search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவை வருகை
    X

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவை வருகை

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.
    கோவை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

    அங்கிருந்து கார் மூலம் கோவை கலெக்டர் அலுவலகம் வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு ரூ.20 கோடியில் கட்டப்பட் டுள்ள புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    பின்னர் கார் மூலம் கொடிசியா மைதானம் செல்கிறார். அங்கு தொழில் கண்காட்சி அரங்கில் நடைபெறும் விழாவில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகம், பேரூர் மற்றும் மதுக்கரை தாலுகா அலுவலகங்கள், காவலர் குடியிருப்பு, 9 போலீஸ் நிலைய கட்டிடங்கள், பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், ஈச்சனாரி மற்றும் மாசாணியம்மன் கோவில் அன்னதான மண்டபம், புதிய பாலங்கள், சங்கனூரில் சுற்றுச்சூழல் துறை ஆய்வகம் மற்றும் திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கட்டப்பட் டுள்ள அரசு துறை கட்டிடங்கள் என ரூ. 679 கோடி மதிப்பிலான 127 புதிய கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார். கோவை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதியம் 3.15 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவை நகரில் அ.தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. முதல்-அமைச்சரை வரவேற்று டிஜிட்டல் போர்டுகள் வைத்துள்ளனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று இரவு கொடிசியா அரங்கில் ஆய்வு நடத்தினார். விழா நடக்கும் இடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் ஹரிஹரன், அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ், மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலை யத்தில் இருந்து கார் மூலம் கலெக்டர் அலுவலகம் வருவதால் வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுகிறார்கள்.

    விழா நடைபெறும் இடங்களில் இன்று மாலை முதலே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    Next Story
    ×