search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம்- பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு
    X

    தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம்- பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு

    • ஒவ்வொரு ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடத்தில் இந்த கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
    • வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் அது சம்பந்தமான வடிகால் வசதி முன் எச்சரிக்கை பணிகளை செய்வது குறித்தும் விரிவாக பேசப்பட்டது.

    சென்னை:

    மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.

    ஒவ்வொரு ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடத்தில் இந்த கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    கூட்டம் தொடங்கியதும் கிராம ஊராட்சியின் பொது நிதியில் செய்த பணிகள் மற்றும் அதற்கான செலவுகள் சம்பந்தமான அறிக்கைகள் படித்து காண்பித்து ஒப்புதல் பெறப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கிராமத்தில் என்னென்ன பணிகள் செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளது என்ற விவரம் பொதுமக்களுக்கு தெரியப் படுத்தப்பட்டது.

    வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் அது சம்பந்தமான வடிகால் வசதி முன் எச்சரிக்கை பணிகளை செய்வது குறித்தும் விரிவாக பேசப்பட்டது.

    இன்றைய கூட்டத்தில் பொதுமக்களுடன் பள்ளிக் கூட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், இ-சேவை மைய ஊழியர்கள், வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர், வேளாண்மை துறை, வருவாய்த் துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக பங்கேற்றனர்.

    கிராம சபை கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதால் இன்றைய கிராம சபை கூட்டத்தில் ஆர்வமுடன் மக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

    Next Story
    ×