search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் 32 தமிழர்கள் கைது: உறவினர்கள் கதறல்
    X

    ஆந்திராவில் 32 தமிழர்கள் கைது: உறவினர்கள் கதறல்

    திருப்பதி கோவிலுக்கு சென்றவர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளதையடுத்து அவருடைய உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

    ஆரணி:

    செம்மரம் வெட்ட சென்றதாக ஆந்திர போலீசார் கைது செய்யப்பட்ட 32 பேரில் 29 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதில் படவேடு அடுத்த மேல் செண்பகத்தோப்பு, கீழ் செண்பகத்தோப்பை சேர்ந்த 15 பேர் உள்ளனர்.

    அவர்கள் கைது செய்யப்பட்டது உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் கதறி அழுதனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திரனின் மனைவி மேனகா கூறியதாவது:-

    எனது கணவர் ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் திருப்பதிக்கு கோவிலுக்கு செல்வதாக கூறி படவேட்டிலிருந்து நேற்று முன்தினம் பஸ்சில் சென்றனர். மறுநாள் காலையில் டிவியில் பார்த்த பின்பு தான் எனது கணவரையும் உறவினர்களையும் ஆந்திர போலீசார் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்டது எங்களுக்கு தெரியவந்தது. இதானல் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். கூலி தொழிலையும் விவசாயத்தையும் நம்பிதான் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.

    அவர்கள் நிச்சியமாக செம்மரம் வெட்ட செல்லவில்லை. கோவிலுக்குதான் சென்றனர். ஆந்திர போலீஸ் வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்.

    Next Story
    ×