search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்த காட்சி.
    X
    தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்த காட்சி.

    ஆயுத பூஜை எதிரொலி: தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

    ஆயுத பூஜை விழா நாளை மறுநாள் (10-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. ஆயுதப்பூஜைக்கு பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும். இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    ஆரல்வாய்மொழி:

    ஆயுத பூஜை விழா நாளை மறுநாள் (10-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. ஆயுதப்பூஜைக்கு பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும். இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    தோவாளை மார்க்கெட்டில் கடந்த வாரம் மிகவும் குறைந்து காணப்பட்ட பூக்களின் விலை 2 நாட்களாக உயர்ந்து காணப்படுகிறது.

    பிச்சிப்பூ இன்று ஒரு கிலோ ரூ.850-க்கு விற்கப்பட்டது. மல்லிகைப்பூ நேற்று ஒரு கிலோ ரூ.600-க்கு விற்பனை ஆனது. இன்று ரூ.50 உயர்ந்து கிலோ ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ரூ.150-க்கு விற்ற சம்பங்கி இன்று ரூ.200-க்கும், ரூ.200-க்கு விற்ற மஞ்ச செவ்வந்தி ரூ.260-க்கும், ரூ.200-க்கு விற்ற வெள்ளை செவ்வந்தி ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்கள் விலை விவரம் வருமாறு:-

    மஞ்சகேந்தி -ரூ.80, வாடாமல்லி ரூ.70, கோழிப்பூ ரூ.50, ரோஸ் ரூ.220, அரளி ரூ.240, சிவப்பு கேந்தி ரூ.70, தாமரை ஒன்று ரூ.10, கொழுந்து ரூ.100, துளசி ரூ.30.

    பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டாலும் விற்பனை குறையவில்லை. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட வியாபாரிகள் போட்டி போட்டு பூக்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர். இதனால் தோவாளை பூ மார்க்கெட் களை கட்டியுள்ளது.

    பூக்கள் விலை நாளை இதை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×