search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜூலை 4-ந்தேதி முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
    X

    ஜூலை 4-ந்தேதி முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

    • தொடக்க கல்வி பட்டய படிப்பில் சேர விரும்புவோர் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
    • ஓ.சி.வகுப்பு 50 சதவீதம் மதிப்பெண்ணும் மற்ற பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.

    சென்னை:

    2022-23-ம் கல்வி ஆண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்க கல்வி பட்டய படிப்பில் சேருவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    விண்ணப்பங்கள் இணையதளத்தில் https://scert.tnschools.gov.in என்ற முகவரியில் ஜூலை 4-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. உரிய கட்டணம் செலுத்தி விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.

    தொடக்க கல்வி பட்டய படிப்பில் சேர விரும்புவோர் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஓ.சி.வகுப்பு 50 சதவீதம் மதிப்பெண்ணும் மற்ற பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். 31.7.2022 அன்று அதிகபட்ச வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக வயது 35 ஆகும்.

    9-ந்தேதி மாலை 5 மணிக்குள் உரிய கட்டணத்துடன் விண்ணப்பதினை பதிவேற்றம் செய்ய கடைசி நாளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×