என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிட்செல் சான்ட்னர்"

    • லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
    • குஜராத் -மும்பை அணிகள் எலிமினேட்டர் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை மோதுகிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2-வது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் நாளை மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் 3-ம் இடம் பிடித்த குஜராத், 4 -ம் இடம்பிடித்த மும்பை அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை (மே 30) மோதுகிறது.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பயிற்சியின் போது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட், சக வீரரான மிட்செல் சான்ட்னர் மாதிரி சுழற்பந்து வீசினார். அருகில் இருந்த பும்ரா இதனை சிரித்தப்படி பார்த்துக் கொண்டிருந்தார். கிட்ட தட்ட அவரே மாதிரி போல்ட் பந்து வீசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மிட்ச் ஹே மற்றும் நாதன் ஸ்மித் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.

    இதனையடுத்து நியூசிலாந்து அணி தற்சமயம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இத்தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணியானது மீண்டும் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.

    இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் கிளென் பிலீப்ஸ், லோக்கி ஃபெர்குசன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், இஷ் சோதி, ஹென்றி நிக்கோலஸ், வில் யங் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    மேற்கொண்டு இந்த அணியில் மிட்ச் ஹே மற்றும் நாதன் ஸ்மித் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் கேன் வில்லியம்சன், மேட் ஹென்றி, டாம் லேதம், டேரில் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோருக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, லோக்கி ஃபெர்குசன், சாக் ஃபோல்க்ஸ், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மிட்ச் ஹே, ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், டிம் ராபின்சன், நாதன் ஸ்மித், இஷ் சோதி, வில் யங்.

    • லீக் போட்டியின் போது இந்தியாவுக்கு எதிராக நாங்கள் கடும் நெருக்கடியை கொடுத்தோம்.
    • ஒரே அணியாக இணைந்து எதிரணியின் மீது நெருக்கடி செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 9-ந் தேதி மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த தொடர் முழுவதும் நாங்கள் நல்ல அணிகளால் கடும் சவால்களை எதிர்கொண்டோம். இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே விளையாடி நல்ல அனுபவத்தை பெற்றிருக்கிறோம். மீண்டும் அவர்களை சந்திப்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடியுள்ளது. அதனால் பிட்ச்சை நன்கு அறிந்திருப்பார்கள். லாகூர் மைதானத்தை விட துபாய் பிட்ச் சற்று மெதுவாக இருக்கலாம். இது சவாலின் ஒரு பகுதியாகும்.

    ஒரே அணியாக இணைந்து எதிரணியின் மீது நெருக்கடி செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம். அணியில் 4 ஸ்பின்னர் இருப்பதால் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. துபாயில் நாங்கள் ஏற்கனவே விளையாடியிருக்கிறோம். அந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் கடும் நெருக்கடியை கொடுத்தோம்.

    இதன் மூலம் அவர்களை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறுதி போட்டியில் டாஸ் வெல்வதும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என மிட்செல் சான்ட்னர் கூறினார்.

    • சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு சிறந்த அணியை உருவாக்கி ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
    • பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை.

    துபாய்:

    பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த தொடரில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு சிறந்த அணியை உருவாக்கி ஐ.சி.சி. அறிவித்துள்ளது. சான்ட்னர் தலைமையிலான அந்த அணியில் 6 இந்திய வீரர்கள் (12-வது வீரராக அக்சர் படேல்), 4 நியூசிலாந்து மற்றும் 2 ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

    பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை.

    ஐ.சி.சி.-தேர்வு செய்த அணி விவரம்:

    ரச்சின் ரவீந்திரா, இப்ராகிம் சத்ரன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், கிளென் பிலிப்ஸ், அஸ்மத்துலா ஒமர்சாய், மிட்செல் சாண்டர் (கேப்டன்), முகமது சமி, மேட் ஹென்றி, வருண் சக்ரவர்த்தி.

    12-வது வீரர்: அக்சர் படேல்

    ×