என் மலர்

  செய்திகள்

  வேலூர் மேம்பாலத்தில் வேன் மோதி மாணவன் பலி
  X

  வேலூர் மேம்பாலத்தில் வேன் மோதி மாணவன் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் மேம்பாலத்தில் சைக்கிள் மீது மினிவேன் மோதிய விபத்தில் மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார்.
  வேலூர்:

  வேலூர் சேண்பாக்கம் மீனம்மாள் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ். இவரது மகன் இந்தர்நாத் (வயது 16). சேண்பாக்கம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் திருமலை (16). இருவரும் நண்பர்கள். சத்துவாச்சாரியில் உள்ள வெவ்வேறு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

  நேற்று பள்ளி முடிந்ததும் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் தனித்தனி சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

  வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலம் அருகே சென்றபோது பின்னால் சென்னையில் இருந்து வந்த மினிவேன் மாணவர்களின் சைக்கிள் மீது மோதியது. இதில் இந்தர்நாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  படுகாயம் அடைந்த திருமலையை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  Next Story
  ×