search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு- பிஞ்சிவாக்கம் தடுப்பணை நிரம்பி வழிகிறது
    X

    திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு- பிஞ்சிவாக்கம் தடுப்பணை நிரம்பி வழிகிறது

    • திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கன மழை கொட்டி வருகிறது.
    • கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கன மழை கொட்டி வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    கடம்பத்துார் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் அருகே கூவம் ஆற்றில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.7.80 கோடி மதிப்பீட்டில், 100 மீட்டர் நீளம், 2 மீட்டர் உயரத்தில் நவீன தானியங்கி இரும்பு மதகு வசதிகளுடன் தடுப்பணை கட்டப்பட்டது. இது கடந்த 2020-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது.

    தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டில் இருந்து கூவம் ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் சத்திரை தரைப்பாலம் சேதம் அடைந்தது.மேலும் கூவம் ஆற்றின் தண்ணீர் மற்றும் அருகில் உள்ள சப்பார் ஏரி உள்பட ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர் வருகையால் பிஞ்சிவாக்கம் தடுப்பணை நிரம்பி வழிகிறது.

    இதற்கிடையே பிஞ்சிவாக்கம் தடுப்பணையில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குளித்து வருகின்றனர்.

    Next Story
    ×