என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • குவாலிபயர் 1 போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதுகிறது.
    • குவாலிபயர் 1 போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி குறித்த அஸ்வின் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறம் குவாலிபயர் 1 போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், குவாலிபயர் 1 போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆர்சிபி அணியில் மாயங்க் அகர்வாலின் பங்களிப்பு பற்றி பேச மறுக்கக்கூடாது. ஏனெனில் அவர் இந்த ஆண்டு சிறந்த உள்நாட்டு சீசனை வைத்திருந்தார். ஐபிஎல் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் பேசினேன். ஆனால் பலரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பில் தற்போது அவர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.

    இந்த ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயரின் சீசனாக இல்லாமல் போனால் ஆர்.சி.பி அணி தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தற்போதைய பஞ்சாப் கிங்ஸ் அணி வலிமையான அணியாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை பெங்களூரு அணி தான் முதல் அணியாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழையும் என்று உள்ளுணர்வு சொல்கிறது.

    என அஸ்வின் கூறினார்.

    • டி20, ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருப்பது கடினமானது.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்படுவது குழப்பமான விஷயம் கிடையாது.

    டெஸ்ட் கேப்டன் பதவி உங்களது லட்சியங்களில் ஒன்றாக இருந்ததா என்று அஸ்வின் யூடியூப் அரட்டையில் ஜடேஜாவிடம் கேள்வி எழுப்பினார்.

    இது குறித்து ரவீந்திர ஜடேஜா கூறியதாவது:-

    ஆம், நிச்சயமாக! பல ஆண்டுகளாக, நான் வெவ்வேறு கேப்டன்களின் கீழ் விளையாடியுள்ளேன். நான் விளையாடிய ஒவ்வொரு கேப்டனின் மனநிலையையும் நான் அறிவேன். மேலும் வீரர்களுக்கு என்ன தேவை, அவர்களின் மனநிலையையும் நான் புரிந்துகொள்கிறேன்.

    நான் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கியபோது, இவ்வளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. வெள்ளை பந்து கிரிக்கெட்தான் எனது பலம் என்று நான் எப்போதும் நினைத்தேன். அங்கு நிலைநிறுத்த விரும்பினேன்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் பவுலருக்கு தகுந்தார் போல் 2 - 3 பீல்டர்களை மாற்றினால் போதும். பேட்ஸ்மேனுக்கு தகுந்தார் போல் மாற்ற வேண்டியதில்லை. அதனாலேயே டெஸ்ட் பார்மெட்டில் கேப்டனாக செயல்படுவது வித்தியாசமான விஷயம் என்று நான் சொல்கிறேன்.

    டெஸ்ட் போட்டிகளில் பவுலர் நல்ல ரிதத்தில் இருக்கிறாரா என்பதைப் பார்த்து பவுலிங் செய்ய வைக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும். எப்போது உங்களுடைய முதன்மை பவுலரை கொண்டு வர வேண்டும் என்பது முக்கியம். அது கொஞ்சம் கணக்கீடுகளைப் பொறுத்தது. ஆனால் அது ஐபிஎல் போன்ற டி20 பார்மட்டில் கேப்டனுக்கு தேவைப்படாது. ஏனெனில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்திலும் வித்தியாசமான நிகழ்வு காத்திருக்கும். ஒரு பந்து பவுண்டரி அல்லது சிக்சர் சென்றால் அதற்காக நீங்கள் மாற்றத்தை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

    அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்படுவது குழப்பமான விஷயம் கிடையாது. நான் நிறைய கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். அவர்களுக்கு டெஸ்ட் போட்டிகள் சவாலாக இருந்ததைப் பார்த்ததில்லை. அழுத்தமே இல்லாதது போல் இருக்கும்.

    டெஸ்ட் போட்டியில் திடீரென நீங்கள் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் அல்லது புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருக்கும் ஒரே சவால் என்னவெனில் பவுலரை எப்படி சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனக் ஜடேஜா கூறினார்.

