search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டிட பணி வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
    X

    கட்டிட பணி வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

    கட்டிட பணி வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    அம்பத்தூர்:

    சென்னை அம்பத்தூர் ஆசிரியர் காலனி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 27). இவர் கட்டிட வடிவமைப்பு காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். இவருடைய நண்பர் திருமுல்லைவாயல் ஹாசினி நகரை சேர்ந்தவர் ராஜேஷ்காந்த் (27).

    கிருஷ்ணராஜூவுடன் சேர்ந்து கட்டிட காண்டிராக்டர் தொழிலை ராஜேஷ்காந்த் செய்து வந்தார். தற்போது தனியார் நிறுவனம் மூலம் அந்த தொழிலை ராஜேஷ்காந்த் செய்தார்.

    இந்த நிலையில் போரூர் ராமாபுரத்தில் உள்ள ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் கட்டிட பணி இருப்பதாகவும், அந்நிறுவன மேலாளர் தனக்கு தெரிந்தவர் என்பதால் அந்த பணியை உனக்கு வாங்கி தருகிறேன் என கிருஷ்ணராஜூவிடம், ராஜேஷ்காந்த் ஆசை வார்த்தை கூறினார். மேலும் அந்த பணிக்கு முன்பணம் ரூ.18 லட்சம் கட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    நண்பனின் பேச்சை உண்மை என நம்பிய கிருஷ்ணராஜ் ரூ.18 லட்சத்தை தவணை முறையில் ராஜேஷ்காந்திடம் கொடுத்தார். ஆனால் பணத்தை வாங்கிய ராஜேஷ்காந்த் கூறியபடி கட்டிட பணியை வாங்கி தராமல் இழுத்தடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த கிருஷ்ணராஜ் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நேரில் அணுகி விசாரித்த போது, ராஜேஷ்காந்த் கூறியது பொய் என தெரியவந்தது.

    இதனால் ராஜேஷ்காந்திடம் ரூ.18 லட்சத்தை திரும்ப தரும்படி கிருஷ்ணராஜ் கேட்டார். ஆனால் பணத்தை தராமல் அலைகழித்த ராஜேஷ்காந்த் ஒரு கட்டத்தில் கிருஷ்ணராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணராஜ் அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜேஷ்காந்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×