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வலம் வந்தன.  

    இந்நிலையில் உலகம் முழுக்க சமீபத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் சாம்சங் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த டீஸர் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சாம்சங்'இன் மலேசிய முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  

    வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் புதிய சாம்சங் கேலக்ஸி A சீரிஸ் டீஸரில் நீர் இருப்பதை தொடர்ந்து, இவற்றில் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படலாம் என்பது தெரியவந்துள்ளது. 

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A3 (2017), A5 (2017) மற்றும் A7 (2017) உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நுகர்வோர் மின்சாதன திருவிழாவில் (CES 2017) அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. 

    ஏற்கனவே ஜனவரி 4 ஆம் தேதியன்று சாம்சங் நிகழ்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. இதுவரை இந்த ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பாருங்கள்..

    அதன் படி சாம்சங் கேலக்ஸி A3 (2017) வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கைரேகை ஸ்கேனர், 4.7 இன்ச் சூப்பர் Amoled டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிகிறது. டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் எக்சைனோஸ் 7870 சிப்செட் வழங்கப்படலாம். 

    மெமரியை பொருத்த வரை 2GB ரேம், 8GB / 16GB இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம். இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா, 4G, எல்டிஇ, 3G, வைபை, ப்ளூடூத் மற்றும் GPS உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம்.
    Next Story
    ×