search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்கழி அமாவாசை யாகத்தில் பெருமாள் திருவுருவ காட்சி
    X
    மார்கழி அமாவாசை யாகத்தில் பெருமாள் திருவுருவ காட்சி

    சாணார்பட்டி அருகே நடந்த மார்கழி அமாவாசை யாகத்தில் பெருமாள் திருவுருவ காட்சி

    சாணார்பட்டி அருகே நடந்த மார்கழி அமாவாசை யாகத்தில் தோன்றிய பெருமாள் திருவுருவ காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது.
    திண்டுக்கல்:

    இறை வழிபாட்டில் யாகம் முக்கியமான அம்சமாகும். யாகம் என்பதற்கு அர்ப்பணித்தல் என்று பொருளாகும். இது வேள்வி, ஹோமம் என்றும் அழைக்கப்பெறுகிறது. யாகத்தீயில் பொருட்களை இடுவதால் நல்ல மழை பெய்யும். சுவையான நீர் கிடைக்கும். காற்று மண்டலம் சுத்தமாகும். விளைச்சல் அதிகமாகும். விளைபொருட்களை ஏராளமாகப் பெறலாம். செல்வ அபிவிருத்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    திண்டுக்கல் சாணார்பட்டி அருகே மேட்டுக்கடையில் ஆதி பரஞ்சோதி சகல லோக சபை சார்பாக மார்கழி அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தை திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

    இந்த யாகத்தில் தோன்றிய பள்ளிகொண்ட பெருமாள் காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. பாற்கடலில் ஆதிசே‌ஷன் மீது பெருமாள் பள்ளிகொண்டிருப்பது போன்றும், பெருமாள் திருவடியில் லட்சுமி அமர்ந்திருப்பது போன்றும் இந்த காட்சி தோன்றி மறைந்தது. இதை பக்தர்கள் பலரும் பார்த்து வணங்கினர்.

    இதில் தியான பயிற்சி மற்றும் பஜனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதுரை, கோவை, தேனி, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×