search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை மாவட்டத்தில் பெண்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்
    X

    கோவை மாவட்டத்தில் பெண்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

    கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. பெண்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    கோவை, மே.16–

    கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதி களிலும் மொத்தம் 28 லட்சத்து 33 ஆயிரத்து 249 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 2911 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

    கோவையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் மழைக்கான அறிகுறிகளுடன் காணப்பட்டது. இதனால் கனமழை பெய்யக் கூடும் என கருதிய வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்கு விரைந்தனர். இதனால் வாக்குச் சாவடிகளில் கூட்டமாக இருந்தது. குறிப்பாக பெண் வாக்காளர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மழை வந்தால் பாதுகாப்பாக இருக்க தனி அறைகள், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக வீல் சேர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர். பதட்ட மான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டிருந்த 278 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாது காப்பில் ஈடுபட்டனர். மேலும் இந்த வாக்குச்சாவடிகளில் வெப்காமிரா பொருத்தப் பட்டு வாக்குச்சாவடிக்குள் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் இதில் பதிவு செய்யப்பட்டன.

    கோவை வடக்கு தொகு திக்கு உட்பட்ட சங்கனூர் மாநகராட்சி பள்ளியில் காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. உடனே வாக்காளர்கள் ஓட்டுப் போட்ட போது மின்னணு எந்திரத்தில் வாக்கு பதிவாகவில்லை.

    இதுதுகுறித்து வாக்காளர்கள் தேர்தல் அலுவலரிடம் புகார் செய்தனர். உடனடியாக அங்கு மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டு 1 மணி நேர தாமதமாக 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

    சூலூர் தொகுதிக்குட்பட்ட வடுகபாளையத்தில் 18–வது எண் கொண்ட வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் பழுதால் ஓட்டுப் பதிவில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மாற்று எந்திரம் வரவழைக்கப் பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது.

    இதுபோல மேலும் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக ஓட்டுப்பதிவில் சிறிது நேரம் தாமதம் நிலவியது.

    கோவை மாவட்ட தேர்தல் அதிகாரயும், கலெக்டருமான அர்ச்சனா பட்நாயக் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதேபோல வேட்பாளர்களும் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து வருகின்றனர்.

    Next Story
    ×