search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாநில கல்லூரியில் காது, வாய் பேச முடியாத மாணவர்களுக்கு எம்.காம் புதிய படிப்பு அறிமுகம்
    X

    மாநில கல்லூரியில் காது, வாய் பேச முடியாத மாணவர்களுக்கு எம்.காம் புதிய படிப்பு அறிமுகம்

    • நேரில் வர இயலாத மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகள் வலைதள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    • முழுமை செய்யப்பட்ட படிவத்தை 23-ந் தேதி மாலை 5-மணிக்குள் கல்லூரி வளாகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநில கல்லூரியில் செவித்திறன் குறையுடைய மாற்று திறனாளி மாணவ-மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டில் எம்.காம் (எச்ஐ) முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்பட உள்ளது.

    விண்ணப்பிக்க விருப்பமுள்ள செவித்திறன் மற்றும் வாய் பேசாமை குறையுடைய மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகள் வருகிற 23-ந் தேதி மாநில கல்லூரி அலுவலத்தை அணுகி விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். முழுமை செய்யப்பட்ட படிவத்தை 23-ந் தேதி மாலை 5-மணிக்குள் கல்லூரி வளாகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    நேரில் வர இயலாத மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகள் வலைதள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை நேரிலோ அல்லது தபால் வழியிலோ அளிக்க இயலாதவர்கள் பி.டி.எப் வடிவத்தில் bursar.presidency5@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்று கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×