search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்: வானிலை மைய இயக்குனர் பேட்டி
    X

    தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்: வானிலை மைய இயக்குனர் பேட்டி

    தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    தென் மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி இந்த மாதம் (செப்டம்பர்) இறுதி வரை பெய்யும். தமிழ்நாட்டை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக மழையை தரும். இருப்பினும் தென் மேற்கு பருவமழை ஓரளவு பெய்யும்.

    இந்த நிலையில் செப்டம்பர் மாதம் பிறந்துவிட்டது. எனவே வெயில் குறைந்து விடும் என்று தமிழக மக்கள் நம்பி இருந்தனர். ஆனால் வருகிற 4 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக கடற்காற்று வலுவிழந்து நேரம் கழித்து வீசுகிறது. அதனால் வெப்பம் அதிகரித்து வருகிறது. வருகிற 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் கடுமையாக இருக்கும்.

    இதன் காரணமாக வறண்ட வானிலை நிலவும் என்று கூற முடியாது. ஆனால் மழை பெய்யாது. அதன் பிறகுதான் வெயில் அடிக்குமா, மழை பெய்யுமா என்பது தெரியவரும்.

    இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    சிவகங்கை, கூடலூர் பஜார் தலா 2 செ.மீ., காட்டுமன்னார் கோவில், தம்மம்பட்டி, பரங்கிப்பேட்டை, ஆனைக்காரன் சத்திரம், தேவலா, ஏற்காடு, ஜெயங்கொண்டம், ஓமலூர், சிதம்பரம், சீர்காழி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
    Next Story
    ×