என் மலர்

  செய்திகள்

  பாலக்காடு அருகே ரெயிலில் அடிபட்டு ஆண் யானை பலி
  X

  பாலக்காடு அருகே ரெயிலில் அடிபட்டு ஆண் யானை பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலக்காடு அருகே ரெயிலில் அடிபட்டு ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

  கோவை:

  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு வழியாக திருச்சிக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது.

  இந்த ரெயில் இன்று காலை 4.40 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டது. காலை 7.15 மணியளவில் பாலக்காடு ரெயில்வே போலீசில் நிலையத்துக்குட்பட்ட சுள்ளிமடா- வாளையாறு இடையே உள்ள பகுதியில் சென்று கொண்டிருந்தது.

  அப்போது ஒரு யானை தண்டவாளத்தை கடக்க முயன்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரெயில் என்ஜின் டிரைவர் ஒலி எழுப்பியபடி ரெயிலை நிறுத்த முயன்றார். அதற்குள் ரெயில் வேகமாக யானை மீது மோதியது. இதில் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி யானை பரிதாபமாக இறந்தது. பின்னர் இது குறித்து வனத்துறையினர் மற்றும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்ப்பட்டது.

  உடனடியாக பாலக்காடு மாவட்ட வன அதிகாரி சுரேஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அது ஆண் யானை என்பதும் அதற்கு 12 வயது இருக்கும் என்பதும் தெரியவந்தது.

  Next Story
  ×