search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிப்பட்டு அருகே சுகாதாரமற்ற தண்ணீர் குடித்த மேலும் ஒரு பெண் பலி
    X

    பள்ளிப்பட்டு அருகே சுகாதாரமற்ற தண்ணீர் குடித்த மேலும் ஒரு பெண் பலி

    பள்ளிப்பட்டு அருகே சுகாதாரமற்ற தண்ணீர் குடித்த மேலும் ஒரு பெண் பலியானார்.
    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டு அருகே உள்ள சொரக்காய் பேட்டையில் சுகாதாரமில்லாத ஆழ்துளை கிணற்று நீரை குடித்த கிராம மக்கள் 50 பேருக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    அவர்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கண்ணப்பன் மற்றும் உண்ணாமலை ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றை மூடினார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சொரக்காதர்பேட்டை கிராமத்திலேயே மருத்துவ குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சுகாதாரமற்ற நீரை குடித்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சாவித்ரி (வயது56) என்ற பெண் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    மேலும் எர்ரம்பன், கந்தசாமி, சரோஜா, சுந்தர், ஜெயம்மா, சுபபிரமணி, கோவிந்தம்மாள், ருக்மணி, தங்கப்பன் ஆகிய 9 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×