search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் வக்கீல் படுகொலை வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட மேலும் 2 பேர் கைது
    X

    புழல் வக்கீல் படுகொலை வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட மேலும் 2 பேர் கைது

    புழல் வக்கீல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட மேலும் 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
    செங்குன்றம்:

    சென்னை புழல் காவாங்கரையில் உள்ள சங்கரலிங்கனார் தெருவைச் சேர்ந்தவர் அகில்நாத் (வயது 33). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருந்து வந்தார். கடந்த 16-ந்தேதி வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த அகில்நாத்தை மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த புழல் போலீசார் காவாங்கரையை சேர்ந்த ரோசம்மாள் (52), பவித்ரன் (22), சுமன்(21) ஆகிய 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும், இதுதொடர்பாக கடந்த 17-ந் தேதி காவாங்கரையைச் சேர்ந்த விஜயகுமார்(28), விக்னேஷ் (25) உள்பட 6 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். சந்திரகுமார்(30) என்பவர் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் பெரியதெருவைச் சேர்ந்த அசோக் என்கின்ற அசோக்குமார்(40), அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி பார்த்திபன்(28) ஆகிய 2 பேரையும் புழல் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இதில் பார்த்திபன் மீது பெருங்களத்தூர், பள்ளிக்கரணை போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த அசோக்குமார் புழல் ஒன்றிய இளைஞரணி இணைச்செயலாளராக இருந்து வருகிறார். அவர் புழல் ஒன்றிய குழுத்தலைவர் குமரி அருணாசலத்தின் நெருங்கிய உறவினர் என்றும் கூறப்படுகிறது.

    அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×