search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 82 அடியாக குறைந்தது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 82 அடியாக குறைந்தது

    மேட்டூர் அணை நீர் மட்டம் நேற்று காலையில் 83.39 அடியாக குறைந்தது. இன்று காலையில் மேலும் குறைந்து அணை நீர்மட்டம் 82.44 அடியாக உள்ளது.
    மேட்டூர்:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி கர்நாடகம் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க மறுத்து அங்குள்ள அணைகளை மூடிவிட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்தது.

    கடந்த சனிக்கிழமை அன்று (24-ந்தேதி) விநாடிக்கு 1,861 கன அடி வீதம் வந்த தண்ணீர் நேற்று முன்தினம் (25-ந்தேதி) காலையில் விநாடிக்கு 611 கன அடியாக சரிந்தது. பின்னர் நீர்வரத்து சற்று அதிகரித்து நேற்று விநாடிக்கு 634 கன அடி வீதம் தண்ணீர் வந்தது.

    தற்போது காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் நீர்வரத்து மேலும் அதிகரித்து இன்று காலையில் விநாடிக்கு 796 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வருகிறது.

    சம்பா சாகுபடிக்காக அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் 84.34 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர் மட்டம் நேற்று காலையில் 83.39 அடியாக குறைந்தது. இன்று காலையில் மேலும் குறைந்து அணை நீர்மட்டம் 82.44 அடியாக உள்ளது.

    நீர்வரத்தை விட பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் குறைந்து வருகிறது. அணையில் நீர் இருப்பு வேகமாக சரிந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×