    • பஞ்சாப் அணி இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் அதிக ஆதரவு கிடைக்கவில்லை.
    • பஞ்சாப் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

    இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில் பஞ்சாப் அணி இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், அந்த அணிக்கு அதிக ஆதரவு கிடைக்கவில்லை என்று ஒரு ரசிகரின் ஸ்னாப்சாட் செய்திக்கு அர்ஷ்தீப் பதிலளித்துள்ளார். மேலும் அனைவரும் தங்களை ஆதரிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எங்களை ஆதரித்ததற்கு நன்றி. நீங்கள் பஞ்சாபி இல்லை. ஆனால் நீங்கள் இன்னும் பஞ்சாபை ஆதரிக்கிறீர்கள். அதே நேரத்தில் பஞ்சாபை ஆதரிக்காத மற்றும் பல்வேறு விருப்பமான அணிகளைக் கொண்ட பல பஞ்சாப் மக்கள் உள்ளனர்.

    பஞ்சாப், அவர்களின் மாநிலம், அவர்களின் அணியை ஆதரிக்கவும், நாங்கள் வெற்றி பெறுவதைக் காண அதிக எண்ணிக்கையில் வரவும் நான் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று அர்ஷ்தீப் கூறினார்.

    • டிஎன்பிஎல் தொடர் கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல்லில் நடக்கிறது.
    • டிக்கெட் விலை இந்த ஆண்டு ரூ.300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    9-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஜூலை 6-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திருச்சி கிராண்டு சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    கோவை, சேலம்,நெல்லை, திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 8 போட்டிகள் கோவையிலும், சேலத்தில் 9 போட்டிகளும், நெல்லையில் 7 போட்டிகளும் நடத்தப்படுகிறது.

    கோவையில் ஜூன் 5-ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மறுநாள் 6-ந்தேதி சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டி.என்.பி.எல். சேர்மன் பாலகிருஷ்ணா, தலைமை நிர்வாக அதிகாரி பிரசன்னா கண்ணன், ஸ்ரீராம் கேபிட்டல் தலைவர் ராஜேஷ் சந்திர மவுலி, நெல்லை ராயல் கிங்ஸ் அணி கேப்டன் அருண் கார்த்திக், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவி செயலாளர் ஆர்.என்.பாபா ஆகியோர் டி.என்.பி.எல். போட்டி குறித்து நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் 'பிளே ஆப்' மற்றும் இறுதிப்போட்டி உள்பட 32 போட்டிகள் நடத்தப்படுகிறது. குவாலி பையர்-1 எலிமினேட்டர் , குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி திண்டுக்கல்லில் நடை பெறும். இந்த ஆண்டு ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக 6 இரட்டைப் போட்டிகள் நடைபெறு கிறது.

    டி.என்.பி.எல். போட்டி தமிழக வீரர்களுக்கு பெரிய வாய்ப்புகளை வழங்கி உள்ளது. வீரர்கள் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் டி.என்.பி.எல். தொடங்கப்பட்டது. இங்கு விளையாடிய வீரர்கள் இந்திய அணியில் தேர்வாகி விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக உள்ள டி.ஆர்.எஸ். முறை தற்போதும் தொடரும்.

    கோவை, சேலம் பகுதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. நெல்லையில் நடைபெறும் போட்டிகளுக்கு வருகிற 10 -ந்தேதி டிக்கெட் விற்பனை தொடங்கும். டிக்கெட் விலை இந்த ஆண்டு ரூ.300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைன் வழியாகவே விற்பனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நடப்பு ஆண்டு பஞ்சாப் அணியை இறுதிப் போட்டி வரை தன்னுடைய தலைமையில் ஷ்ரேயாஸ் அழைத்துச் சென்றுள்ளார்.
    • கடந்த ஆண்டு ஷ்ரேயாஸ் தலைமையில் கேகேஆர் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இளம் இந்திய அணிக்குக் கேப்டனாக சுப்மன் கில்லும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை.

