search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு
    X

    திருப்பூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குழி அருகே பெரியாண்டிபாளையம் கிராமத்தை முதலில் மத்திய குழுவினர் பார்வையிட்டனர். அங்கு விவசாயிகளிடம் மத்திய குழுவினர் கருத்துகளை கேட்டறிந்தனர்.
    திருப்பூர்:

    தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது.

    மழை இல்லாததாலும், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும் டெல்டா மாவட்டத்தில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது.

    பயிர்கள் கருகி விட்டது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மாரடைப்பால் மரணம், தற்கொலை நிகழ்வுகள் நடைபெற்றது. தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

    தமிழகத்தில் வறட்சி குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆய்வு நடத்த மத்திய குழு வந்தது. அவர்கள் 4 குழுக்களாக பிரிந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    இவர்களில் ஒரு குழுவினர் இன்று திருப்பூர் வந்தனர்.

    மத்திய குழுவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான மத்திய விரிவாக்கம் மற்றும் வறட்சி மேலாண்மை இயக்குனர் விஜயராஜ் மோகன், குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் உதவி ஆலோசகர் சந்தோஷ் , ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்களுடன் தமிழக குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தீராஜ்குமார் மற்றும் மாவட்ட லெக்டர் ஜெயந்தி , மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி ஆகி யோர் சென்று வறட்சி பாதித்த இடங்களை பார்வையிடுகின்றனர்.

    இந்த குழுவினர் இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குழி அருகே பெரியாண்டிபாளையம் கிராமத்தை முதலில் பார்வையிட்டனர். அங்கு விவசாயிகளிடம் மத்திய குழுவினர் கருத்துகளை கேட்டறிந்தனர்.

    அவர்களிடம் விவசாயிகள் கருகிய பயிர்களை காண்பித்து கண்ணீர் விட்டனர்.

    அப்போது விவசாயிகள் பருவ மழை பொய்த்ததால் தென்னை, சோளம், வாழை பயிர்கள் கருகிவிட்டன. இதனால் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாத நிலையில் தவித்து வருகிறோம். நஷ்டமடைந்த எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று கூறினர்.

    மேலும் மத்திய குழுவினர் வாடிய பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதைத் தொடர்ந்து பெருமாநல்லூர் அருகே ஈட்டி வீரம்பாளையம், அவினாசி அருகே புதுபாளையம் ஆகிய கிராமங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

    இதைதொடர்ந்து திருப்பூர் வேலன் ஓட்டலில் மாவட்டம் முழுவதும் வறட்சியால் பாதித்த பயிர்களின் புகைப்பட காட்சி நடக்கிறது. இதை மத்திய குழுவினர் பார்வையிடுகின்றனர்.

    பின்னர் மத்திய குழுவினர் கோவை மாவட் டத்துக்கு இன்று பிற்பகல் செல்கின்றனர். சூலூர், அன்னூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட உள்ளனர்.

    Next Story
    ×