search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயில் மீது ஏறி விளையாடியபோது மின்சாரம் தாக்கி காயம் அடைந்த பிளஸ்-2 மாணவன் பலி
    X

    மாணவன் விக்னேஷ்வர் ரெயில் பெட்டியில் ஏறி போட்டோ எடுத்த காட்சி.


    ரெயில் மீது ஏறி விளையாடியபோது மின்சாரம் தாக்கி காயம் அடைந்த பிளஸ்-2 மாணவன் பலி

    • மதுரை கூடல்புதூர் முல்லை நகரை சேர்ந்தவர் பழனி. ஐஸ் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • விக்னேஷ்வர் நேற்று நண்பர்கள் 3 பேருடன் கூடல்நகர் குட்ஷெட் பகுதிக்கு வந்தார்.

    மதுரை:

    மதுரை கூடல்புதூர் முல்லை நகரை சேர்ந்தவர் பழனி. ஐஸ் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ்வர் (வயது 17). பிளஸ்-2 படித்து வந்தார்.

    விக்னேஷ்வர் நேற்று நண்பர்கள் 3 பேருடன் கூடல்நகர் குட்ஷெட் பகுதிக்கு வந்தார். இங்கு தான், ரெயில் பெட்டிகள் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும். அங்கு விளையாட வந்த 4 பேரும் ரெயில் பெட்டிகளில் ஏறி விளையாடி கொண்டி ருந்தனர்.

    மேலும் செல்போனில் போட்டோ எடுத்தப்படி இருந்தனர். அப்போது விக்னேஷ்வர் ரெயில் பெட்டியின் மேலே ஏறினார். அந்த பெட்டியின் மேல்பகுதியில் 25 ஆயிரம் வோல்டு மின்சாரம் பாயும் மின் கம்பி இருந்தது. அதை பற்றி சிந்திக்காமல் ரெயில் பெட்டியின் மேல்பகுதியில் ஏறிய விக்னேஷ்வரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அைடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஷ்வரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் மாணவன் விக்னேஷ்வர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.

    மின்சார ரெயில்களை இயக்குவதற்காக போடப்பட்டுள்ள மின்பாதையில் 25ஆயிரம் வோல்டு பாயும் என்பதால், அதன்அருகில் செல்லக்கூடாது என்று ரெயில்வே துறை பல இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளது. ஆனால் அதனை மீறி ரெயில் பெட்டியின் மீது ஏறி போட்டோ எடுக்க முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மதுரை கோட்டத்தில் பெரும்பாலான ரெயில் பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளன. அவற்றில் ரெயில் இயக்குவதற்காக 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. இது பற்றிய எச்சரிக்கை விளம்பரங்கள் ரெயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

    வீடுகளில் பயன்படும் 230 வோல்ட் மின்சாரம் தாக்குதலையே நம்மால் தாங்க முடியாது. அப்படி இருக்கும்போது 25,000 வோல்டு மின் தாக்குதல் பெரிய ஆபத்தை விளைவிக்கும். எனவே பொதுமக்கள் மின் ரெயில் பாதையை நெருங்கி ஆபத்தை தேடிக் கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×