    கடந்த ஆண்டு அவர் தலைமையில் கேகேஆர் அணி ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில் அதன் பிறகு தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    நடப்பு ஆண்டு பஞ்சாப் அணியை இறுதிப் போட்டி வரை தன்னுடைய தலைமையில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனாலும் அவர் அணியில் எடுக்கவில்லை என்பதை விட ஓரம்கட்டப்பட்டுள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில் இந்திய அணியில் ஏன் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை என்ற கேள்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் "நான் தேர்வுக்குழுவின் தலைவர் இல்லை" எனக் கூறியுள்ளார். கம்பீரின் இந்த பதில் பொறுப்பற்றத் தனமாகவும் திமிர்த்தனத்துடனும் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

    • ஐபிஎல் கோப்பையை வெல்லாத 2 அணிகள் குவாலிபையர் 1 சுற்றில் மோதுகிறது.
    • ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத ஒரு அணி இறுதிப்போட்டிக்கு செல்லவுள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு. தோல்வி காணும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

    இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத 2 அணிகள் குவாலிபையர் 1 சுற்றில் மோதுகிறது. இதனால் கண்டிப்பாக கோப்பையை கைப்பற்றாத ஒரு அணி இறுதிப்போட்டிக்கு செல்லவுள்ளது. இந்நிலையில், இந்த 2 அணிகளும் பிளேஆப் சுற்றில் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பதை பார்ப்போம்.

    ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி இதுவரை மொத்தம் 15 பிளேஆப் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் 5 போட்டிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 3 இறுதிப் போட்டிகளில் (2009, 2011 மற்றும் 2016) பெங்களூரு அணி தோல்வியடைந்துள்ளது.

    ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணி இதுவரை 4 ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. இதில் 1 போட்டியில் மட்டும் தான் பஞ்சாப் வெற்றி பெற்றுள்ளது. மற்ற 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

    குறிப்பாக 2014 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் பஞ்சாப் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு ஜடேஜா பேட்டியளித்தார்.
    • அந்த நேர்காணலில் பல சுவாரஷ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

    இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சக சி.எஸ்.கே. வீரர் அஷ்வினுக்கு பேட்டி அளித்தார். அந்த நேர்காணலில் பல சுவாரஷ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

    அந்த நேர்காணலில் பேசிய ஜடேஜா, "எனது கிரிக்கெட் பயணத்தை செதுக்கியது 2 மகேந்திரன்கள் தான். ஒருவர் எனது சிறுவயது பயிற்சியாளர் மகேந்திரசிங் சவுகான். மற்றொருவர் மகேந்திர சிங் தோனி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    தோனியை பற்றி ஒரே வார்த்தையில் விவரிக்கச் சொன்னால் என்ன சொல்வீர்கள் என்று ஜடேஜாவிடம் அஷ்வின் கேள்வி எழுப்பினார். அதற்கு "அவரது மகத்துவத்தை விவரிக்க வார்த்தையே இல்லை. அவர் அனைவருக்கும் மேலாக நிற்கிறார்" என்று ஜடேஜா பதிலளித்தார்.

    • இவ்விரு அணிகளும் ஒட்டுமொத்தத்தில் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் பஞ்சாப் அணி 18 ஆட்டங்களிலும், பெங்களூரு அணி 17 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 5 முதல் 10 இடங்களை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

    இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு. தோல்வி காணும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

    பஞ்சாப் அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 19 புள்ளிகள் பெற்று பெங்களூருவுடன் சமநிலை வகித்தாலும் ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் முதலிடத்தை தனதாக்கி 3-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. அந்த அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றியை சுவைத்தது.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (514 ரன்கள்), பிரப்சிம்ரன் சிங் (499), பிரியான்ஷ் ஆர்யா (424), நேஹல் வதேரா, ஷசாங் சிங்கும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் (18 விக்கெட்), யுஸ்வேந்திர சாஹல், ஹர்பிரீத் பிராரும் நல்ல நிலையில் உள்ளனர். மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆட்டத்தை தவறவிட்ட சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திரா சாஹல் இந்த ஆட்டத்தில் களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகுவதற்காக தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மார்கோ யான்சென் தாயகம் திரும்பி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகும். அவர் 14 ஆட்டங்களில் ஆடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

