search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னேற்றத்திற்கான பட்ஜெட் - தமிழக முதலமைச்சர் பாராட்டு
    X

    முன்னேற்றத்திற்கான பட்ஜெட் - தமிழக முதலமைச்சர் பாராட்டு

    நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க வழி செய்யும் சிறப்பான பட்ஜெட் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    2017-2018-ம் ஆண்டிற்கான ரெயில்வே பட்ஜெட்டுடன் இணைந்த பொது பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிவடைந்ததும், பட்ஜெட் குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் குறித்தான கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும் வகையில் முன்னேற்றத்திற்கான பட்ஜெட் அளிக்கப்பட்டுள்ளது, முந்தய பட்ஜெட்டுக்களை விட முன்னேற்ற பாதையில் பயணிக்கும் பட்ஜெட் இது. சவாலான சூழ்நிலையில் அனைத்து அம்சங்களும் சரியான முறையில் கையாளப்பட்டுள்ளது. தலித்துக்கள் மற்றும் பழங்குடியினருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு செய்ய தேவையான நடவடிக்கை பட்ஜெட்டில் தெரிகிறது. ரயில்வே பட்ஜெட்டுடன் பொது பட்ஜெட்டை இணைத்தது வரவேற்கத்தக்கது.

    அதேபோல், பட்ஜெட்டில் இருந்து தமிழகம் நிறைய திட்டங்களை எதிர்பார்க்கிறது. கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் நீட் தேர்வு நடக்காது என்பதை மத்திய அரசு உறுதி படுத்த வேண்டும். தமிழகத்தில் வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு திட்டங்கள் அறிவித்திருக்கலாம். தமிழக வறட்சி குறித்து எதுவும் குறிப்பிடாதது வருந்தமளிக்கிறது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×