search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்.
    X
    வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்.

    வரிசையில் நின்று வாக்களித்த கலெக்டர்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்தார்.
    நாமக்கல்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில், 5 நகராட்சி, 19 பேரூராட்சிகளில் உள்ள 439 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1, 740 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 679 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் மொத்தம் உள்ள 153 வார்டுகளில், நாமக்கல் நகராட்சியில் 22, 25 வார்டுகளில் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி விட்டனர். மீதமுள்ள 151 வார்டுகளுக்கு 365 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது. 

    இதேபோல், 19 பேரூராட்சிகளில் உள்ள 294 வார்டுகளில், பாண்டமங்கலத்தில் 4, பரமத்தியில் 1, பட்டணத்தில் 1 என 6 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். மீதமுள்ள 288 வார்டுகளுக்கு 324 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது. 

    நாமக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் பொதுமக்களோடு வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டார்.
    Next Story
    ×