    பெங்களூரு அணி லீக்கில் 14 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது) என 19 புள்ளிகள் பெற்றாலும், ரன்-ரேட்டில் பஞ்சாப்பை விட பின்தங்கியதால் 2-வது இடத்தை பிடித்து 10-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. முந்தைய லீக் ஆட்டத்தில் (லக்னோவுக்கு எதிராக) 228 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்திய உற்சாகத்துடன் பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (8 அரை சதத்துடன் 602 ரன்) சூப்பர் பார்மில் இருக்கிறார். பில் சால்ட், ரஜத் படிதார், ஜிதேஷ் ஷர்மா நல்ல பங்களிப்பை அளிக்கின்றனர். பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா வலுசேர்க்கின்றனர். லுங்கி இங்கிடி (தென்ஆப்பிரிக்கா) விலகினாலும், தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 4 ஆட்டங்களை தவற விட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் (10 ஆட்டங்களில் 18 விக்கெட்) திரும்புவது பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்த சீசனில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து இருக்கின்றன. அதில் பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும், முல்லாப்பூரில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளன. வெளியூர் ஆட்டங்களில் கலக்கி வரும் பெங்களூரு அணி, பஞ்சாப்பை பதம் பார்த்து 4-வது முறையாக இறுதிப்போட்டியை எட்ட வரிந்து கட்டும். அதேநேரத்தில் பஞ்சாப் அணி தனது உத்வேகத்தை தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இவ்விரு அணிகளும் ஒட்டுமொத்தத்தில் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 18 ஆட்டங்களிலும், பெங்களூரு அணி 17 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷசாங் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், கைல் ஜாமிசன், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

    பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, குருணல் பாண்ட்யா, லியாம் லிவிங்ஸ்டன், ரொமாரியோ ஷெப்பர்டு, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
    • குஜராத் -மும்பை அணிகள் எலிமினேட்டர் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை மோதுகிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2-வது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் நாளை மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் 3-ம் இடம் பிடித்த குஜராத், 4 -ம் இடம்பிடித்த மும்பை அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை (மே 30) மோதுகிறது.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பயிற்சியின் போது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட், சக வீரரான மிட்செல் சான்ட்னர் மாதிரி சுழற்பந்து வீசினார். அருகில் இருந்த பும்ரா இதனை சிரித்தப்படி பார்த்துக் கொண்டிருந்தார். கிட்ட தட்ட அவரே மாதிரி போல்ட் பந்து வீசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பேட்ஸ்மேன் தனக்கு இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதலாக ஒரு அடி முன்னே செல்கிறார்.
    • மன்கட் முறையில் செய்த ரன் அவுட் முறையீட்டை திரும்பப் பெற்றது திக்வேஷ் ரதிக்கு அவமானம்.

    2025 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியின் முக்கியமான கட்டத்தில் ஜிதேஷ் சர்மாவை லக்னோ அணியின் சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி, மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். ஆனால் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், இந்த அவுட் முறையீட்டை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதனை பலரும் பாராட்டி வந்தனர்.

    இந்நிலையில் மன்கட் செய்த பந்துவீச்சாளரை ரிஷப் பண்ட் அவமானப்படுத்தி விட்டதாகவும், இப்படி செய்தால் அந்தப் பந்துவீச்சாளர் எப்படி மீண்டும் மன்கட் முறையில் விக்கெட் எடுக்க முயற்சி செய்வார்? எனவும் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மன்கட் முறையில் செய்த ரன் அவுட் முறையீட்டை திரும்பப் பெற்றது திக்வேஷ் ரதிக்கு அவமானம். அந்தப் பந்துவீச்சாளர் கூனிக்குறுகிப் போயிருப்பார். இனி இதுபோல ரன் அவுட் செய்ய முயற்சிக்க மாட்டார். ஏன் அதை அவர் மீண்டும் செய்யக்கூடாது?

    இது விதி சார்ந்த ஒரு விஷயம். பேட்ஸ்மேன் தனக்கு இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதலாக ஒரு அடி முன்னே செல்கிறார். அதன் மூலம் இரண்டு ரன்களை வேகமாக ஓட முயற்சி செய்கிறார். இங்கே அவர் அவுட் ஆனாரா? இல்லையா? என்பது விஷயம் இல்லை. கேப்டன் அந்த முறையீட்டை திரும்பப் பெற்றாரா? இல்லையா? என்பதுதான் விஷயம். இங்கே நாம் கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி மட்டும் சில வினாடிகள் பேசுவோம்.

    விதிப்படி இந்த முடிவு மூன்றாவது நடுவருக்குச் சென்றது. நடுவர் 'நாட் அவுட்' என்று சொன்னார். அப்படி என்றால் இது 'நாட் அவுட்' தான். இதில் அந்த முறையீட்டை திரும்பப் பெறுவதற்கான அவசியமே இல்லை. ஒருவேளை ஜிதேஷ் சர்மா 'அவுட்' என தீர்ப்பு வந்திருந்தால், பந்துவீச்சாளர் தான் பந்து வீசி முடிக்கும் முன்பாகவே அவர் தனது கால்களை எடுத்து வெளியே வைத்திருந்தால் இது 'அவுட்' என தீர்ப்பாக இருந்திருக்கும்.

    அப்போதும் பந்துவீச்சாளர் பக்கமே நியாயம் இருந்திருக்கும். ஆனால் இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் அந்த அணியின் ரசிகர்கள் பார்வையில் மோசமான விஷயமாக இருந்திருக்கும். அவர்கள் ரதி மற்றும் ரிஷப் பண்ட்டை விரும்பி இருக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    • இளம் அணி என்பதால் எதிர்பார்ப்பு இல்லாதது கில் தலைமையிலான இந்திய அணிக்கு உதவும்.
    • இங்கிலாந்துக்கு இதற்கு முன் சென்ற போது சுப்மன் கில் பேட்டிங் சராசரி என்ன? என்பது முக்கியமல்ல.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தலைமையில் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பெரியளவில் ரன்கள் குவிக்காத அவர், முதலில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்று சேவாக், ஸ்ரீகாந்த் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

    இந்நிலையில் சுப்மன் கில் பற்றி எதிர்மறையான விஷயங்களை பேசுவதை விட நேர்மறையான விஷயங்களை பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு இதற்கு முன் சென்ற போது சுப்மன் கில் பேட்டிங் சராசரி என்ன? என்பது முக்கியமல்ல. இப்போது நாம் எதிர்மறையாக பேச வேண்டாம். திறமையை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் அசத்துவார் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விளையாடுவது எளிதாக இருக்காது.

    சுப்மன் கில் கேப்டன்ஷிப் பதவிக்கு பொருத்தமாக இருப்பார். தேர்வாளர்கள் அனைத்து விஷயங்களையும் கணக்கிட்ட பின்பே நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் அவரை கேப்டனாக நியமித்துள்ளார்கள். அவருக்கு அணி மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை.

    இளம் அணி என்பதால் எதிர்பார்ப்பு இல்லாதது கில் தலைமையிலான இந்திய அணிக்கு உதவும். சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் அசத்துவது நல்லது. பும்ரா உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவு கொடுத்து கேப்டனாக வளர உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

    சுப்மன் கில் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் செயல்படுவது தன்னுடைய இலக்கை சாதிக்க உதவும். திடமான பேட்ஸ்மேனாக தெரியும் அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன்.

    என்று கபில்தேவ் கூறினார்.

    • இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு பேட்டிங்கில் நல்ல நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • நான் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

    நான் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்/ I was determined to play a big innings.லக்னோ:

    ஐ.பி.எல். வரலாற்றில் அதிக (ரூ.27 கோடி ) தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப்பண்ட் தனது மோசமான பேட்டிங்கால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார். நேற்றைய கடைசி லீக்கில் பெங்களூரு அணிக்கு எதிராக அவர் சதம் அடித்தார். ரிஷப்பண்ட் 61 பந்தில் 118 ரன் (11 பவுண்டரி, 8 சிக்சர்) எடுத்தார்.

    ஆனால் அவரது இந்த சதம் பலன் இல்லாமல் போனது. பெங்களூரு அணி 228 ரன் இலக்கை எடுத்து சாதித்தது.

    தோல்விக்கு பிறகு லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு பேட்டிங்கில் நல்ல நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க போகிறேன். கிரிக்கெட்டை பற்றி யோசிக்க வேண்டாம். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரப்போகிறது. அதற்காக நல்ல மனநிலையில் தயாராகி வருகிறேன்.

    பந்து வீச்சாளர்களின் காயம் (மயங்க் யாதவ், மோசின்கான்) குறித்த கவலைகள் இருந்தது. இந்த சீசன் முழுவதும் எங்களுக்கு வலியை ஏற்படுத்தியது.

    நான் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஒவ்வொரு பந்தையும் தீவிரத்துடன் ஆடினேன். இன்னிங்ஸ் முழுவதும் அதே தீவிரத்துடன் விளையாடினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜூன் 20-ந்தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

    ×